Wednesday, May 14, 2014

[vallalargroups:5435] Comic stories - but with wisdom

சிறுவர் கதை - பெரிய்ய ஞானம்

நாம் அனைவரும் , சிறு வயதில் அம்புலிமாமா சித்திரக் கதைகளைப் படித்திருப்போம்

1.அதில் ஒரு கதை :

ஒரு நாடு அமைதியாக இருக்கும் - மக்கள், ராஜா , எல்லோரும் சுகமாக இருப்பர். திடீரென்று ஒரு ராட்சசன் வந்து அந்நாட்டை துவம்சம் செய்யும்

என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிப்பர் ???

மந்திரி/ராஜ குரு வந்து இளவரசனிடம் - நீங்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பார் - உங்களால் தான் முடியும் என்பார்

என்ன செய்ய வேண்டும் என்றால் :

ஏழு கடல் - ஏழுமலையைத் தாண்டி சென்றால் - ஒரு காட்டில் ஒரு குகை இருக்கும் - அதில் உள்ளே நுழைந்து சென்றால் - அங்கே ஒரு கிளி இருக்கும் - அதனை கொன்றால் , இங்கே இருக்கும் இந்த ராட்சசன் மாண்டு விடுவான் என்று வழி கூறுவார்

இளவரசனும் ராஜ குரு கூறியவாறே , தன் குதிரையில் பயணத்தை தொடங்கி , சோறு, தூக்கம் , தாகம் , களைப்பு , அயர்ச்சி என்று பாராமல் ஏழு கடல் - மலையைத் தாண்டி சென்று , குகை அடைந்து , கிளியை கொன்று , ராட்சசனை கொல்வான் - இது கதை

இது வெறும் கதை அல்ல - இதனுள் பெரும் ரகசியம் அடங்கி இருக்கின்றது

நாடு = உடல் / தேகம்
ராட்சசன் = மனம்
இளவரசன் = ஜீவன்
ஏழு கடல் - மலை = ஆதாரங்கள்/சக்கரங்கள்

குகை = நெற்றிக் கண்
கிளி = ஆன்மா


அதாவது - ஜீவனானது , ஆதாரங்களைக் கடந்து மேலேறி , நெற்றிக் கண் அடைந்து , அதனுள் புகுந்து, அங்கிருக்கும் ஆன்மாவை சில/பல கருமங்களை செய்தால், நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மனம் என்னும் ராட்சசன் மாண்டுவிடுவான் என்பது தான் இதன் உட்கருத்து

இதனைத்தான் நாம் ஏழு மலை மேலேறி, திருமலையில் வெங்கடாசலபதியை வணங்கி வருகின்றோம்

திருப்பதி பெருமாள் = ஆன்மா

எவ்வளவு பெரிய சாதனையை - விஷயத்தை - சிறுவர் கதையாக சொல்லி உள்ளனர் நம் முன்னோர் ??


2.அலிபாபாவும் 40 திருடர்களும் :

இந்தக் கதையில் MGR , ஒரு காட்டிற்குச் செல்வார் - அங்கு ஒரு குகையைக் காண்பார் - ஒரு மந்திர வார்த்தையைக் கூறினால் , அது திறந்து விடும் - அதினுள்ளே சென்றால், செல்வங்கள் குவிந்திருக்கும் - அவர் அள்ளிக்கொண்டு வந்து பெரும் செல்வந்தன் ஆகிவிடுவார்

கதையின் உண்மைப் பொருள் :

குகை = நெற்றிக்கண்
நெற்றிக்கண்ணைத் திறந்தால் அதினுள்ளே, எல்லா செல்வங்களும் இறைவன் வைத்துள்ளான் - நம் இக மற்றும் பர வாழ்க்கைக்கும்

இதனை தெரிந்து கொள்ளாமல் , நாம் நம் வாழ்க்கை முழுதும் இதனை சம்பாதிப்பதிலேயே செலவழிக்கின்றோம்

கடைசியாக, MGR ம் , வில்லனும் ஒரு நூலான ஏணியில் , அடியில் வென்னீர் ஆறு பாய , அதில் சண்டை போடுவார்கள் -

இதில்
நூல் ஏணி = மயிர்ப்பாலம்
வென்னீர் ஆறு = நெருப்பாறு

இந்த சூக்குமமான வார்த்தையை நம் சித்தர் பெருமக்கள் பயன்படுத்தி உள்ளனர்

சித்தர் பாடல்களில் இவ்வார்த்தையை நாம் காணலாம்


இந்த ஆற்றைத் தான் " வைதரணி நதி " என்று வேதங்கள் கூறுகின்றன

இதனைக் கடந்து சென்றால் தான் சிற்றம்பலம்/சிதம்பர வெளிகளுக்குள் நுழைய முடியும்

இதனைத் தான் வள்ளலார் -

" இக்கரைக் கடந்திடில் அக்கரை
இருப்பது சிதம்பரச் சர்க்கரை " என்று பாடுகின்றார்


நம் முன்னோர்களும் , ஆன்ம ஞானிகளும் , பேருண்மையை கதைகளாகவும் , பண்டிகைகளாகவும், திருவிழாவாகவும் சித்தரித்து , நாம் என்றுமே மறக்க முடியாதபடி செய்திருக்கின்றனர்


வெங்கடேஷ்



No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)