Thursday, May 8, 2014

Re: [vallalargroups:5428] Ozhivil Odukkam - part 2

நல்ல பதிவு.

அன்புடன்
சிவா
பி.கு:  எங்கு வசிக்கின்ரீர் ? சென்னையிலா ? கைபேசி எண் வேண்டும்


2014-05-08 9:24 GMT+05:30 <venkatesh@precot.com>:
ஒழிவில் ஒடுக்கம் - பாகம் 2

தற்போதவொழிவு

1. பக்தியோகமும் கர்மயோகமும்

யோகம் என்றவுடன்
பக்தியோகம் கர்மயோகம்
என்று வகை பிரிக்கின்றோம்
பக்தி மிக எளிது என்கின்றோம்

யோகம் இரண்டாகக் கூறப்பட்டாலும்
இவைகளை அணைத்துச் செல்லும்
அடிப்படை உண்மை ஒன்றே
அதனை

" தற்போதவொழிவு" என்றும்
" சரணாகதி " என்றும்
ஞானியர் அழைக்கின்றனர்

பக்தியோகத்தில்
சாதகன் தன் உடல் பொருள் ஆவியை
தன் உடைமையன்று
" அவனுடையது " என்று
அவன் பொறுப்பில் விட்டுவிட்டு
கவலையில்லாமல் " சும்மா " இருக்கின்றான்

இது எல்லா காரியத்திலும்
சித்தி அளிக்ககூடிய
மிகக் கடினப் பயிற்சி " சரணாகதி "


கர்மயோகத்தில்
உலக விவகாரத்தில் ஈடுபட்டும்
" கர்மங்களிலிருந்து விளையும் போகங்கள் "
தன்னுடையவை அல்லவென்றும்
" யான் எனது " என்னும் செருக்கு அறுத்துவிட்டு
எல்லாம் அவனுக்கும் அர்ப்பணித்துவிட்டு
" சும்மா " இருப்பதுவாகும்


நாதப் பிரம்மம் தியாகராஜர்
யோகத்தின் சிகரத்தைத் தொட்டவர்
ராமனிடம் உடல் பொருள் ஆவியை
சமர்ப்பித்து விட்டு எளிய வாழ்வு வாழ்ந்தவர்

மகளின் திருமணம் பற்றி கவலைப் படாமலே இருந்தார்
எல்லாம் "அவன் பார்த்துக் கொள்வான்" என்று நம்பினார்

அவரின் நம்பிக்கை - சரணாகதி வீண் போகவில்லை

ஜனகரும் யோகத்தின் உச்சத்தைத் தொட்டவர்
ராஜ்ஜிய பரிபாலன பாரம் ஏற்றுக் கொண்டும்
உலக போகங்களில் ஈடுபடாமலும் வீழாமலும்
அதனை அவனுக்கு அர்ப்பணித்து விட்டு
புளியம்பழமும் ஓடும் போல வாழ்ந்தவர்


"சரணாகதி" என்பதுவும்
" தற்போதவொழிவு" என்பதுவும்
அருள் முன்னிலையில் " தான் இல்லை " எனவும்
தேக ஜீவ போக சுதந்திரங்கள்
என்னுடையது அன்று
" அவன் சுதந்திரம் " என்று விட்டுவிடல் ஆகும்

தற்சுதந்திரத்தை விட்டு வாழ்வது
வாழ்வது " ஞான வாழ்வாகும் "

இதனைக் கொண்டு
ஆன்மா செல்வது " ஞான யத்திரை" ஆகும்
இமயத்தில் இருக்கும் கைலாயம் செல்வதல்ல


2. உறங்க நினைக்கின்றோம்
படுக்கையில் விழுகின்றோம்
நம் முயற்சியின்றியே உறங்கிவிடுகின்றோம்

நோய்வாய்ப்படுகின்றோம்
மரணப்படுக்கையில் விழுகின்றோம்
தானாகவே செத்துவிடுகின்றோம்

காயத்துக்கு மருந்து தடவுகின்றோம்
புண் தானாகவே ஆறிவிடுகின்றது

உறங்க வேண்டும் என்றோ
சாக வேண்டும் என்றோ
புண் ஆற வேண்டும் என்றோ
நாம் போராடுவதில்லை

ஆனால்
தியானப் பயிற்சியில் மட்டும்
தத்துவப் போர்வையை போர்த்திக் கொண்டு
ஒரு மூர்த்தியை நினைத்தும்
மந்திரங்களை ஜெபித்தும்
அதுவுடன் கலக்க வேண்டும்
என்று " போதத்தை " முன்னிட்டு
ஏன் போராடுகின்றோம்??

படுக்கைக்கு செல்வதும்
மருந்து தடவுவது மட்டும்
நம் கடன்

திரை மறைவு காரியங்கள்
தானாகவே நடப்பது போல்

நம் சாதனையில் -
அகமுக ஒளினெறிப் பயிற்சியில் சென்று
தத்துவங்களைக் கடந்து
ஆன்ம நிலை அடைந்து
ஆன்ம நிலையில் தனித்து
தன் போதத்தை ஒழித்து
" சும்மா இருப்பதே "
நம் கடன்


அதன் பின்
அருள் நம்மை
ஆட்கொள்ளுவதும் மேலேற்றுவதும்
அத்தனுடன் கலக்கச் செய்வதும்
அதன் கடன்
அதன் அருட்சுதந்திரம்

இதனை விடுத்து
அருளைப் பெறாது
போதத்தை முன்னிறுத்தி
நான் " அது ஆனேன் " என்றும்
"அதுவுடன் கலந்து விட்டேன் "
என்று பாவிப்பது யாவும்
சுத்த ஞானியர் முன்
உலக நடையினர் " நாம் இருவரும் சமம் "
என்றாடும் கூத்துக்கு ஒப்பாகும்


BG Venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)