Wednesday, June 23, 2010

[vallalargroups:3196] வள்ளலார் "இறைவனால்" வருவிக்கவுற்ற வந்தவர் ..

இது மேட்டுக்குப்பத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் உண்மையான சன்மார்க்க அன்பர் தயவுதிரு .K.P.சேதுராமன் ஐயா அவர்கள் கூறியது ...
 
 
1.வள்ளலார் "இறைவனால்" வருவிக்கவுற்ற வந்தவர்  .. 

2.வள்ளலார் தனது இளமை கால வாழ்கையில் , எந்த ஒருவரையும் பிரிக்க விரும்ப வில்லை . அதனாலேயே , சன்மார்க்கத்தை சைவத்தோடு இணைத்து கொண்டு வர முயற்சி செய்தார்கள். அந்த கால கட்டங்களில்,சமய ஆசாரங்கள் நிறைந்து இருந்தன.  

3.முதல் ஐந்து திருமுறைகளிலும் , சன்மார்க்க கருத்துக்களை பிண்ணி வைத்துள்ளார்கள்.பெருமானுக்கு சைவத்தில் , உயர்ந்த ஆன்மாக்கள்  இருந்து வந்ததாலும்அனைத்து சன்மார்க்க கருத்துகளையும் "சைவம்" மூலம் வெளி படுத்த விரும்பினார்கள்.  

4.பெருமான் மேற்பார்வையிலே , முதல் நான்கு திருமுறைகள் , தொழுவூர்.வேலாயுத முதலியார் வெளியிட்டார்கள். எனவே , முதல் நான்கு திருமுறைகள் பெருமான் சம்மதத்துடன் உடனே , வெளியாகி உள்ளன.
 
5. ஆனால், அதனை சைவ பெருமார்கள் முழுமையாக ஏற்கவில்லை.
 
6.பழைய மார்கங்களில் , ஒவ்வொருவரும் செய்த வினையை   அனுபவித்து தான் மேலே ஏற வேண்டும் என்ற கருத்து இருந்தது.. அனைவரும் வினையை கழிக்க வேண்டும் . அதற்கு அடுத்த தடுத்த  தேகங்களை எடுக்க வேண்டும் என்ற வரையறை இருந்தது.
 
7.அதனை முதல் முதலாக ,உடைத்து எறிந்தவர்  நமது  அருட் ப்ரகாச வள்ளலார். 
 
8.வள்ளலார் , இந்த வினையை , "ஜீவகாருண்ய ஒழுக்கத்தின்"(தயவு) மூலம் தடுத்து கொள்ள முடியும் என ரகசியத்தை  கொடுத்தார்கள். 
 
9. ஆறாம் திருமுறையில் , அதிக தாக்கத்துடன் கொடுத்தார்கள். அன்றைய நாட்களில் , வள்ளலாரின் ஆணை காரணமாக வெளியிட வில்லை.  
 
10.அந்த காலத்தில் சமயங்களை சார்ந்தவர்கள் , வள்ளலார் கொள்கைகளை ஏற்று கொள்ளாத காரணத்தினால் , வள்ளலார்,"தாம்" வந்த வழிக்கு தனிமார்கத்தை ஏற்படுத்தினார்கள்.
 
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை எனவும்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை எனவும் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான பாட சாலை எனவும் ...
 
சமய 
பெயர்களை நீக்கி, சன்மார்க்க பெயர்களை வைத்தார்கள்.
 
 11.வள்ளலார் படிகள் மேல் ஏற ஏற , தான் அடைந்த வழியினை  மக்களுக்கு  எப்படியாவது கொடுக்க  வேண்டும் என முயற்சி   செய்தார்கள். 
 
12.மக்களுக்கு புரியாத காரணத்தினால் , "அருட்பெருஞ்சோதி அகவல்"  கொடுத்தார்கள்..வள்ளலார்  எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை.
 
13.மீண்டும் , வள்ளலார் , சித்தி வளாகத்தில் , உண்மையை தெரிவிக்க, சன்மாக்க கொடி கட்டிய பின் ,"மஹா உபதேசத்தை" உபதேசித்தார்கள். தான் வந்த வழியை  இந்த  மஹா  உபதேசத்தில் ,   உபதேசித்தார்கள். வள்ளலார் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை.
 
14.கடைசியாக , "மரண பயத்தை" உண்டு பண்ண செய்தார்கள்இதனை "ஞான சரியை " என்ற  தலைப்பின்  மூலம் பாடல்களை  கொடுத்து விட்டு அனைத்து ஆன்மாக்கள் -லிடமும் புகுந்து விட்டார்கள்...
 
வள்ளலார் அனைத்து திருமுறைகளிலும் "தயவு" என்ற நுட்பத்தின் மூலம் , இறைவனை மிக எளிதாக 
அடைய முடியும் கூறி விட்டார்கள்.


If anyone have dobts on above statements, please contact mettukuppam .sethuraman ayya - 098426-81522




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)