இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே..
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்..
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே-அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்..
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
அது இருந்தா இது இல்லை-இது இருந்தா அது இல்லை..
வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே நாடிநிக்குதே அநேக நன்மையே
அறம் காத்த தேவியே-குலம் காத்த தேவியே-நல் அறிவின் உருவமான ஜோதியே
தொழிலாளர்கள் பற்றி எழுதியது:
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்
காயும் ஒருநாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்
என்றும் நம்பிக்கை தந்தார்.
உழைப்பை மதித்திதுப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்!
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்
என்று உலகளாவிய அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர்.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment