Friday, June 13, 2014

[vallalargroups:5473] அகமும் புறமும்


அகமும் புறமும்

கோடீஸ்வரனாகி சுகபோக வாழ்வினை
நடைமுறையில் அடையமுடியாதவர்
கனவில் அதைக் கண்டு
திருப்தி அடைவது போல்

நாம் அகத்திலே
மகத்தான காரியங்கள் ஆற்ற இயலாதவராய்
புறத்திலே சடங்குகள் மட்டும் செய்துவிட்டு
திருப்திபட்டு பெருமையும் கொள்கின்றோம்

* திருவடிகளை இணைத்து
" நாதத்தை " உண்டாக்கி
அதில் லயிக்க முடியாதவராய்
புறத்தினில் வாயினால்
சப்தத்தை உண்டாக்கி
" சங்கீதம்" என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம்

நாதம் - அகம் சங்கீதம் - புறம்

*  அகத்திலே சந்திர மண்டலம் அமைத்து
அதில் உயிரும் உடலும் திளைத்து
குளிர்ந்தும் கிளர்ச்சி அடைய வழி தெரியாதவராய்

வருடந்தோறும் கோடை காலத்தில்
புறத்திலே இருக்கும்
ஊட்டி, கொடைக்கானல் என்று
மலைப் பிரதேசங்களுக்கு சென்று
குளிர்ச்சியும் கிளர்ச்சியும் அனுபவித்து வருகின்றோம்

*  "கை" யினால் " லயமாகும் மலை - கிரி "
" கைலாயமலை - கைலயங்கிரி "
சாதனையினால்
இதனை ஆற்ற முடியாதவராய்

புறத்திலே

இமயத்தில் இருக்கும்
கைலாயத்திற்கு புனித யாத்திரை சென்று வருகின்றோம்



" கயிலை கண்ட புனிதர் "
என்று பட்டம் சூட்டிக் கொள்கின்றோம்


* அகத்திலே சந்திர மண்டலம் அமைத்து
அதிலிருந்து வீசும் அமுதகலையில்
ஆன்மா திளைத்து
பாப நாசம் செய்ய வழி அறியாதவராய்

புறத்திலே " பாப நாசம் "
என்னும் அருவியில் குளித்தும்
கங்கை என்றும் காவிரி என்றும்
புனித தீர்த்தமாடி வருகின்றோம்


அகத்தையே கருத்தாகக் கொண்டு
அதில் செயற்கரிய செயல்கள் செய்தலுமே
பிறந்த பிறப்பின் பயனாம்
" வீடுபேறு " எய்துமே அல்லாது

புறத்திலே ஆற்றும் சடங்குகளினால்
ஆன்மலாபம் ஒன்றும் இன்று
என்று தேர்ந்து கொள்வோம் இன்று




வெங்கடேஷ்





No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)