அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பசித்திரு தனித்திரு விழித்திரு கொல்லாநெறியே குவலயம்மெல்லாம் ஓங்குக ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ... ஆன்மநேயம் உடைய அன்பர்களுக்கு ஒருமுறை மகாபாரத போர் நடந்துகொண்டிருந்த தருணம் அது அந்த சமயத்தில் மகா பலம் வாய்ந்த வீரன் ஒருவன் போர்களத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான் அந்த வீரனின் நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நெஞ்சும் பரமாத்வாகிய கிருஷ்ணனை வெகுவாக கவர்ந்தன உடனே அவர் தன சுயவுருவை மாற்றிக்கொண்டு அவன் அருகில் வந்து வீரனே நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார், நான் மகாபாரத போரில் பங்கேற்க தென்திசையில் இருந்து வருகிறேன் என்றான்,உடனே அவ்வீரனை பார்த்து போர் புரிய உன்னிடம் என்ன தகுதிகள் இருக்கின்றன என்று ஒரு கேள்வி கேட்டார் அதற்க்கு அந்த வீரன் தன்னிடம் இருந்த வில்லையும் மூன்று அம்புகளையும் கண்பித்து இதில் ஒரு அம்பால் பாண்டவர்களையும் மற்றொன்றால் கவுரவர்கலையும் மூன்றாவது அம்பால் அந்த மாயகண்ணனையும் கொல்லும் பலம் படைத்தவன் நான் என்றான்,பகவான் உன்னை எப்படி நம்புவது இதை கேட்டமாத்திரத்தில் மாறுவேடத்தில் இருந்த பகவானை மேலும் கிழும் பார்த்த அவன் அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தை காண்பித்து அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்தி காட்டுவதாக கூறினான் , சரி செய் பார்க்கலாம் என்றார் பகவான் இவர்தான் எல்லாம் அறிந்தவர் ஆய்றே அந்த மரத்தில் இருந்த ஐந்து இலைகளை மட்டும் தன்பாதத்தில் மறைத்துவிட்டார்,உடனே வீரன் அம்பை பூட்டி மரத்தின் மீது அம்பை எய்தினான் வீரன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு இந்த வையகம் அதிரும் அளவுக்கு சப்தமிட்டுக்கொண்டு மரத்தைநோக்கி பாய்ந்தது மரத்தில் இருந்த அத்துணை இலைகளையும் வீழ்த்திவிட்டு பகவான் பாதத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது அம்பு இதைகவனித்த வீரன் தன்னுடன் பெசிகொண்டிருப்ப்வர் யார் என்பதை அறிந்து சட்டென்று பகவான் பாதத்தில் விழ்ந்து வணங்கினான் கிருஷ்ணரும் அவனது திறமையை பாராட்டினார், பிறகு அந்த வீரனை பார்த்து இங்கே இரண்டு அணிகள் போர் புரிந்து கொண்டு இருக்கிறது இதில் நீ யாருக்காக போரிடபோகிறாய் என்று கேட்டார், அதற்க்கு அந்த வீரன் என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்பவர்களுக்கு ஆதரவாகத்தான் போரிடுவேன் என்றான்,இதை கேட்ட பகவான் இவன் போரிட்டால் இவன் சார்ந்துள்ள அணியே வெற்றி பெற ஆரம்பிக்கும் உடனே இவன் தோற்கும் நிலையில் உள்ள எதிர் அணிக்கு போய்விடுவான் இப்படி இவன் மாறி மாறி போய் போரிட்டால் இந்த பாரதபோர் ஒரு முடிவுக்கு வராதே என்று எண்ணிய பகவான் அந்த வீரனை பார்த்து உன்னிடத்தில் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார் , சற்றும் யோசிக்காமல் அந்த வீரன் செய்கிறேன் என்றான்,வீரனே இவ்வளவு பெரிய பாரதபோரை பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான் அவன் தலை எனக்கு வேண்டும் என்றார் பகவானே யார் அவன் உடனே சொல்லுங்கள் ஒரு நொடி பொழுதில் அவன் தலையை உங்கள் காலடியில் சேர்கிறேன் என்றான், பரந்தாமன் அந்த வீரனை பார்த்து நியாயத்தின் தர்மத்தின் பக்கம் நின்று போரிட நினைக்காமல் உன் திறமைக்கு சவாலாக போரில் பங்கேற்க்க போகும் நீதான் அவன் என்று கூரி அந்த வீரனின் தலையை கேட்டார் அவனும் கொடுப்பதாக உறுதியளித்தான்,அவன் பக்தியை கண்டு கபட நாடக சூஷ்திரதாரி உனக்கு என்ன வரம் வேண்டும்கேல்என்றார் பேரருள் கொண்ட பரந்தாமா நான் இறந்த பின்னும் என்கண்களால் இந்த மகாபாரத போரை பார்க்கும் வாய்ப்பை தரவேண்டும் என்றான் பகவானும் வரத்தை வழங்கிவிட்டு தலையை வாங்கிக்கொண்டார் மேலே உள்ள கதையின் பொருள் என்னவென்றால் ஒருவன் எவ்வளவுதான் பலசாளியாகயிருந்தாலும் பக்திமானாகவும் அறிவிர்சிரந்தவனாக விளங்கினாலும் அவன் சுயமாக சிந்தித்து நல்ல மார்கங்களை சார்ந்திராவிட்டால் அவர்களின் நிலை பரிதாபத்திர்க்குரியது இவர்கள் எப்பொழுதும் மதில் மேல் பூணை போலத்தான் பசி என்று வருபவர்க்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் அ.இளவரசன் வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம் நெ.34, அண்ணா தெரு, திருவள்ளுவர் நகர், ஜமின் பல்லாவரம், சென்னை- 6000 43 cell No.9940656549,9677160065 |
From cricket scores to your friends. Try the
Yahoo! India Homepage! --~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment