Friday, January 8, 2010

[vallalargroups:2548] தை பூசம் விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

தை பூசம் விளக்கம் 

நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை 
ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..
காரணம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்
ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம் 
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் 
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் 
இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து 
அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.
அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு, 
சூரியன் என்பது ஜீவ அறிவு
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி 
சூரியன் அக்னியில் அடங்கி
அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே 
தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி
ஜீவன் ஆன்மாவில் அடங்கி
ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்
என்பதை காட்டவே தை பூசம் 
நமது வள்ளல் பெருமானால்
அளிக்கப்பட்டது.
மேலும்
தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம்
மட்டுமே உண்மை தத்துவமாக 
வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில்
ஏற்படுத்தப் பட்டன.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

1 comment:

  1. தை பூசம் வடலூர்(2012)
    பிப் 6 கொடியேற்றம்
    பிப் 7 ஜோதி தரிசனம்
    பிப் 9 சித்திவளாகம் திறப்பு!!

    கூட்டம் அதிகமாக இருக்கும். சுத்தம் காக்க நம்மால் முடிந்த பணி செய்வோம்!!பிளாஸ்டிக் குப்பைகளை அதிகம் சேராமல் பார்த்து கொள்ளவேண்டும் !!

    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)