Tuesday, October 6, 2009

[vallalargroups:2243] Re: ஜீவகாருண்யம்

Inbutru Vazga,
Dear Mohan Kumar , 

Your Question is Correct.. For your question vallalar has given very clear answer.
First of all , we should belive only Our Guru Ramalinga Swamigal words only.
Don't consider (மலம் உள்ளவர்கள் வார்த்தைகளை . ஏனெனில் , மலம் உள்ளவர்கள் வார்த்தையில் மலம் (குற்றம்) இருக்கும் . )
நமது வள்ளலார் , மலத்திலிருந்து முற்றிலும் நீங்கியவர். 
எனவே , நாம் முதலில் வள்ளலார் கூறிய கருத்துக்களை தெரிந்து கொண்டால் குழப்பத்தில் இருந்து எளிதாக விடுபடலாம்.  
 

Your Question is :
I would like to know eating plants and leaves and killing of its life is sinful or not.

 

ANSWER in ENGLISH:

  1. If you cut your hair and nail, you would not get any pain.
  2. Because hair - body attachment and nail - body attachment is like that.
  3. Likewise if you cut plants it would not suffer.
  4. A plant does "not have MANAM(MIND)". But Animals "has MANAM".
  5. Through the MANAM only ANMA(SOUL) receiving happy and sorrow.
  6. So Plants won't receive happy and sorrow when you cut.
  7. Please read JEEVAKarunaya olukkam.

 Question in TAMIL : மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே,அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ? அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோ கரண சந்தோஷமல்லவோ ?

 

Answer in TAMIL:

  • வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும்,
  • தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல;
  • துன்ப முண்டுபண்ணுவது மல்ல;
  • அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது.
  • அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவ விளக்க சகிதமான கடவுள் விளக்கமே யாகுமென்று அறியவேண்டும்.
 
 Anbudan,
Karthikeyan


2009/10/6 balamurugan d <to.dbala@gmail.com>


Dear Mohan Kumar , 


  Please do not believe the non-vallalar devotee's concept.

You must read  Vallalar's Jeevakarunya vilakam.

Explanation is also there.

         

 

புலி சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு சீவனைக் கொன்று தின்று தாமச ஆகாரத்தால் பசியாற்றித் திருப்தி இன்பத்தை யடைந்து சந்தோஷ'க்கின்றன; அந்தச் சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏக தேசமும் சீவன் இயற்கைவிளக்க நிறைவும் என்று கொள்ளக்கூடாதோ என்னில்:- கூடாது. தாமச ஆகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கைவிளக்க ஏகதேசமும் ஏகதேச சத்துவமாகிய ஆன்ம இயற்கைவிளக்கமும் விளங்கா; இருளால் ஒளி விளங்காதது போல். இதைத் தாமச ஆகாரமென்பது. என்னையெனில்:- கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று. இந்த ஆகாரத்தால் வந்த திருப்தி யின்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்க   மென்னில்:- அனாதி பசுகரணமாயாவிளக்கம் என்று அறியவேண்டும். பசு வென்பது என்னை? ஆணவம் மாயை கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது. அப்பசுவிற்கு விளக்கந் தோன்றுவது எப்படியென்னில்:- சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப்பிரகாச விசேஷந் தோன்றுதலால் அவ்விருளும் விளக்கமாக வழங்குகின்றது. அது போல், அசுத்தமாயாகரணங்களும் தாமச குணமும் இருள் வண்ணமுடைய வாயினும் தம்மால் மறைக்கப்பட்ட பரசீவவிளக்க விசேஷத்தால் அசுத்தமாயாகரணமும் தாமசகுணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால், தாமச ஆகாரத்தில் வரும் விளக்கம் அசுத்தமாயாகரண விளக்கமே என்றறியவேண்டும்.

ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே             சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிச   மென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு               செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக்       கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு     மென்று அறியவேண்டும்.

மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி  யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு  கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன     வென்று அறிய வேண்டும்.

முளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.

வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.

ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.


பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்



2009/10/2 Mohan Kumar <kmmoha@gmail.com>

Dear All,
 
I recently read one article about  "ஜீவகாருண்யம்"(attached below the link and also the content). It really confuses me a lot about  "ஜீவகாருண்யம்". Could anyone please give me explanation about this article?  I would like to follow vallalar  "ஜீவகாருண்யம்"principles, so any one write to me about the link or his principles.

 

Thanks

Mohan
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
நீங்கள் சைவமா ?
காந்தியின் புலால் உண்ணாமையை கடைபிடிப்பவரா ?
ஜீவகாருண்ய வாதியா ?
ப்ளூகிராஸ் உறுப்பினரா ?

கண்டிப்பாக உங்கள் மனதை புண்படுத்த இந்த பதிவை நான் எழுத வில்லை.

