Saturday, December 4, 2010

[vallalargroups:3734] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

             ஆன்மநேய அ.இளவரசன்               அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!                வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்                                           
                   கைபேசி எண்.9940656549                     தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!         நெ.34, அண்ணா தெரு,திருவள்ளுவர் நகர்,           
                                                                            எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ்க !       ஜமின் பல்லாவரம், சென்னை-600 043                                
 
 
                                                                                                                                     
               பசித்திரு!!                                             தனித்திரு!!                                                விழித்திரு!!  
 
 
           
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
 
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்சோதி (அகவல் )

அன்பு உள்ளம் கொண்ட   ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒரு மனிதன் சோம்பேறியாக இருந்தால் அவன் நிலை எப்படி இருக்கும்  என்பதற்க்கு  ஏற்ப்ப இங்கே ஒரு நிகழ்வு பற்றி பார்ப்போம்  
 
அன்பர்களே முன்பு ஒருகாலத்தில் புதூர் என்ற ஊரில் கண்ணன் என்ற வாலிபன் அவன் இந்த மானிட பிறப்பை  பெற்றதன் உண்மையை  உணராமல் அவன்  எப்போதும் சக நண்பர்களுடன்  கூடிக்கொண்டு  வீண் பேச்சு பேசிக்கொண்டு  ஊர் சுற்றுவதிலேயே காலத்தை கழித்து வந்தான்.
கண்ணனின்   தாய் தந்தை வயதானவர்கள் அவர்கள் இந்த தள்ளாத வயதிலும் தங்களின் பிள்ளையை  யாதொரு  குறையுமில்லாமல் சீறும் சிறப்புமாக வளர்த்தார்கள்    தன் மகன் இப்படி ஊர் சுற்றி வீண்  காலம கழித்து  கொண்டிருக்கிறானே  நம் பிள்ளை பிற்க்காலத்தில் எவ்வாறு வாழ்க்கை வாழபோகிறான் என்று கடவுளை தியானித்தவாறு  மணம் வருந்தி கொண்டிருந்தார்கள் இப்படி இவர்கள் வருந்திகொண்டிருக்கும் வேளையில் ஒருநாள் இரவு  இவர்கள் அயர்ந்து  தூங்கி கொண்டிருக்கும்  வேளையில் அவர்களின்  சொப்பனத்தில்   நமது வடலூர் பெருமான் வணங்கிய அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தோன்றி  நீங்கள் இருவரும் உங்களின்  பிள்ளையை  பற்றி  இதுவரை கவலை கொண்டதுபோல் இனி ஒருபோதும் கவலைகொள்ளவேண்டாம் என்று கூரி  தாங்கள் இப்பொழுது செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்  அவையாதெனில்  பக்கத்து தெருவில் அன்பழகன் என்ற அன்பர் ஏழைகளின் பசிப்பிணி  போக்குவதர்க்காக தருமசாலை ஒன்றை செயல்படுத்தி கொண்டிருக்கிறார் எனவே அன்பர் அன்பழகனுக்கு  உதவியாக   தங்களின் பிள்ளையை அழைத்து கொண்டு  பக்கத்து தெருவில் உள்ள தருமசலைக்கு செல்லுங்கள்  என்று அருளாசி வழங்கி சென்றார்  அருட்பெரும் ஜோதி ஆண்டவர் 
 
