Thursday, August 20, 2009

[vallalargroups:2015] வயதானவர்களு‌க்கான உணவு முறை

உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள்
கூறுகின்றன. அ‌‌திலு‌ம் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில்
வா‌ழ்பவ‌ர்க‌ள் கூடுத‌ல் ஆயுளுட‌ன் வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்களது உணவு முறைதா‌ன். அ‌ப்படி எ‌ன்னதா‌ன்
அவ‌ர்க‌ள் சா‌ப்‌பிடு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், நிறைய தானிய
வகைகள், சோயா . ௦ஆனால் பால் பொருட்களை அவர்கள் ‌மிக‌க் குறை‌ந்த
அள‌விலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அத‌ற்கே‌ற்ப ஊட்டச்சத்துகளின்
தேவையும் அதிகரிக்கிறது. எனவே அ‌ந்த சமய‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற உணவு முறையை
எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமை‌யினா‌ல் உட‌லி‌ல்
‌ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் தாமதமாக ஏற்படு‌ம்.

கு‌றி‌ப்பாக முதுமை‌யி‌ல் ஏ‌ற்படு‌‌ம் எலும்புத் தேய்மானம், சர்க்கரை
நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது
த‌ள்‌ளி‌ப் போட முடியும். 65 வயதிற்கு பிறகு ஏற்படும் நோய்களுக்கு
ஒ‌‌வ்வொருவ‌ரி‌ன் உணவுமுறையு‌ம் பெரும் காரணமாக அமை‌கிறது.

வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆ‌ர்வ‌ம் இருக்காது. இதற்கு
ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் உ‌ள்ளன. ருசி மற்றும் வாசனை போன்ற புலனுணர்வுகள்
சற்றே மங்கி விடுவ‌து‌ம், கடிப்பதில் ஏற்படும் சிரமம், ‌சீரண‌க்
கோளாறுக‌ள் போ‌ன்றவையு‌ம் ப‌சியை‌க் குறை‌த்து ‌விடு‌கி‌ன்றன.

வயதான கால‌த்‌தி‌ல் ம‌ற்றவ‌ர்களை ‌ந‌ம்‌பி இரு‌க்கு‌ம் சூ‌ழ்‌நிலை‌யி‌ல்,
தம‌க்கு‌த் தேவையான உணவை, தேவையான நேர‌த்‌தி‌ல் பெற முடியாத சூழலு‌ம் பல
மு‌தியவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌கிறது. இதுவு‌ம் இவ‌ர்களது உட‌ல் ந‌ல‌த்தை
பா‌தி‌க்கு‌ம் சூ‌ழ்‌நிலைகளே.

மாறும் தேவைகள் :


வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம்
இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச் சத்துகளின் அளவும்
மாறுபடுகிறது. அவர்கள் அ‌திகமான ஊட்டச்சத்து‌ள்ள உணவுகளை எடுத்துக்
கொள்வது அவசியம்.

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு
தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..

வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி-வைட்டமின் மாத்திரை
எடுத்துக் கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல்
நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி
வைட்டமினில் அவ்வளவாக இருக்காது. ஆனால் அதிகமான ஊட்டச்சத்து உணவுகளையும்
மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

தினமும் 6 முதல் 8 டம்ளர்கள் தண்ணீர் அருந்துவது மிகச் சிறந்த
மருத்துவமாகும். ஏனெனில் வயதானவர்களுக்கு தாகம் கூட குறைந்து விடும்.
இதனால் களைப்பும், தலைவலியும் ஏற்படும். ஊ‌ட்டசத்துகள் போன்றே தண்ணீரும்
மு‌‌க்‌கியமானதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல்
செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும், உடலின் நச்சுப்
பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலு‌ம் தண்ணீரின் பங்கு
அபரிமிதமானது.


இறை‌ச்‌சி வகைகளை‌க் கை‌‌வி‌ட்டு கா‌ய்க‌றிகளை அ‌திகமாக உண‌வி‌ல்
சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். கா‌ய்க‌றிகளை மெ‌ன்று ‌தி‌ண்ண முடியாத
மு‌தியவ‌ர்க‌ள் கா‌ய்க‌றிகளை சூ‌ப் செ‌ய்து‌ம் அரு‌ந்தலா‌ம்.

