Tuesday, May 20, 2014

[vallalargroups:5446] தேகமும் தேசமும் - பாகம் 2

தேகமும் தேசமும் - பாகம் 2

தேகத்தின் மூலமாகவே தான் சிவத்தின் ரகசியங்களை அறிய முடியும் என்பதால் , தாங்கள் அனுபவங்களை ஊரின் பெயர்களாக வைத்து சென்றுள்ளனர் நம் ரிஷிகளும் , தன்னை உணர்ந்த ஞானியரும்

திருவையாறு : பஞ்ச இந்திரியங்களும் கூடினால் நாதம் கேட்கும் என்பதால், வருடந்தோறும் திருவையாறில் மார்கழி மாதத்தில் " நாத வைபவமாக " எல்லா சங்கீத வித்துவான்களும் ஒன்று கூடி தியாகையரின் கீர்த்தனைகளைப் பாடி அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்

இவ்விழா , அகத்தின் செயல்பாடு புறத்திலே அடையாளமாக செய்யப்படுகின்றது, வைக்கப்பட்டுள்ளது


1. திருப்பாற்கடல் : அமுதமாகிய சிதாகாசப் பெருவெளியில் இறைவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான் என்பதை காட்ட , இக்கோயில் அமைக்கப் பட்டிருக்கின்றது

2. புலியூர் : புலி பாய்ச்சலுக்கு பெயர் போனது - அது போன்று பார்வையும் பாய்ச்சலுக்கு பெயர் போனது - கண் பார்வையின் சக்தியின் பெருமை உணர்த்த வந்த ஊர் - பார்வையை புலிக்கு உவமை கூறி இவ்வூர் வழங்கப் படுகின்றது

3.சீர்காழி : இறைவனின் சீரான " அருள் - வேகாக்கால் - போகாப்புனல் " சாதகனுக்கு வழங்கும் ஊர்
திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை நன்கு ஆராய்ந்தால், இந்த ஊரின் உண்மையும் பெருமையும் புலனாகும்

4. திருமலை : இவ்வூர் ஏழு மலை மீது அமைக்கப் பட்டிருக்கின்றது
அதாவது , நாமும் , ஏழு ஆதார சக்கரங்களைக் கடந்து மலை ஏறினால் , ஆன்மாவாகிய பெருமாளைக் காணலாம்

5. துவாரகை : திருப்பெருந்துறையைப் போன்று அனுபவத்தைக் குறிக்க வந்த வேறொரு பெயர் கொண்ட ஊர்

6. காஞ்சீபுரம் ( ஏகம்பநாதர் ) : சிவனின் ஏகக் கலையானது சுழுமுனையில் ஓங்கி வளரும் போது, கம்பம் போன்று இருப்பதால், ஏகம்பம் என்றும், வீற்றிருக்கும் தெய்வத்திற்கு, ஏகம்பநாதர் என்றும் பெயர்.



BG Venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)