Thursday, May 22, 2014

[vallalargroups:5449] மரணமிலாப் பெருவாழ்வு

மரணமிலாப் பெருவாழ்வு


வள்ளலார் - சாகாக்கல்வி பற்றி தேவர் குறளில் சொல்லப்பட்டிருக்கின்றது என்கின்றார்

திருக்குறள் முதல் அதிகாரத்தில் - இறைவனின் திருவடி பற்றி பத்து பாடல்கள் உள்ளன

அப்படியெனில் , சாகாக்கல்வி அறிய வேண்டுமெனில் , திருவடி ஞானம் வேண்டும் என்று புலனாகிறது

இதை அறிந்தே தான் வள்ளலார் , " திருவடிப் புகழ்ச்சி, திருவடிப் பெருமை " என்று எண்ணற்ற பாக்களை படியுள்ளார்

இந்தப் பெருவாழ்வு பெற , சில வழிகள் :

1. திருவடியைக் கொண்டு , பஞ்ச இந்திரிய சக்திகளும் புறத்திலே செல்லும் போக்கை மாற்றி, பிரணவத்துடன் பின்னிப் பிணைந்து இருக்கும் வழியை அறிந்து கொண்டவருக்கு மரணமில்லை

இதனைத் தான் வள்ளலார் , " இந்திரிய ஒழுக்கம் " என்று கூறுகின்றார் - அதையே சைவ சமயம் - " ஓம் நமசிவாய " என்று மந்திர வார்த்தையாக சொல்கின்றது
" ஓம் நமசிவாய " என்பது சிவனைக் குறிக்க வந்த பெயர் அல்ல - அதன் உட்பொருள் - பஞ்ச இந்திரியங்களையும் ஓம்காரமாகிய பிரணவத்தில் சேர்க்க வேண்டும்

இதனைச் செய்வதால் அளப்பரிய நன்மைகள் உண்டாம். அதில் முக்கியமானது - மனம் அடங்கிப்போதல்

முன்னாளில், யார் பஞ்ச இந்திரியங்களின் போக்கை புறத்திலே விட்டிருந்தார்களோ, அவர்களை எல்லாம் , " புறம்போக்குகள் " என்று அழைக்கப்பட்டனர்
அதுவே , பின்னால், மருவி " புறம்போக்கு " என்பது திட்டுவதற்கான சொல்லாக மாறி விட்டது


2. திருவடியுடன், சூக்கும பஞ்ச பூத சக்திகளின் கலப்பினால், தோன்றும் ஒருவித
சூக்கும சிவ அக்கினியை , சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் , மரணமில்லை

சலனமில்லாமல் என்பது மனம் மற்றும் பிராணனின் அசைவு இல்லாமல் என்பதாகும்
அசைவை ஒழிக்க வேண்டும் என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார் - அதனால் தான் " ஆடாதீர் - சற்றும் அசையாதீர் " என்கின்றார்


இந்த சாதனைகளும் , பயிற்சிகளும் , நெற்றிக்கண்ணை திறப்பதற்கும், சாகாத்தலை- வேகாக்கால் - போகாப்புனல் ஆகிய அனுபவத்திற்கு அழைத்து செல்லும்

3. ஆன்மா என்றும் அழியாதது - உடம்பு அழியக் கூடியது - அழியாததை அழியக்கூடியதுடன் சேர்த்து விட்டால் , உடல் என்றும் அழியா நிலையை அடைந்து விடும்
அதனால் ஆன்மாவை உடம்புடன் கலக்கச் செய்ய வேண்டும் - இந்த தேகம் ஆன்ம தேகமாக மாற வேண்டும்

மரணமிலாப் பெருவாழ்விற்கான பயிற்சிகள் :

1. ஓம்காரத்தை அமைக்க வேண்டும்
2. பஞ்ச இந்திரியங்களின் போக்கை மடை மாற்ற வேண்டும்
3. திருவடியை தெரிந்து கொண்டு, அதை பிரயோகிக்கும் முறை தெரிந்து கொள்ள வேண்டும்
4. உடல் , மனம் , பிராணன் அசைவை ஒழிக்க வேண்டும்


இவைகள் எல்லாவற்றையும் எவன் ஒருவன் சாதனைகள் மூலம் சாதிக்கின்றானோ , அவனால் மரணத்தை வென்று வாழ முடியும் என்பது திண்ணம்

இவையெல்லாம் , திருவடி உதவி இல்லாமல் சாதிக்க முடியாது என்பது மட்டும் திண்ணம்

 

 


வெங்கடேஷ்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)