Friday, May 2, 2014

Re: [vallalargroups:5421] Akshaya trithiya - sanmaarga meaning அக்ஷய திரிதியை - சன்மார்க்க விளக்கம்



அமுத கலசம் - இது சிவன் கோவில்களில் லிங்கத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் - இது மூன்று கயிற்றின் மூலம் தொங்கிக் கொண்டிருக்கும்
அதில் சிறு ஓட்டை வழியாக நீர் சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும் - இது மூன்று சூக்கும பொருட்களின் கூட்டுறவால் , அமுதம் உருவாகி, சொட்டு சொட்டாக நம் தொண்டை வழியாக வயிற்றில் விழும் என்பதைக் காட்டத்தான்.


வெங்கடேஷ்

-----vallalargroups@googlegroups.com wrote: -----
To: "Vallalar Groups" <vallalargroups@googlegroups.com>
From: venkatesh@precot.com
Sent by: vallalargroups@googlegroups.com
Date: 05/02/2014 01:15PM
Cc: "Vallalar Groups" <vallalargroups@gmail.com>
Subject: [vallalargroups:5420] Akshaya trithiya - sanmaarga meaning


அக்ஷய திரிதியை - சன்மார்க்க விளக்கம்
இந்த நன்னாளிலே தான்

1. பாஞ்சாலி , அனைவர் முன்னாலும் துகில் உரியப்பட, அது மேன்மேலும் வளர்ந்து , அவளின் மானத்தைக் காப்பாற்றியது

2. ஆகாய கங்கை பூமிக்கு இறங்கிய நாள்

3. கண்ணனின் பள்ளித் தோழர் குசேலரின் வீட்டில் செல்வம் மேன்மேலும் வளர்ந்து அவரின் வறுமையை விரட்டி அடித்தது

இதையே , ஒரு பெண்ணிடம் , நாம் இன்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் , இன்று தங்க நகை வாங்க வேண்டும் என்பாள். - இது தான் நிதர்சனமான உண்மை

பெரும்பாலான மெய் உணர்ந்த ஞானிகளின் வாழ்க்கையில் , ஒரு முறையேனும் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.

1. இயேசு பிரான், ரொட்டித் துண்டையும் , மீனையும் பன் மடங்காகப் பெருக்கி அனைவர்க்கும் படைத்தல்

2.ஷீரடி சாய் பாபா , தன் பக்தர் வீட்டில் உணவினை பன்மடங்காகப் பெருக்கி அனைவர்க்கும் போதுமானதாகச் செய்தார் - கூட்டம் அதிகமாகி , உணவு போதாது என்ற நிலை உருவான பொழுது


அக்ஷய திரிதியை என்றால் என்ன ? அதன் பொருள் என்னவென்று பார்த்தோமானால் :

அக்ஷயம் = மேன்மேலும் வளர்வது - குறைவுபடாமல் இருப்பது என்று பொருள்

திரிதியை = மூன்று - நாள்/பொருட்கள்/மணி போன்றவை

உண்மையான பொருள் என்னவெனில் - மூன்று சூக்குமப் பொருட்கள் நம் உடம்பிலே ஓரிடத்தில் கலந்தால் , அது பொரூட்களை மேன்மேலும் வளர்த்துக் கொண்டேப் போகும்


மூன்று சூக்குமப் பொருட்களின் கலவை வெற்றிடத்தை உருவாக்கும் - அதனை இறைவனின் அருட்கொடையானது தன் அருளால், பொருட்களால் மேன்மேலும் வளர்த்துக் கொண்டேப் போகும்


உதாரணங்கள் :
1. காசி - திரிவேணி சங்கமம் - மூன்று நதிகளின் சங்கமம் - இங்கு நீராடினால் நம் பாவங்கள் நசித்துப் போகும் - இதே போன்று
நம் தேகத்திலும் இது போன்று மூன்று சூக்குமப் பொருட்களைச் சேர்த்தால் , கங்கை உருவாகி , அது நம் பாவங்களையெல்லாம் கரைத்து விடும்

2. அமுதசுரபி - அள்ள அள்ள குறையாத அன்னம் பாலிக்கும் பாத்திரம் - அள்ள அள்ள குறையாமல் அன்னம் வருவதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்று பெயர்

இது மணிமேகலையிடமிருந்தது

நாம் கொண்டாடிடும் எல்லா பண்டிகைகளிலும், விழாகளிலும், பெரும் பொருள் இருக்கின்றது - பெரும்இரகசியம் அடங்கி இருக்கின்றது - - அதனை தெரிந்து கொண்டாடினால் , அதன் பெருமையை நாம் உணர்வோம்


யோகச் சாதனைகள் யாவையும் நம் முன்னோர்கள் பண்டிகைகளிலும், விழாக்களிலும் புகுத்தி , நம் வாழ்க்கையின் அங்கமாக்கி விட்டார்கள்

பண்டிகைகளிலும், விழாக்களிலும் பொதிந்துள்ள இரகசியங்களை நாம் கண்டுபிடித்து, நாம் அதை சாதனையில் பயின்று , வெற்றி கண்டால், நாமும் மரணமில்லாப் பெருவாழ்வும் , சிற்றம்பலத்தில் நுழையும் வல்லமையும் திறமும் பெறுவோம் என்பது திண்ணம்.

மக்கள் இந்த உண்மையை உணராமல் இந்த நாளிலே , பூஜை, விரதம் , உபவாசம் , அன்னதானம், தங்கம் /நகை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள்.

அவர்களின் செயலுக்கும் உண்மைக்கும் தூரம் மிக அதிகம் -

அவர்களின் செயலில் உண்மை புரிதலே இல்லை - அதனால் அவர்கள் நினைப்பது நடப்பதில்லை - அவர்கள் எண்ணம் ஈடேறுவதில்லை


Venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)