Thursday, July 15, 2010

Re: [vallalargroups:3262] விளக்கம் தேவை...

ஐயா,

வள்ளல் பெருமானார் ஞான தேகம் பெறுவதற்கு முன் உரைத்த வார்த்தைகள் அவை.

மேலும் வள்ளல் பெருமானார் இப்பொழுது 1/2 + 1/2 தேகத்தில் இறையுடன்
கலந்திருக்கிறார். ஆகையினால் வள்ளல் பெருமானை குருவாகக்கொண்டு சுத்த
சன்மார்க்க வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது ஒவ்வொருவரின் பக்குவத்திற்கு
தகுந்த படி ஞானத்தை வழங்குவார். அருட்பெருஞ்ஜோதி இறைவனை தரிசிக்க துணை
புரிவார்.

மேலும் கார்த்திகேயன் ஐயா கேள்விக்கான பதிலை திண்டுக்கல் சரவணானந்தா
சுவாமிகள் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.


சாகாக் கல்வி: சாகாக் கல்வி ஆன்மக் கடவுள் உண்மையை, நம் உள்
விளங்கும் வண்ணத்தை சத்விசாரத்தால் உணர்ந்து, அகத்தில் இருப்பதை அறிந்து
கொள்ளுதல், இவ்வறிவால் உண்மையை அறிந்து நிற்றல் சாகாக் கல்வியின் பயனாம்.

ஏம சித்தி: ஏம சித்தியாவது தயா ஒளியை, ஆன்ம பீடத்தே கண்டு
கலந்து தயவாகி நிற்பதாம். இந்த அக நிலையே பொன்மணி மேடையாகப் புகலப்படும்.
இவ்விடத்தில் இருந்தால், உள்ளம் தயவு ஒளியோடு சுத்த பொன் வண்ணமாய்த்
திகழ்வதோடு, எந்தவித ஆபத்து விபத்துக்களாலும் தாக்கற்று விளங்கலாகும்
ஆம்.

ஏமம் என்ற சொல்லுக்கு இதனால் இங்கு பொன் என்றும்,
பாதுகாப்பான காவல் நிலை என்றும் பொருள் பொருந்துவதாம்.

தத்துவ நிக்கிரகம் செய்தல்: தத்துவ நிக்கிரகம் செய்தல்
என்பது அகத்தே தயவு மயமாய் இருந்து கொண்டு, தயவால் வாழ்ந்து வர உள்ளொளி
பெருகும். அது பெருகப் பெருக ஜீவ தேகேந்திரியங்கள் எல்லாம் தயா ஒளியால்
நிரம்பப் பெற்று யாவும் சுத்த தத்துவமாக மாற்றம் அடைகின்றது. அப்போது
தான் அசுத்த அநித்திய தேகமே, சுத்த நித்திய வடிவமாக மாறி விடுகின்றதாம்.

கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்: தயா ஜீவ விளக்கத்தால் கடவுள் தயவும் மனித
தயவும் உணர்ந்து அகத்தே தயவு நிலை பெற்று நின்றால், தயவின் உண்மை
விளங்கும். கடவுள் தயவின் கூறு நம்மில் நிரம்பி செயல்படுத்திக்
கொண்டுள்ளதை அறிவோம். இங்குக் கடவுள் தயவு அகண்ட உலகெங்கும் செயல்படுவதை
அறிகின்றோம்.


வள்ளுவ பெருந்தகை இதனையே

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

என்று குறுப்பிடுகிறார்.


திருமந்திரத்திலும் ஏமசித்தி, சாகாகல்வி வருகிறது. அதனை அடுத்த பகுதியில்
பார்ப்போம்.

On 7/13/10, dinesh kannan <kannaa.jegann@gmail.com> wrote:
> sir, i m dinesh kannan i want to know one thing can u please explain about
> it,vallalar said the person who know everything about god he like to share
> that feel to everyone but people wrongly consider the man as a god thats
> why don't pray to me am not a god .but still people consider vallalar as a
> god what it means can u tell
>
> 2010/7/5 karthik keyan <karthikeyan1883@gmail.com>
>
>> வணக்கம்,
>> ஏமசித்தி, தத்துவவிகரகம், சாகக்கலை விளக்கம் என்ன.
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)