Thursday, July 22, 2010

[vallalargroups:3279] Re: செழுஞ்சுடர்மாலை - 1

சித்தர்களின் பா வடிவுக்கு உரையெழுதுதலென்பது - கடலின் ஆழத்தை -
உப்புக்கல் கட்டிய நூலாலே , காண முயலுதலுக்கொப்பாம்.

"தான் பற்றப் பற்ற தலைப்படும் தானே" எனபதே சித்தர்கள் நமக்கிட்ட
கட்டளையாம்.


On Jul 22, 2:25 pm, murugaraj g <g.murugara...@gmail.com> wrote:
> திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 82
>
> ஊணே யுடையே  பொருளேயென்
>    றுருகி மனது தடுமாறி
> வீணே துயரத் தழுந்துகின்றேன்
>    வேறோர் துணைநின் னடியன்றிக்
> காணே னமுதே பெருங்கருணைக்
>    கடலே கனியே கரும்பேநல்
> சேணேர் தணிகை மலைமருந்தே
>    தேனே ஞானச் செழுஞ்சுடரே.
>
> உரை:
>             நல்ல உயரம் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளுபவனே, மருந்து
> போல்பவனே, தேனே, ஞானச் செழுமையுடைய ஒளியே, அமுதமாகிய பெரிய அருட்கடலே,
> இனிய கனியே, கரும்பு போல்பவனே, உணவுக்கும் உடைக்கும் பொருளுக்கும்
> நினைவுகளைச் செலுத்தி மனதில் தடுமாற்றம் எய்தி வீணாகத் துயரத்தில்
> ஆழ்ந்து வருந்துகின்ற யான் உன்னை யொழிய வேறே ஒருவரும் துணையாக
> காண்கிறேனில்லை. செழுஞ்சுடரே,எனக்கு அருள்புரிக.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)