அன்பு உயிரே,
நம்முடைய வாழ்க்கையில் சில நேரம் பிடித்த விஷியங்கள் நடக்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். பிடிக்காத விஷயம் நடக்கும் போது துன்பம் அடைகிறோம். இவை இரண்டும் மாறி மாறி வருகிறது சரிதானே. இன்பம் என்பது பெற பல உலககாட்சிகள் மாறி நமக்கு பிடித்தது போல் வந்தால் இன்பம் அடைகிறோம். அதேபோல் துன்பம் என்பது பெற பல உலககாட்சிகள் மாறி நமக்கு பிடிக்காதது போல் வந்தால் துன்பம் அடைகிறோம் சரிதானே.
இப்பொது இன்பம் துன்பம் அடைவது யார்? இந்த உம்பா மனமா அல்லது ஆன்மாவா ? எது என்று சிந்தியுங்கள். நம் வள்ளலார் சொல்லியது. உடம்பு மனம் எல்லாம் கருவிகளே ஜடபொருளே. ஆன்மாவே இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது. ஆன்மா தத்துருபமாக இன்பதுன்பங்களை அனுபவிபதற்க்காகவே வெளிகாட்சிகள் இன்ப காட்சிகளாகவோ துன்பகாட்சிகளாகவோ மாறுகிறது. வெளிகாட்சிகளை விடுங்கள் இங்கே ஆன்மாவுடையே வேலை என்ன என்று பாப்போம். ஒன்று மகிழ்ச்சியாக இருப்பது அல்லது துன்பமாக இருப்பது. இந்த இரண்டு வேலை தவிர வேலை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை.
மேலும் தன் துன்பத்தை போக்க முயற்சி செய்கிறது. அந்த முயற்சியிலேயே காலம் கழிகிறது. இதை மட்டுமே ஆன்மா பல பிறவிகளாக செய்து வந்துள்ளது. இது எப்படி சாத்தியம் ஆனது. தன்னை ஆன்மா என்று அறியாமல் தான் ஒரு ஜீவன் என்று அறியாமையால் தான் நடந்தது. தான் யார் என்று அறிந்த பின் என்ன நடக்கிறது என்று பாப்போம்.
ஆன்மாஎன்று தன்னை உணரும்போது தான் அழிவதில்லை இந்த உடம்பும் உலக காட்சிகள் தான் அழிகிறது என்பதை உணர்துகொள்கிறது. இந்த நிலையில் இருந்து விடுபட நினைக்கிறது. தனக்குள் இருக்கும் இறைநிலையை அறிந்துகொள்கிறது. தன் சுயநிலையான ஆனந்த நிலையை அடைகிறது. தன்னுடைய இன்பதுன்பங்கள் மறைகிறது. அதன் அளவின்படி வெளிகாட்சிகள் மாறுகிறது. உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. சுத்ததேகத்தை பெறுகிறது.
மேலும் மேலும் ஆன்மா இறைநிலையை(அறிவை) பெறுகிறது. ஆனந்தத்தில் திளைக்கிறது. அமைதிநிலை அடைகிறது.அடைய அடைய பிரணவ தேகமும் அறிவு முழுமை நிலை அடையும் போது ஞானதேகத்தை அடைகிறது. முழு மொனானந்த நிலையை அடைகிறது.
நாம் ஆன்மா என்பதை புரிந்துகொண்டு அமைதியாய் ஆனந்தமாய் அறிவில் விழிப்பாய் இருந்தால் தன்னிலை அடைந்து இன்புறுவாய் சுகம் பெறலாம்.
என்றும் அன்புடன் ,
உயிர்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment