பசித்திரு தனித்திரு விழித்திரு
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் திபாவளி நல் வாழ்த்துகள்!
அன்பர்களே ஒரு ஊரில் அடர்ந்த காடு அந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலம் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார் மற்றும் உடல்நலம் இல்லாத மிருகங்களுக்கு தன் தவ வலிமையால் மூலிகைச்சாறு கொண்டு மருத்துவம் செய்வார் இதனால் கொடிய குணம் கொண்ட புலி சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் அந்த ஞானியை தினந்தோறும் அவரை துதித்து செல்லும்,
இப்படி நடந்துகொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மண்ணன் வேட்டை என்ற பெயரால் காட்டில் வாழும் விலங்குகளையெல்லாம் கொன்று குவித்துவந்தார் இப்படி காட்டில் வாழும் மிருகங்களின் எண்ணிக்கை குறைய குறைய காட்டில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது மனிதர்கள் எல்லாம் அங்கேயே வீடுகட்டிக்கொண்டும் காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விற்பனைசெய்தும் மற்றும் முயல் மான் போன்ற சாதுவான பிராணிகளை கொன்று புசித்து கொண்டும் வாழத்துடங்கினார்கள் காடு மெல்ல மெல்ல அழியதொடங்கியது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது அப்பொழுது சைவஉணவையே உண்டுவாழும் ஒருமுயல் குட்டி தவம் செய்துகொண்டிருந்த முனிவரின் முன் வந்து கை கட்டி நின்றது நிஷ்டை முடித்த முனிவர் முயல் குட்டியை பார்த்து நலம் விசாரித்தார் ஐயா இவர்கள் எல்லோரும் எண் போன்ற சாதுவான முயல் மான் போன்ற பிராணிகளை கொன்று புசிக்க தொடங்கிவிட்டார்கள் அதனால் நாட்டில் எங்குபார்த்தாலும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது இதற்க்கு தாங்கள் தான் ஒரு உபாயம் செய்யவேண்டும் என்றது முயல் இதை கேட்டமாத்திரத்தில் முனிவரின் கண்களில் நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது, முனிவர் இதை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் அப்பொழுது காயப்பட்டு நலிந்த உடலோடு ஒரு நரி அவ்வழியாக வந்துகொண்டிருந்தது இதை கவனித்த முனிவர் அந்த நரியை தன் அருகில் அழைத்து அதற்க்கு மருந்து போட்டு குணப்படுத்தினார் தன் உடல் பூரணம் குணம் அடைந்த நரி முனிவரை பார்த்து ஐயா நான் இப்பொழுது என்னசெய்யவேண்டும் கூருங்கள் என்றது நிதான் தந்திரத்தில் சிறந்தவன் ஆயிற்றே பக்கத்து நாட்டில் வசிக்கும் மன்னனிடம் சென்று தந்திரமாகபேசி காட்டில் சக்திவாய்ந்த முனிவர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்றால் சிறிய நாட்டை ஆளும் தாங்கள் பேராசனாக வாழாலாம் என கூரு என்றார் முனிவர் அப்படியே செய்கிறேன் என்று முனிவரிடம் விடைபெற்ற நரி நாட்டை நோக்கி புறப்பட்டது ,
அரண்மனையை வந்தடைந்த நரியானது வாயிலில் நிற்கும் காவலாளியை பார்த்து ஐயா நான் வெகுதொலைவில் இருந்து வருகிறேன் ஒருமுக்கியமான செய்திகொண்டுவந்துள்ளேன் மன்னரை அவசரமாக பார்க்கவேண்டும் என்றது அதற்கு காவலாளி பக்கத்து அறையில் தான் மன்னர் உள்ளார் ஆகையால் நீர் சீக்கிரம் செய்தியை கூறி வா என்று மன்னர் இருக்கும் இடத்தை காண்பித்தார் நரியானது உள்ளே சென்று முனிவர் கூறிய செய்தியை மன்னரிடம் கூரியது நரிகூரிய செய்தியை கேட்டமாத்திரத்தில் பேராசை கொண்ட மண்ணன் காட்டிற்கு நரியுடன் புறப்பட்டான் மண்ணன் வருவதை உணர்ந்த முனிவர் மன்னனுக்கு நற்சிந்தைனை வர அவன் வரும்போதே அவனுக்கு வியாதியை வரவழைத்தார் வியாதியால் அவதிப்பட்ட உடலோடு முனிவர் இருப்பிடத்தை அடைந்தான் மண்ணன், முனிவரை பார்த்து மண்ணன் தபோசிலரே எனக்கு காய்சல் வந்துவிட்டது என்னால் எப்படி பக்கத்துக்கு நாட்டோடு போரிட்டு ஜெயிக்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே முனிவரின் காலில் விழ்ந்து வணங்கினான் முனிவர் மண்ணனை பார்த்து நீங்கள் காட்டில் வாழும் முயல் மான் போன்றவற்றின் இறைச்சிகளை உன்பிர்களா என்று கேட்டார் ஆமாம் என்ற பதிலை முனிவரிடம் மண்ணன் கூறினான் அதுதான் உங்கள்வியாதிக்கு காரணம் ஆகவே இன்று முதல் நீங்கள் சைவ உணவையே அருந்திவாருங்கள் நீங்கள் முன்பிருந்ததை விட அதிகபலம் வாய்ந்தவராக விளங்குவீர்கள் என்றார் முனிவர் மன்னனும் முனிவர் கூறியதுபோல் சைவ உணவையே உண்டு மகாபலம் வாய்ந்தவனாக விளங்கினான் மற்றும் பல நாடுகளை தன் வீரபராக்கிரமத்தால் வென்று பேரரசனாக வாழ்ந்து வந்தான்
எனவே அன்பர்களே நாமும் சைவ உணவையே உண்டு பிற உயிர்களிடத்தில் சகோதர பாசத்தோடு வாழ்ந்து வந்தால் நமது இறைவன் நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை ஆகவே ஜீவகாருன்யத்தோடு வாழ்ந்து நமது வாழ்க்கையை செம்மைபடுதிகொள்வோம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment