Sunday, August 8, 2010

[vallalargroups:3331] செழுஞ்சுடர் மாலை - 8

செழுஞ்சுடர் மாலை - 8
திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 89

வேட்டே னினது திருவருளை
வினையே னினியித் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே யன்னேயென்
மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும்
நயக்கே னெனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில்தணிகைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.

உரை:
உயரத்திலிருந்து தேன் சொரியும் சோலைகள் நிறைந்த தணிகை மலைத் தெய்வமே,
ஞானச் செழுஞ்சுடரே, மணியே , அன்னை போல்பவனே , என் அரசே, நினது திருவருளைப
பெற விரும்பி இதுகாறும் காத்திருந்தேன்; இனி சிறிதும் துயர் போருக்க
மாட்டேன்.துயர் மிக்க இவ்வாழ்வில் என் கருத்தை செலுத்த மாட்டேன்.
அதுகுறித்து பிரமன், திருமால் ஆகிய தேவர்கள் எதிர்வந்து சொன்னாலும் அதனை
விரும்பேன்; ஆதலால் எனக்கு நின் திருவருளை நல்குவாயன்றோ?

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)