Wednesday, October 7, 2009

[vallalargroups:2253] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு

                                                                   

                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                                    

             தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி                         

 

கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின்  திறவுகோல்

                       
                       பசித்திரு             தனித்திரு             விழித்திரு                 
  

                     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு,
 
 
ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம்,
 
தயவு உள்ளம் கொண்ட தயவாலர்களே  நீங்கள் குழ்ந்தை பருவமாக  இருந்தபோது  யாதொரு அற்ப்ப சிந்தனைகளின்றி சந்தோசமாக இருந்தீர்கள்  இவற்றில்  யாதொரு சந்தேகமும்  இல்லை.இருந்தாலும் அந்தபருவகாலத்தில் ஒருசில சம்பவங்கள்  உங்களை  தாக்கியிருக்கும்,
இயற்கையிலே  குழ்ந்தை பருவத்தில்  சந்தோஷம் நிரம்பியதாக  இருந்தாலும்கூட அவர்கள் யாவரும் தன்னிசையாக செயல்பட முடியாது. தம்மை ஈன்ற தாய் தந்தையர்களின் கட்டுப்பாட்டில்  வாழும் சுழ்நிலையில்  அவர்கள் உள்ளார்கள் .
இங்கே இரண்டு குழைந்தைகள்  எப்படியுள்ளது என்பதை பார்த்தால் உங்களுக்கு புரியும்  ஒரு குழ்ந்தை  உடல்ரீதியாக  காயப்பட்ட  வேதணைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது, ஆனால் ஆரோக்கியமான பல குழைந்தைகள் சோகத்துடனும் வருத்தத்துடனும்  இருக்கிறார்கள் ,இது  குழ்ந்தைகளின் இயற்கையான  சுபாவம்  அல்ல அவர்கள் முன் ஜென்மத்தில்  செய்த செயல்கள்தான் இதற்கு காரணம்  அப்பொழுது உங்களை பற்றியிருந்த முன்ஜென்மபாப விணைகள் மற்றும் நமது வள்ளல் பெருமான் கூறுவது போல் தெய்வசிந்தனை  மற்றும் ஜீவகாருண்யம்  இல்லாமல்  வாழ்ந்ததுதான் அதற்க்கு காரணம்,
எனவே ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும்  அவனை சந்தோசம் அற்ற நிலையில்  வைத்திருக்ககூடிய பலவிதமான முன் ஜென்மபதிவுகள் உண்டு. அவன் இதை உணரும் வகையில் செயல்பட்டிருக்கலாம்  அல்லது செயல்படாமல்  இருந்திருக்கலாம்  உங்களை சுற்றி  நடக்கும் அநாகரிக  செயல்களோ அல்லது உங்கள் முன்ஜென்ம பதிவுகளோ  எதுவோ ஒன்று உங்களை செயல்பட துண்டுகிறது 
எனவைத்துகொல்லுங்கள்  அதை உங்கள் வாழ்வில் நடைமுறைபடுத்திகொள்வதும்  கொள்ளாததும்  உங்கள் விருப்பம்தான்  நீங்கள் போதுமான  விழிப்புணர்வுடனும் தெய்வசிந்தனையுடனும் பிற உயிர்களிடத்தில் அன்பு கொண்டவராக  இருந்தால்  உங்கள் வாழ்க்கை  அருட்பெரும்ஜோதி ஆண்டவரின்  கருணையோடு  நீங்கள்  ஆனந்தமாக  வாழ்வதில் ஐயமில்லை.
 
மற்றும் இந்த உலகில்  சந்தோசம் இல்லாதவர்கள்  எவரும் இல்லை,இந்த பூமியில்  கிடைக்கும் சிற்றின்பங்கள் அனைத்தையும் அனுபவிக்காத  உயிர்கள்  என்று எதுவும் இல்லை  ஒவ்வொரு  ஜீவனும்  உலகியல் நடைமுறையில்  உள்ளபடி  வாழ்ந்துகொண்டிருகிறார்கள்  ஆனால்  உங்களது உடல் மனம்   மற்றும் உணர்வுகளின்  செயல்பாட்டில் நீங்கள் சிக்கிகொண்டால் தாங்கள் ஆனந்தமாக இல்லாமல்  இருப்பதற்கு  லட்சகணக்கான  காரணங்களும்  உங்களுக்கு வழிவகை  செய்துவிடும்  எனவே அன்பர்களே  கடந்த காலத்தில்  விரும்பத்தகாத  சம்பவங்களை  நினைத்துகொண்டிருந்தாலோ  அல்லது வருங்காலத்தில்  விரும்பத்தகாத  விளைவுகளை  தரும் செயல்களை  இப்பொழுது  நீங்கள் செய்துகொண்டிருந்தாலோ  உங்களால் சந்தோசமாக இருக்கமுடியாது  நீங்கள் சந்தோசமாக  வாழ்வேண்டுமானால்  நமது இறைவன் ஒளிகடவுள்  அருட்பெரும்ஜோதியை  நீ தினமும் வணங்கிவா, பிற உயிர்களின் பசியைபோக்கு  ஜீவநேயம் கொள், அப்பொழுது உணக்குள்   இருக்கும் கடவுள்  தானாக வெளிப்பட்டு  உன்னை சர்வவல்லமை  உடையவனாக செய்விப்பார்  அதுவே நமது வள்ளல் பெருமான் காட்டிய வழியும் கூட  எனவே அன்பர்களே  ஒவ்வொரு  தயவாளர்களும்  ஜீவகாருண்ய  சிந்தனையோடு  வாழ்ந்து  நாம் நம் வாழ்வில் உயர்வடைவோமாக!
 
பசித்தவருக்கு உணவு கொடு  அதுவே ஜீவகாருண்யம்
கொல்லா விரதம்  குவலயம்மேல்லாம்  ஓங்கட்டும்
 
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்,
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ,34,அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்  
ஜமின் பல்லாவரம்
சென்னை -600 043
கைபேசி எண்.9940656549
 
 
 


Now, send attachments up to 25MB with Yahoo! India Mail. Learn how
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)