Wednesday, June 16, 2010

Re: [vallalargroups:3158] தெய்வ மணி மாலை - 2

Blessed Immortal Soul,

I am extremely privileged to receive your beautiful explanation on Deivamani malai.

It is totalling about 31 stanzas.

According to Saiva doctrine 31 denotes vidya tatwa.

Vallalat specially sung these songs for those who are insearch of ultimate reality.

If we persue from here we can achieve our ultimate goal of immortality.

For a long journey this is a first step.

Pls give explanation to all the stanzas .

Once again thank you.

With prem and om
anand

2010/6/14 murugaraj g <g.murugaraj83@gmail.com>
திருவருட்பா
மூலமும் உரையும்


தெய்வ மணி மாலை - 2


பரமேது வினைசெயும் பயனேது பதியேது
பசுவேது பாச மேது
பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது
பாவ புண்ணியங்க ளேது

வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை
மனம்விரும் புணவுண்டு நல்
வதிர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர் சூடி விளையாடி மேற்

கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரோடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனேனுங்
கயவரைக் கூட தருள்

தரமேவு சென்னையிற்கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
மேன்மை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே , தூய மணிகளுட் சைவ மணியாம் சண்முகத் தெய்வமணியே, பரம் என்பது யாது ? வினையாவது யாது? வினியின் பயன் என்பது யாது ? பத்தி, பசு, பாசம் என்பன யாவை? பத்தியாவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது ? அருள் என்பது யாது ? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைபடுகின்ற உணவையுண்டு, நல்ல ஆடையுடுத்து இலமகளிரை நாடி யடைந்து மணம் வீசும் பூக்களைச் சூடிப் பலவகையாக விளையாடி . கைகளை அம்மகளிர் மேற்செலுத்தி அவர்களுடைய முலையைப் பற்றி மெய்யோடு மெய்கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்; இதுவே, வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதாவாறுஅருள் புரிவாயாக





முருகராஜ்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
Kindness is the language that the blind can see the deaf hear.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)