Wednesday, June 4, 2014

[vallalargroups:5464] தூங்காத தூக்கம் - பாகம் 2 - சகஜ நிட்டை

தூங்காத தூக்கம் - பாகம் 2 - சகஜ நிட்டை


நம் சாதனை பலத்தினால் , திருவடிகள் நம் கண் எதிரே ஒளிவிடும் - அதில் ஊன்றியும் , பற்றியும் நிற்க , மனம் செயலற்றுப் போய்விடும்.

திருவடிகள் - எல்லா அசைவையும் ஒழித்துவிடும் - உடல் - மனம் - பிராணனின் அசைவை முழுதும் ஒழித்துவிடும். மேலும், திருவடிகளானது , ரூபமாகவும் , காட்சிகளாகவும், எண்ணங்களாகவும் இருக்கும் மனோ நிலையை முழுதும் மாற்றி , அரூபமாகவும், எண்ணம் அற்ற நிலைக்கு கொண்டு சென்று விடும்

இது மனம் இறந்த நிலை - தூங்காமல் தூங்கி சுகம் பெறும் நிலை

இந்த நிலையில் . மூளை மிகவும் அமைதி அடைந்துவிடுவதால் , உடலை மூளை கட்டுபடுத்துவதால், உடலும் பதற்றமில்லாமல் , அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றது

மனம் அமைதி அடைந்து விடுவதால், உடலின் இயக்கம் குறைந்து, சக்தி வீணாவது குறைந்து போய், அதனால் , பசி, தாகம் , தூக்கம் , ஆசை எல்லாம் குறைந்து கொண்டே வரும்
சரியான சாதனை என்றால் இதெல்லாம் குறைந்து கொண்டே வர வேண்டும்


சாதனையின் பலம் கூடக் கூட , உள் செல்லும் மூச்சின் அளவு குறைந்து கொண்டே வரும் - உடல் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்

மேலும் சாதனையினால், உடல் தேவையற்ற கழிவுகளை புறந்தள்ளி, உடலின் எடையும். உயரமும் கூட குறைந்து விடும் - உடல் பஞ்சு போல் மிருதுவாக லேசாகி விடும்

இந்தப் பயிற்சியை ஒரிடத்தில் அமர்ந்து , முயற்சியும், பிரயாசைப்பட்டும் , அந்த மேலான அந்த " ஒன்றிய" நிலையை ( சமாதி ) அடைவர் - இது சாதாரண பாகம்

இதுவே , தன் முயற்சி இல்லாமலும் , எப்பொழுதும் திருவடியுடன் " ஒன்றிய " நிலையில் இருப்பதைத் தான் ' சகஜ சமாதி " என்று கூறுகின்றனர்

" சமாதிப் பழக்கம் பழக்கமல்ல - சகஜப் பழக்கம் வேண்டும் " என்று வள்ளலார் வலியுறுத்துகின்றார் - இது அனுபவத்திற்கு வருவது மிகவும் கடினம் -

இதனால் தான் - தாயுமானவ சுவாமிகள் = " சகஜப் பழக்கத்திற்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் " என்கின்றார்

சாதனை இந்தத் திசையில் சென்றால் தான், நாம் ஆன்ம நிலையையும் , ஆன்ம அனுபவமும் , தரிசனமும் பெற முடியும் - மேலும் வளர்ந்து, திருச்சிற்றம்பலத்திற்குள், சத்திய ஞான சபைக்குள் நுழைய முடியும்


வெங்கடேஷ்


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)