இவ்வாறு தங்களின்  சொப்பனத்தில்  கண்ட  காட்சிகளையெல்லாம்   எல்லாம் மனதில் கொண்டு     அருட்பெருஞ்சோதி   ஆண்டவர்   உரைத்தபடி    மறுநாள் காலை கண்விழித்து    எழுந்தவுடன் அந்த பெரியவர்கள்  குளித்து  நெற்றியில்   திருநீறணிந்து கடவுளை தியானித்து  பின் அவர்கள் தங்கள் மகன் கண்ணனை அழைத்துக்கொண்டு     பக்கத்து தெருவில் உள்ள தருமசலைக்கு புறப்பட்டு   சென்றார்கள்  இவ்வாறு அவர்கள் சென்றுகொண்டிருக்கும் வழியில் ஒரு இளம்பசுங்கன்றானது அதன்காலில் முல்தைத்து வளிதாங்க முடியாமல் துடித்துகொண்டிருந்து அந்த இளம் கன்றுக்குட்டி இவற்றை பார்த்த பெரியவர்கள் கன்றுக்குட்டியின் அருகில் சென்று அதன் காலில் இருந்த   முல்லை இலகுவாக எடுத்து அருகில் இருந்த பச்சிலை மூலிகை கொண்டு அவற்றிற்கு  வைத்தியம் செய்து  அவற்றின் துயர்  நீக்கி சென்றார்கள்  
 
 
அன்பழகன் தான் செயல்படுத்திகொண்டிருக்கும் தருமசலைக்கு வந்துகொண்டிருக்கும் அந்த பெரியவர்களையும்  அவர்களின் மகன் கண்ணனையும் இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் பசிநீங்க உணவளிக்குமாறு சாலையில் பணியாற்றும்  கற்பகம் என்ற பெண்ணிடம்  கூரினார் உடனே   கற்பகம் அவர்களின் அரும்பசிநீங்க பலவகை பலகார உணவுகளை புன்னகையுடன்      பரிமாறி   அவர்களுக்கு   உபசாரம் செய்தாள் கற்பகம் அவர்கள் பசியாறிய    பின்பு அன்பழகன் தாங்கள் மூவரும் எங்கள்  சாலைக்கு  வந்த விவரத்தை அடியேன் அறியலாமா என்றார் அன்பழகன் பெரியவர்கள் தாங்கள் மகன் சற்றும்  பொறுப்பில்லாமல்  ஊர் சுற்றிகொண்டு இருக்கிறானே  என்று நாங்கள்  இவனை பற்றி மிகவும்  கவலைகொண்டிருக்கும் வேளையில் எங்களின்  சொப்பனத்தில்  அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தோன்றி தங்களின் தருமசலையையும்   மற்றும் தங்களை பற்றியும் எங்களுக்கு எடுத்துகூரி தங்களை காண சொன்னார்  ஆண்டவர் ஆகவே ஆண்டவர் கட்டளைப்படி நாங்கள்  தங்களை நாடி வந்திருக்கிறோம் என்று நடந்த   நிகழ்வுகளையெல்லாம் ஒன்றுவிடாமல்     அன்பழகனிடம் சொல்லிமுடித்தார்கள் 
 
அன்பர் அன்பழகன் கண்ணனுடைய தாய்தந்தையரை பார்த்து  தங்களுக்கு  ஆட்சேபனை இல்லை என்றால் தங்களுடைய மகனை எங்கள் சாலையிலே தங்க அனுமதிப்பீர்களா என்றார் அன்பர் அன்பழகன் 
கரும்பு தின்ன கூலியா என எண்ணிக்கொண்டு அந்த பெரியவர்கள்    அன்பர் அன்பழகனை பார்த்து தாங்கள்  நாங்கள் எண்ணியபடியே உரைத்தீர்கள் ஆகவே எங்கள் மகனை இனி தாங்கள் வசம்  ஒப்புவிக்கிறோம்  என கூரி கண்ணனை தருமசாலையிலே விட்டுவிட்டு அன்பர் அன்பழகனிடம் விடைபெற்று கொண்டு  தங்களின் இல்லம் வந்து சேர்ந்தார்கள்  அந்தவயதான பெரியவர்கள் இப்படியே சிலகாலம் கழிந்தன 
 
