Friday, September 18, 2009

[vallalargroups:2160] Re: ராமலிங்க அடிகளார் வாழ்ந்த மலை கண்டுபிடிப்பு

Dear Self,
 
Heartfelt love and namaskaram. The objective of the mail on the hill where Vallalar had stayed was: to share the information that one more place is associated with our Vallalar.
 
As a Sanmarga sadhaka, we can take only this information and ignore other details such as statue and other stuff.
 
வாழ்க வளமுடன்.  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
 
Warm regards,
Udayashankar.
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
 
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Date: Tues, Sep 15 2009 8:40 pm
From: Manikandan Meenakshisundaram 


Dear all,

Upto my knowledge vallalar preferred only Thamizh, a real dovotee will not use any language other than Thamizh.
Vallalar doesnt likes Uruva Vazhipadu, so worshiping his statu is purely against to him. Please avoid fakes.

வள்ளலார் ஒரு சித்தர், சித்தர்களின் கூற்றுப்படி இறைவன் ஒருவனே அவனுக்கு உருவம் இல்லை, எல்லாமாகவும் இருப்பவனே பரம்பொருள், வள்ளலார் பரம்பொருளாய் ஐக்கியம் ஆனவர்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து பொய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே - சிவவாக்கியர்

 
வாழ்வோம் வளமுடன்
மணிகண்டன்




________________________________
From: Devotee <dakshinesha@yahoo.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Sunday, September 13, 2009 6:27:46 PM
Subject: [vallalargroups:2127] ராமலிங்க அடிகளார் வாழ்ந்த மலை, சிலை கண்டுபிடிப்பு


Vanakkam. I don't know how authentic is the below information. But quite interesting.

ராமலிங்க அடிகளார் வாழ்ந்த மலை, சிலை கண்டுபிடிப்பு:

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0913-swami-vallalar-statue-found-in-hill-temple.html

'வள்ளலார்' என அன்போடு அழைக்கப்படும் சுவாமி ராமலிங்க அடிகளார் வாழ்ந்த மலையும் அவரது வெண்கலச் சிலையும் பண்ருட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டியில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள சென்னப்பநாயக்கன் பாளையத்தையொட்டிய புஷ்பகிரி எனப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த்ச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்  விரிவுரையாளர் வேல்முருகன் கொடுத்த தகவலின்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழரசன், நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் இந்த மலைக்கோயில், பண்டைய காலத்தில் மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் அம்மன் சன்னதியிலிருந்த வெண்கலச் சிலை புத்தராக, சமண தீர்த்தங்கரரின் சிலையாக இருக்கலாம் என இக்கிராம மக்கள்  கருதி வந்தனர்.

இந்தச் சிலையில் "ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி'' என்று சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டு்ள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழரசன், நாராயணமூர்த்தி படித்தபோது தான் இது வள்ளலாரின் உருவச் சிலை என்பது தெரியவந்தது.

48 செ.மீ உயரமும், 22 செ.மீ அகலமும், 60 செ.மீ சுற்றளவும் கொண்ட இந்தச் சிலை, இடது கால் மீது வலது காலை மடித்து வைத்தும், இடது கை மீது வலக்கையால் மூடிய தியான நிலையில் காணப்படுகிறது.

இந்தச் சிலையை 1905ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் ஆகியோர் தர்மம் செய்ததாகவும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

1862ம் ஆண்டு வள்ளலார் எழுதிய கடிதம் ஒன்றில், "கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு.. தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இது வென்று குறிப்பதற்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வள்ளலார் வாழ்ந்த இடங்களில் புஷ்பகிரியும் ஒன்று என்று தெரியவருகிறது என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை'' என்று இறைவனை ஜோதியாய் கண்டவர் ராமலிங்க அடிகளார்.


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)