‌கீரைக‌ள், பழ‌ங்களையு‌ம் ‌சீராக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

‌தினமு‌ம் ஏதாவது ஒரு வகை‌ப் பழ‌த்தை உ‌ண்ணலா‌ம். அதுவு‌ம் ‌நீ‌‌ரி‌ழிவு
நோயா‌ளியாக இரு‌ப்‌பி‌ன் பழ வகைகளை‌‌ப் ப‌ற்‌றி மரு‌த்துவ‌ரிட‌ம்
ஆலோசனை செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.

பா‌ல், த‌யி‌‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் அ‌திகமாக உ‌ட்கொ‌ள்ளாம‌ல்
இரு‌ப்பது நல‌ம். அத‌ற்காக அறவே எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது
ச‌ரிய‌ல்ல.

ச‌ர்‌க்கரை, கார‌ம், உ‌ப்பு போ‌ன்றவை குறைவாக உண‌வி‌ல் இரு‌ப்பதை உறு‌தி
செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இவைகளை தேவையை ‌விட பா‌‌தி ப‌ங்கு அள‌வி‌ற்கு
உ‌ங்க‌ள் உண‌வி‌ல் ‌நீ‌ங்களே குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். இது
ப‌‌ல்வேறு நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌க் கா‌க்கு‌ம்.

வார‌த்‌தி‌ற்கு இரு முறை கச‌ப்பான உணவுகளான பாக‌ற்கா‌ய், சு‌ண்டை‌க்கா‌ய்
போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் ‌நீ‌ரி‌ழிவு நோ‌யி‌ல் இரு‌ந்து
த‌ப்‌‌பி‌க்கலா‌ம்.

வெ‌‌ந்தய‌ம், ‌‌மிளகு போ‌ன்றவ‌ற்றை தூ‌ள் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு
அதனை உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌‌ல் ‌சி‌றிது ‌கல‌ந்து உ‌ட்கொ‌ண்டா‌ல்
மரு‌த்துவ‌ரிட‌ம் போக வே‌ண்டிய அவ‌சியமே இரு‌க்காது.

கை, கா‌ல்களை சு‌த்தமாகவு‌ம், அடிபடாமலு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள
வே‌ண்டு‌ம். ‌நீ‌‌ரி‌ழிவு நோயா‌ளிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் காய‌ங்க‌ள்
எ‌ளி‌தி‌ல் ஆராம‌ல் போவதா‌ல் ப‌‌ல்வேறு பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம்.

கு‌ளி‌ர்‌ச்‌சியான பொரு‌ட்களை இரவு நேர‌ங்க‌ளி‌ல் த‌வி‌ர்‌த்து
‌விடு‌ங்க‌ள். உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளாத எ‌ந்த‌ப் பொருளையு‌ம்
உ‌ட்கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

எ‌ளி‌தி‌ல் ‌ஜீரண‌ம் ஆக‌க் கூடிய உணவுகளை ம‌ட்டு‌ம் இரவு நேர‌ங்க‌ளி‌ல்
உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள். அதுபோ‌ல் மாலை நேர‌த்‌தி‌ல் ‌ஏதாவது ஒரு தா‌னிய‌ம்
சே‌ர்‌ந்த உணவு‌ப் பொருளை உ‌ட்கொ‌ள்வது‌ம், ‌சி‌றிது தூர‌ம் நடை
செ‌ல்வது‌ம் ‌சி‌ற‌ந்தது.

உட‌ல் ‌நிலை‌‌யி‌ல் ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌நீ‌ங்களாகவே
ஒரு மா‌த்‌திரையை வா‌ங்‌கி சா‌ப்‌பிடாம‌ல் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று
அவ‌ர் கு‌றி‌ப்‌பிடு‌ம் மரு‌ந்துகளை சா‌ப்‌பிடு‌ங்க‌ள். மரு‌த்துவ‌ரிட‌ம்
உ‌ங்களு‌க்கு ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை இரு‌ந்தா‌ல் அதனையு‌ம், ‌நீ‌ங்க‌ள்
‌தின‌ந்தோறு‌ம் சா‌ப்‌பிடு‌ம் மா‌த்‌திரைகளையு‌ம் மற‌க்காம‌ல் கூ‌றி
‌விடு‌ங்க‌ள்.

நமது உடலை நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ன் மூலமே ச‌ரியாக வை‌த்து‌க் கொ‌ள்ள
முடியு‌ம். அதை ‌விடு‌த்து‌ மா‌த்‌திரைகளையே உணவாக உ‌ட்கொ‌ள்ளு‌ம்
அவ‌சிய‌ம் நம‌க்கு வே‌ண்டாமே
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)