Tuesday, January 19, 2010

[vallalargroups:2586] பிராணிகள் பேசுகின்றன - "ஆடு" ஆகிய எங்கள் அவல நிலையை பாருங்கள்

Ella Uyirgalum Inbutru vazga

Dear All,




உங்கள் இல்லங்களில் எங்களை வளர்ப்பது கசாப்பு கடைகாரனுக்கு விற்று பொருள் சம்பாதிக்கவே வளர்கின்றீர்கள். பொருள் பேராசையால் , வள்ளலார்  கூறும்    "உண்மை அன்பு" இல்லாமல், நெஞ்சில் வஞ்சம்  வைத்து பரிவு காட்டுவது போல் நடிகின்றீர்கள்.  
"வஞ்ச மனத்தில்  வசியாத பாதம்" என வடலூர்  இராமலிங்க  சுவாமிகள்  தனது பாடலில்  கூறி உள்ளதை , இங்கு சிந்த்தனை செய்யுங்கள்.
 
எங்களுக்கு நீங்கள் போதுமான உணவு கொடுக்காததால், நாங்கள் வீடு, வீடாக சென்று    அங்குள்ள கொடிகளை உண்டு உடல் வளர்க்க போகும் போது அங்குள்ளவர்கள் தடியாலும் கற்களாலும் அடிக்கும் அடிகளை தாங்கி கொள்கிறோம்? ஏன்? எங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டி  வாழ நினைகின்றோம். இப்படி எல்லாம் பாடு பட்டு உடம்பை வளர்த்தால்  நீங்கள்  இறைச்சி கடைகாரனுக்கு விற்று பொருள் ஈட்டுகின்றீர்கள். இந்த பணத்தினால் உங்களுக்கும் , உங்கள் குடும்பங்களுக்கும் மற்றும்  உங்களை சார்ந்தவர்களுக்கும்   தீமை பயக்குமே தவிர நன்மை ஏற்படாது.

ஐந்தறிவு உடைய நாங்கள் , சைவ உணவு சாப்பிட்டே உடம்பை வளர்த்து "சாத்வீக" தன்மையுடன் வாழ்கின்றோம். ஆறறிவு படைத்த நீங்கள், ஏன் "எங்களை கொன்று தின்று கடவுளின் இயற்கை விளக்கத்தை நீங்களே மறைத்து கொள்கின்றீர்கள்?"   மனித தேகம் பெற்றவர்களால் தான்  கடவுளின்  "இயற்கை விளக்கத்தை" பெற முடியும்.வடலூர்  இராமலிங்க  சுவாமிகள் , பிற உயிர்களை கொன்று தின்பவர்களுக்கு  "கடவுளின்   இயற்கை விளக்கம்"   அகத்திலும் , புறத்திலும்  வெளிப்படவே  மாட்டது என்று கூறுகிறார்கள்.  
"தீவினையின்றி ஈட்டல் பொருள் " என்றனர் சான்றோர். இதனை எல்லாம் சிந்தனை செய்வீர்களாக ...  


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)