இக்கருத்தை பலபேர் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பிரித்து மேய்ந்து முன்மொழிந்திருந்தாலும், என்னுடைய இந்த பதிவை ஒரு வழிமொழிதலாக நினைத்துக் கொள்ளவும்.
"எனக்கு பிடிக்காது..உடல் ஒத்துக் கொள்ளாது..எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பழக்கம் இல்லை.அதனால் எனக்கும் பழக்கம் கிடையாது" என ஒரு சில காரணங்களை முன்வைத்து அசைவத்தை மறுப்போர் ஒருபுறம்.
"உயிர்க‌ளைக் கொல்வ‌து பாவ‌ம்.அந்த வாயில்லா ஜீவனை துடிக்கத்‌ துடிக்க‌ வெட்டி கொடுமைப் ப‌டுத்துகிறீர்க‌ளே !!! கொல்லா உயிர்க‌ளெல்லாம் நின்று தொழும்" என்றும் இன்னொருபுற‌ம் வில‌ங்கின ஆர்வ‌ல‌ர்கள்.
"அப்படியானால் தாவரங்களுக்கும் தான் உயிர் இருக்கிறது.தாவரங்களும் வாயில்லா உயிரினங்கள் தான்.அவைகளை மட்டும் கொல்லலாமா?"
என்று வழக்கம் போல ஒரு சாதாரண கேள்வியை, என் சைவ நண்பனிடம் கேட்டேன்.
"தாவரங்களுக்கு 2,3 அறிவுகள் தானே !! பரவாயில்லை.இது ஒரு பெரிய பாவமாகாது..அத கூட சாப்பிடலனா வேறென்னத்த திங்கிறது..அதற்கு தான் நம்மைப் படைத்த இறைவன் தாவரங்களையும் படைத்தான்" என்று மேலோட்டமாக பதிலளித்தார்.

இன்று வரை அது ஒரு முற்றுப் பெறாத விவாதமாகவே தொடர்கிறது.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவைகளுக்கு உணர்ச்சியும் இருக்கிறது.தாவரங்கள் சிலநேரங்களில் அழுகின்றன என அறிவியல் கூறுகிறது.
அது மனித செவிகளுக்கு கேட்காமலிருப்பதன் காரணம், 20Hz ஐ விட குறைவான ஒலி அதிர்வெண்களால் ஆனது அந்த அழும் ஓசை.20Hz முதல் 20000Hz வரை தான் நமக்கு ஸ்பீக்கர்கள் வேலைசெய்யும். ஆனால் நாய் போன்ற பிற பிராணிகளால் இந்த ஓசையைத் துல்லியமாக கெட்க முடியும்.

இதுமட்டுமின்றி, தாவரங்கள் பசிக்காக அழும் ஓலியை மனித செவிகள் கேட்கும் வண்ணம் (amplify) மாற்றியமைக்கும் கருவியை ஒரு விஞ்ஞானி கண்டு பிடித்திருக்கிறார்.

ஆகவே !! உயிர்கள் என்ற அடிப்படையில் மனிதனோ,விலங்குகளோ,தாவரமோ !!! அனைத்தும் சமம் தான். "நான் சைவம்,வெஜிடேரியன்.நான் தான் ஜீவகாருண்யத்தை சரியாக கடைபிடிக்கிறேன்" என்று யாராலும் கூற முடியாது.

நீங்கள் சுவாசிக்கும் போது எத்தனை மில்லியன் நுண்ணுயிர்கள் பலியாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? நாம் உயிர் வாழவே பல்லாயிரக்கணக்கான பிற உயிர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத தர்மம்.
என‌வே, இதுவரை நான் எந்த உயிரையும் கொன்றதே கிடையாது என்று யாரும் வாதிடவும் முடியாது.
உயிர்க‌ளைக் கொல்லாமை என்ற க‌ருத்தும் இங்கேயே அடிப‌ட்டு போய்விடுகிற‌து.
 
இதுமட்டுமின்றி, உயிரினங்களின் உடல் கூறுகளில் உள்ள வேறுபாடுகளை
நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.ஆடு,மாடு,மான் போன்ற தாவர (herbivorous) உண்ணிகளின் பல் வரிசைகளிலுள்ள அதிகபட்ச ஒற்றுமை, அவைகளின் பற்கள் அனைத்தும் தட்டையாக, செடி,கொடிகளை அரைப்பதற்கு ஏதுவாக‌ இருக்கும்.இதுவே, சிங்கம்,புலி,சிறுத்தை போன்ற ஊன் (carnivorous) உண்ணிகளின் பற்கூறுகள் யாவும் கூர்மையாகவும் மாமிசத்தைக் குத்தி கிழித்து உண்பதற்கு வாட்டமாக இருக்கும்.மனிதனுக்கு (omnivorous) மட்டும் இந்த இரண்டு வகை பற்களும் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாம் இரண்டு வகை உணவையும் உண்ணலாம் என்று நம்மைப் படைத்தவனிடமிருந்தே வந்த கீரின் சிக்னல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





--
Regards,
Balamurugan.D






--






அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)