கண்ணன் தன் தாய்தந்தையர்  தன்னை சாலையிலே விட்டு சென்ற பிறகு அவன் தினந்தோறும் உண்பதும் உறங்குவதுமாக தான் முன்பிருந்த நிலையில் இருந்து சற்றும் மாறாமல் இருந்தான்  ஒருநாள் கற்பகம்  கண்ணனை பார்த்து இப்படி தாங்கள் தினந்தோறும் சாப்பிட்டுவிட்டு  சும்மா சோம்பேறியாக இருக்கிறீர்களே ஏதாவது சாலையிலே இருக்கின்ற வேலைகளை  செய்யக்கூடாதா  அல்லது  இங்கு வந்து பசியாறும் அடியார்களுக்கு உபசாரம் செய்ய கூடாத  என்றாள் கற்பகம், கண்ணன் கற்பகத்தை பார்த்து நீயும் என்னைப்போல் இந்த சாலையிலே தங்கியிருப்பவள் தான் ஆகையால் நீ எனக்கு ஒன்றும் புத்தி  சொல்ல தேவையில்லை  என்னைபற்றி   சிந்தித்துகொள்ள எனக்கு தெரியும் என்றான் கண்ணன் இப்படி இவர்கள் இருவரும் தினந்தோறும் சண்டையிட்டு  வாதம்  செய்து  பேசிக்கொண்டிருக்கையில் சிலமாதங்கள் சென்றன,  தேவலோக ரம்பையோ அல்லது ஊர்வசியோ என்று வியக்கும் அளவிற்க்கு எழில் கொஞ்சும் மேனியும்   பேரழகும் நற்குணமும் நிறைந்தவள் கற்பகம்   அப்பொழுது நாலோருமேனியும் பொழுதொருவன்னமும் கற்பகத்தின் அழகை ரசித்த  கண்ணன் சிற்றின்பவயபட்டவனாய்  நரியானது முயல் மீது கரிசனம் கொள்வது போல்  கற்பகத்தை பார்த்து நீ மிகவும் நல்லவள்  நான் தான் உன்னுடைய நற்பண்புகளை மதியாமல் உன்னை கடுஞ்சொல் சொல்லிவிட்டேன் நான்முன்பு தவறாக பேசியதை எல்லாம் மறந்து இனிவரும் வரும் காலங்களில் நாம்  நல்ல நண்பர்களாக இருப்போம் என்றான் கண்ணன் அதற்க்கு கற்பகம்  அவற்றை எல்லாம்  நான் அன்றே மறந்துவிட்டேன் என்று கூரி இனிமேல் நாம் இருவரும் நல்ல நட்புடன் இருப்போம் என்றாள் கற்பகம்  இப்படியே சில மாதங்கள் சென்றன மாதங்கள் செல்ல செல்ல கண்ணன் கற்பகம் இருவரின் நட்பு காதலாக மாறி  இருவரும் நெருங்கி  பழகிவந்தார்கள் 
 
 
அன்பர் அன்பழகன் இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதை கவனித்து இவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்  என  எண்ணியவராய் திருமண ஏற்பாடுகளை செய்யதொடங்கினார் என்றாலும் கண்ணனின் சோம்பேறி தனத்தை எண்ணி சிந்திக்கலானார் ஆனாலும்  இறைவன் கட்டளை எதுவோ அவ்வாறே நடக்கும் என எண்ணிக்கொண்டு  அருட்சோதி ஆண்டவர் கட்டளைப்படி  செயல்படுவோம் என்று அவர்கள் இருவருக்கும் நமது வடலூர் பெருமான் சிதம்பரம் ராமலிங்க அடிகளார்  கண்ட சன்மார்க்க முறையிலே  அதாவது அன்பர்கள் அனைவரும்  அகவல் ஓத அகவல் பாரயன்த்தோடு  இனிய  இல்லற  தருமத்தை கடைபிடிக்கும்  தருணம்  இது என அவர்கள் இருவரின்  இருமனம் ஒருமிக்கும்  திருமணத்தை   செய்துவைத்தார் அன்பர் அன்பழகன்  
 
