Friday, December 24, 2010

Re: [vallalargroups:3807] 96 தத்துவங்கள் சுருக்கம்

அன்பு உயிரே,
 
            அதுதானே அது. அது தெரியாமல் தானே அது தன்னை தானே அறியாமையால் தேடி கொண்டு இருந்தது. தன்னை அறியும் அறிவு வந்தபின் தானே அறிவாய் தானே எல்லாமாய் இருப்பதை உணர்ந்து அறியாமை உலகை கடந்து அறிவே வடிவாய் அறிவே அறிவாய் ஆகிறது. இதுவே இதன் விளக்கம் ஆகும்.
 
அறிவைகொண்டு அறிவைகண்டு அறிவே ஆவதே அறிவு ----   வள்ளலார்
 
என்றும் அன்புடன்,
உயிர்.
2010/12/23 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்பு நண்பர் தீனதயாளன் அவர்களுக்கு,

" தன்னை அறிவு என்று உணர்ந்த ஆன்மா படிப்படியாக ஒன்பது வாயிலைகொண்ட உடம்பு தத்துவத்தையும் அதனை சார்ந்த உலக தத்துவத்தையும்  கடந்து பின் ஐந்து புலன்கள் என்ற தத்துவங்களையும் கடந்து தான் ஆன்மா என்ற தத்துவத்தையும் கடந்து அறிவே வடிவாய் மோன ஆனந்தநிலையை அடைகிறது. எல்லாம் தானே தானாய் ஆகிறது.  இதனை விளக்கவே 9 என்பதை ஒன்பது வாயில் கொண்ட உடம்பு தத்துவமாகவும் 6 என்பதை புலன்கள் ஐந்து மற்றும் ஆன்மா என்ற தத்துவமாகவும் விளங்க 96 தத்துவ சுருக்கமாக இறை அருளால் விளக்கப்பட்டுள்ளது."  - தீனதயாளன்

மேற்கண்ட தங்களது விளக்கத்தில் ஆன்மா என்பது தத்துவம் என்று கூறி இருக்கின்றீர்கள். எப்படி ஆன்மாவானது தத்துவமாகும் ?

தத்துவம் கடந்தால் காண்பதே ஆன்ம காட்சி என்னும்பொது ஆன்மாவையே தத்துவம் என்று எப்படி விளக்கினீர்கள் என்று கூறவும்.

அடுத்து ஆன்மாவையே கடந்ததாக கூறி இருக்கின்றீர்கள் எப்படி ஆன்மாவை விட்டு கடக்க முடியும்.

அதுதானே அது. அதை விட்டு எப்படி எது கடக்கும் என்று விளக்கவும்.

உங்கள் மனதிற்கு பட்டதையெல்லாம் இறை அருளால் தோன்றியது என்று எப்படி உங்களால் கூற முடிகிறது.

தவறான கருத்து மற்றவர்களுக்கு போய் சேரக்கூடாது என்பதற்காக தான் இதை எழுதினேன்.

மன்னிக்கவும்.

அன்பு சகோதரன்
அரசு 

2010/12/22 dheena dayaalan <uyir73@gmail.com>
அன்பு உயிரே,

       எனக்கு இறைவன் அறிவித்ததை என்னுடைய வலை பகுதியில் எழுதிவைப்பது வழக்கம். இந்த மின் அஞ்சல் 96  தத்துவ சுருக்கம் தவறுதலாக வள்ளலார் வலைபகுதிக்கும் அனுப்பி உள்ளேன்.  தவறுக்கு மன்னிக்கவும் மேலும் இறையருளால்  9  மற்றும் 6 விளக்கத்தை விரிவாக அறிய விரும்புவோர் கீழ்கண்ட வலை பக்கத்தை பார்த்து அறிந்துகொள்ளவும்.
 
என்றும் அன்புடன்,
உயிர்.

2010/12/21 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

நண்பர் தீனதயாளன் அவர்களே,

என்ன புதியதாக விளக்கம் கூறுகிறீர்கள்.

எங்கு படித்தீர்கள் 9 மற்றும் 6 என்று

2010/12/21 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

நண்பர் தீனதயாளன் அவர்களே,

என்ன புதியதாக விளக்கம் கூறுகிறீர்கள்.

எங்கு படித்தீர்கள் 9 மற்றும் 6 என்று

36 தத்துவத்தின் விரிவே 96 தத்துவமாகும்.

9 மற்றும் 6 இதை எங்கே பிடித்தீர்கள் ?

அன்பன்
அரசு

2010/12/21 dheena dayaalan <uyir73@gmail.com>
96 தத்துவங்கள் சுருக்கத்தை பார்போம்
9 என்பது ஒன்பது வாசலை கொண்ட உடம்பை குறிக்கும்.
6  என்பது ஐந்து புலன்களையும் மற்றும் ஆன்மா அக்னியையும் குறிக்கும்.
ஆனால் உண்மையில் அனைத்தும் தத்துவமே.
இவை அனைத்தையும் நடத்துவது பேரறிவே.
இந்த 9 மற்றும் 6 தத்துவங்களை கடந்து பேரறிவாகவே இருப்பதை உணர்ந்து ஆழ்ந்த அமைதியில் மோனத்தில் ஆனந்தத்தில் இருக்க முயலுவோம்.
இவற்றை கடக்கும்போதே உலகமாயை விலகிவிடும்.
 
என்றும் அன்புடன்,
உயிர்.  

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)