அசுவமேத யாகம் - சன்மார்க்க விளக்கம்
இந்த யாகம் , இருக்கும் யாகங்களிலேயே சிறந்த யாகம் என்று போற்றப்படுகின்றது
இந்த யாகம் செய்வதற்கு, பெரிய தகுதிகள் இருக்க வேண்டும் என்பர்
ஒரு ராஜா இதனை செய்தால், அவர் " ராஜாக்களுக்கு ராஜா - மஹாராஜா - சக்கரவர்த்தி" ஆகிவிடுவார்
பாண்டவர்கள் கௌரவர்களை பாரத யுதத்தில் வென்ற பிறகு இந்த யாகம் செய்து , யுதிஷ்டிரர் " சக்கரவர்த்தி " ஆக மகுடம் சூட்டிக் கொண்டார்
ஒரு அலங்கரிக்கப்பட்ட குதிரை - " அசுவம் " யாகத்தின் செய்தியை தாங்கி, நாட்டிலுள்ள எல்லா இடத்திற்கும் அனுப்பி வைப்பர் - மற்ற எல்லா ராஜாக்களும் அந்த அமைதி செய்தியை ஏற்றுக் கொண்டு - அவரை - மஹாராஜாவாக ஏற்றுக் கொள்வர்
இதன் மூலம் எல்லா சிற்றரசரசுகளும் இணைந்து ஒரு பெரிய தேசமாகும் - சிற்றரசரசர்களுக்கு பாதுகாப்பும் ஆகும்
திமிங்கலம் , சிறிய மீனை விழுங்கி விடுவது போல், பெரிய தேசங்கள் , சிற்றரசுகளை வீழ்த்தி , தன்னோடு இணைத்துக் கொள்ளும்
இந்த ஏற்பாட்டால் , சிற்றரசுகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
அதே சமயம் , இதனுள் மிகப் பெரிய உட்பொருள் பொதிந்திருக்கின்றது
அசுவமேத யாகத்தின் உட்பொருள் :
அசுவ (குதிரை ) = மூச்சுக் காற்று - அபான வாயு , மேத = சுழிமுனை நாடி.
சுழிமுனை நாடி என்பது இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளுக்கு இடையில் ஒடும் நடு நாடியாகும்
இந் நாடி சாமானியர்களுக்கு இயங்காமலும் , யோகிகளுக்கும் , விழிப்பு நிலையில் இருப்பவர்களுக்கும் . தன்னை உணர்ந்த சித்தர்களுக்கும் நன்கு இயங்கியபடியும் இருக்கும்
அசுவமேத யாகம் என்பது - அபான வாயுவை சுழிமுனை நாடி வழியாக ஏற்றி , பிரமத்துவாரத்தை திறப்பதாகும்
இந்த செயற்கரிய செயலை, மாபெரும் சாதனை செய்வதன் மூலம் உடலை நம் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும்
இதனை ஆற்றுவதன் மூலம் , இதுகாறும் மனதிடம் இருந்த உடலை இயக்கும் சக்தி மற்றும் கட்டுப்பாடு , ஆன்மாவிற்கு வந்துவிடும் என்பது திண்ணம் -
மனம் ஆட்சி செய்தால் , முடிவில் கல்லறைக்கே போவார் - அறிவு ஆண்டால் முத்தேகச் சித்தி பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வு அடைவார்
நம் சமகாலத்து அனேக மகரிஷிகளும், குருக்களும், இந்த பெரும் செயலை ஆற்ற முடியாது போய் , மண்ணுக்கு இரையாகிப் போனார் என்பது உண்மை
இந்த சூக்குமக் கலை மிகவும் இரகசியமாக வைத்துள்ளனர் நம் ரிஷிகளும் யோகியர்களும் - மேலும் இதனை தகுதி உள்ளவர்களுக்கு அவர்களாகவே வந்து கற்றுக்கொடுப்பர் என்று கூறப்படுகின்றது
1. புராணம் : அசுவம்
உட்பொருள் : மூச்சு - அபான வாயு
2. புராணம் : மேதா
உட்பொருள் : சுழிமுனை நாடி - நடு நாடி
3. புராணம் : பாண்டவர்கள்
உட்பொருள் : பஞ்ச இந்திரிய சக்திகளுடன் கூடிய ஆன்மா
4. புராணம் : தேசம்
உட்பொருள் : தேகம் - உடல்
5. புராணம் : சிற்றசர்கள்
உட்பொருள் : உடல் உறுப்புகள்
6. புராணம் : குதிரை நாடு முழுதும் வலம் வருதல்
உட்பொருள் : அபான வாயுவைக் கொண்டு உடல் முழுமையும் இணைத்து விடுதல் - ஆன்மா உடலின் கட்டுபாட்டை தன் ஆட்சிக்கீழ் கொண்டு வருதல்
7. புராணம் : தருமர் சக்கரவர்த்தியாக மகுடம் சூட்டிக் கொள்ளல்
உட்பொருள் : ஆன்மா உடலை ஆளும் ராஜா ஆதல்
பெரிய கருத்துக்களை கதைகளாகக் கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர் - ஆனால் அதன் உண்மை வெளிவராமல் என்றும் கதைகளாகவே இருப்பது வருந்ததக்கது
இந்த பயிற்சியின் மூலம் மட்டுமே உடலை நம் கட்டளைகளுக்கு அடி பணிய வைக்க முடியும் - மேலும் 36/96 தத்துவங்களை நம் வசப்படுத்த முடியும்
வெங்கடேஷ்
No comments:
+Grab this
Post a Comment