Monday, January 25, 2010

[vallalargroups:2601] Vallalar Core Concept - "ஆன்ம நேயம்"

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி 
 
எல்லா  உயிர்களும் இன்புற்று  வாழ்க  !!
 
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

 

"எல்லா உயிர்களும்இன்புற்று வாழ்க "என "மனிதநேயத்தையும்" ஒரு படி கடந்து "ஆன்மநேயத்தை"  உலகிற்கு  அற்புதமாக எடுத்து காட்டியவர் வடலூர் இராமலிங்கசுவாமிகள் என அழைக்கப்படும் "திரு அருட்பிரகாச வள்ளலார்"  

  • எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டுவது "மனித நேயம்"
  • எல்லா உயிர்களிடமு அன்பு காட்டுவது "ஆன்மநேயம் "
 
ஆம் . ஆன்மநேயமாகிய , இந்தஉயிர்உறவை (அதாவது உயிர் இரக்கத்தை )கொண்டே எல்லாம்வல்ல  இறைவனின் திருவருளை பெறமுடியும்எனவும், வேறுஎந்த வழியாலும் பெறகூடாது எனவும் , வேறு எந்த வழியும் இல்லை எனவும், இதற்கு வேறு பிரமாணம்(அதாவது வேறுவழி ) வேண்டாம் எனவும், உறுதியுடன் கூறுகின்றார் .

 

இந்த ஆன்ம நேயத்தை வலியுறுத்தி, திருவருளால் இயற்றிய "திரு அருட்பாவில்" பல இடங்களில் கூறிப்பிட்டுள்ளார்.

 
 
  •  தனித் திருஅலங்கல் பகுதியில்,
    "எவ்வுயிர்த்திரளும் என்னுயிர் எனவே   எண்ணி நல்இன்புறச் செயவும்
    அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை  அகற்றியே   அச்ச நீக்கிடவும்" எனவும், 
      
  • "அருள்விளக்கமாலை" பகுதியில்
    "உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள்  எல்லாம்  உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் "  எனவும், 
     
  • மற்றுமொரு பாடலில், "உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " எனவும், 
     
  • தனித் திருஅலங்கல் பகுதியில்,
    "எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்"  எனவும், 
     
  • மற்றுமொரு பாடலில், "கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு" எனவும், 

·         மேலும், மற்றுமொரு பாடலில்,

"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி
உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்"
எனவும்,
 
 
·                     மேலும் ,பிள்ளைச்சிறுவிண்ணப்பத்தில்,
 
மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிதெனினும்
கண்ணுறப்பார்த்தும் செவியுறக்கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல்வரந்தான் நல்குதல் எனக் கிச்சை எந்தாய் என கூறுகின்றார்.
 
அதாவது , வள்ளலார் எல்லா உயிர்களும் தம் உயிர் போன்றதே எனவும் , நாம் எத்துணையும் மற்ற உயிர்களிடம் பேதம் பார்க்ககூடாது எனவும், பிற உயிர்களின்  துன்பத்தை கண்ணால் பார்த்தபோதும் , காதால் கேட்ட போதும்,ஒரு கணமும்  தாமதிக்காமல் அந்த உயிரின் அச்சத்தை நீக்க வேண்டும் என மனிததேகம்  பெற்ற நம்மை வலியுறுத்துகின்றார். இந்த பேதம் இல்லாமல் வாழும்  உத்தமர்களின்  உள்ளத்தில் "இறைவன் திருநடம் செய்கின்றான்" என  உத்தமர்களை , வள்ளலார் அடையாளம் காட்டுகின்றார்.
 

 

Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)