கண்ணன் கற்பகம் தம்பதியர் சிலகாலம் இல்லறவாழ்க்கையை இனிதே நடத்தி நல்லமுறையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்  ஆனால் கண்ணன் தன் நிலையில் இருந்து சிறிதும் மாறவில்லை அவன் முன்புபோலவே வேலையெதுவும் செய்யாமல் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தான் கற்பகம் தன்கணவனை  பார்த்து தாங்கள் இப்பொழுது ஒரு இல்லறவாசி அதுவும் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவன்   ஆகையால்  தாங்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது உங்களின் கடமையாகும் என்று கூரி  ஏதாவது வேளை செய்து சம்பாதியுங்கள் என்று தினம் தினம்  ஓதினால்  அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதிர்க்கு ஏற்ப்ப கண்ணனின் மணம் மாறி சிந்திக்கலானான் எவ்வாறெனில் நாம் இதுநாள்வரையில் எவ்வளவு அற்பத்தனமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம் என சிந்தித்து இனியும் நாம் அப்படி இருக்க கூடாது என்று மறுநாள் காலையில் எழுந்தவுடன் சுத்தநீரில் குளித்து  கடவுளை வணங்கிவிட்டு  அதே ஊரில் உள்ள கடைகளில் மற்றும் வயல்வெளியில்    எதாவது வேளை தேடினான்  ஆனால் அவ்வூர்மக்கள்  அவனுக்கு வேலைகொடுக்கயாரும் முன்வரவில்லை  எதனால் என்றாள் இவன் தான் இளமையில்  இருந்தே  சோம்பேறியாக இருந்தவன் ஆயிற்றே என்று அனைவரும் வேலைகொடுக்க மறுத்துவிட்டனர் கண்ணன் வேளை தேடி தேடி அலுத்து போய் வீட்டிற்க்கு வந்து நடந்தவைகளை எல்லாம் தன்மனைவி கற்பகத்திடம் கூரினான், கற்பகம் தன்கணவன் மணம் மாற்றத்தை பார்த்து மகிழ்ந்தவலாய்  தன் கணவனை பார்த்து தாங்கள் ஏன் வெளியில் சென்று வேளை தேடவேண்டும் நமது அன்பழகன் அய்யா அவர்களின் தருமசாலையிலே நிறைய பணிகள் உள்ளன அதாவது தருமசாலையை  சுத்தம் செய்தல் உணவு தயாரித்தல்  மற்றும் இங்கு அடியார்களுக்கு இன்முகத்தோடு உபசாரம் செய்தல் போன்றவற்றை நாம் செய்துவந்தால் நமது சிதம்பரம் ராமலிங்கம் வடலூர் வள்ளல் பெருமான் வணங்கிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள் நமக்கு பூரணமாக  கிட்டும்  ஆகையால் நாம் சாலையில் உள்ள பணிகளை மேற்கொள்வோம் என்றாள் கற்பகம் 
 
கண்ணன் அன்றிலிருந்து தன் இல்ல துணைவியார் கற்பகத்தின் துணையோடு தருமசாலையில் உள்ள பணிகளை செவ்வனே  செய்து கொண்டு அங்கு வரும் அடியார்களை இன்முகத்தோடு உபசாரம் செய்து வந்தார்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் நமது வடலூர் வள்ளல் பெருமான் எழுதிய திருஅருட்பா என்னும் திருவமுதத்தை வாசித்து வந்தார்கள் இப்படி வாசிக்க வாசிக்க திருவருள் நாட்டத்தினால் இந்த உலகம் போற்றும் அளவிற்ர்க்கு மிக மிக உயர்ந்த நிலையை அடைந்து சீறும் சிறப்புமாக வாழ்ந்துவந்தார்கள் கண்ணன் தம்பதியர் 
 
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் யிரை சிந்தனையோடு ஜீவகாருண்ய பணியை செய்துவந்தால் நமதுவடலூர் வள்ளல் பெருமான் வணங்கிய அருட்பெருஞ்சோதி நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை சிந்திப்போம் செயல்படுவோம் என கூரி அகமகிழும் அன்பன்     
 
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
 
See full size image
 
 
 
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
 
See full size image
 
 
 
 
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
   
பசித்தவருக்கு  உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய  அன்பன்
 
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
      
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)