Wednesday, June 2, 2010

Re: [vallalargroups:3062] " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

  • அருள்                 - கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு
  • சீவகாருணியம் - ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது  ஆன்மாக்கள் தயவு.
  • ஒருமைக் கரணமாகிய - சிறிய விளக்கத்தைக்
  • சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம்
சன்மார்க்கத்தில் , அறிவு எப்போது விளங்கும்?
சன்மார்க்கத்தில் , அன்பு எப்போது விளங்கும்? 
ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் ,அன்பும் உடனாக நின்று விளங்கும்.
 
 
1.      "அருளை" எதனாற் பெறக்கூடு மென்றறிய வேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினாற் பெறக்கூடும் என்றறியவேண்டும்.
 
 

2.      சீவகாருணிய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடு மென்பது எப்படியென் றறியவேண்டில்:-

அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு.
சீவகாருணிய மென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு.
இதனால்
, ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் கூடும். சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல்போல என்றறிய வேண்டும்.
 
 

3.      இதனால் சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்றறியப்படும்.

சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்
; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
 
 

4.      சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத்தீமைகளுந் தோன்றும்.

 
 

5.      ஆகலில் புண்ணியமென்பது சீவகாருணிய மொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமை யொன்றே என்றும் அறிய வேண்டும்.

 
 

6.      அன்றி, சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகாலறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்ற முத்தர்களென்றும், அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்க ளென்றும் சத்தியமாக அறியவேண்டும்.

 
 
2010/5/29 uyir b.r. <uyir73@yahoo.com>
 
DEAR UYIR,
 
                        WHAT IS THAT GRACELIGHT? WHERE IT IS ? HOW IT IS? WHY IT IS? PLEASE DISCUSS SIR? WHY ARIVU IS USED BY THE GRACELIGHT WHY NOT OTHER THINGS? WHAT IS THE CONNECTION BETWEEN ARIVU AND OURSELF AND WITH THE ALMIGHTY?
 
WITH REGARDS,
 
UYIR.
 

From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Sent: Fri, May 28, 2010 12:58:29 PM
Subject: [vallalargroups:3053] " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?
 
 

Question

" சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

விடை

வள்ளலார் எழுதிய சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து...,

அறிவென்பது ஒரு சிறிதும் தோன்றாத   அஞஞானம்   என்னும் பெரிய பாசாந்த காரத்தில் , நெடுங்காலம் சிற்றணு பசுவாகி , அருகி கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து,அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து , எல்லா பிறப்பு உடம்புகளிலும் , உயர்வுடையதாகிய,

ஆறறிவுள்ள இம் மனித பிறப்புடம்பில், சிறிது அறிவு விளங்க செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணை திறத்தை 

எங்ஙனம் அறிவேன் ?

எவ்வாறு கருதுவேன் ?

என்னென்று சொல்வேன் ?

 

Conclusion

எனவே , வள்ளலாருக்கு மனித பிறப்பு உடம்பில் அமைவதற்கு முன்னே , பெரிய பசாந்த காரத்தில், நெடுங்காலம் "சிற்றணு" பசுவாகி அருகி கிடந்துள்ள போது ..., அடியேனுக்குள் "உள்ளொளியாகி" இருந்து...

 
என
 குறிப்பிடுவதால், மனித பிறப்புக்கு முன்னரே, " சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை  ஆட்கொண்டு  விட்டார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

With Grace of Satguru Vallalar

  
Ref: PLease see vallalar written "sathya peru vinnappam" attachment for more details...
 
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
  
To change the way you get mail from this group, visit:
  
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
  
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
 
--
 
 
 
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)