வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 1……..…2
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 2……..…3
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 3……..…4
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 4……..…6
ஜீவர்கள் - இறந்திறந்து போக காரணம்……………..….7
ஜீவர்கள் இறந்திறந்து வீண் போகாமால் இருக்க வழி….….….8
சன்மார்க்க பெரும் பதி யார்………………………………9
வள்ளலாரின் “உண்மை பேரனுபவம்”……………….…10
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 1
நம்முடைய வள்ளலார் பல இடங்களில் இயற்கை விளக்கம் ,இயற்கை உண்மை ,இயற்கை இன்பம் பயன்படுத்துகிறார்கள் .
"இயற்கை விளக்கம்" என்பது என்ன ?
"இயற்கை உண்மை" என்பது என்ன ?
"இயற்கை இன்பம்" என்பது என்ன ?
"இயற்கை விளக்கம்" - சத்திய ஞான சபை (சுத்த சிவானுபவ ஞான சபை)
"இயற்கை உண்மை" - சத்திய திருவுரு
"இயற்கை இன்பம்" - சத்திய திருநடம் (சிவானந்த ஒருமை திரு நடம்)
- சத்திய விண்ணப்பம்
- சத்திய பெரு விண்ணப்பம்
- சத்திய ஞான விண்ணப்பம்
- சத்திய சிறு விண்ணப்பம்
நமது வள்ளலார் மேற்கண்ட விண்ணப்பங்களை எழுத தொடங்கும் போது , இயற்கை விளக்கம்,இயற்கை உண்மை, இயற்கை இன்பம் இதனை வைத்து தொடங்குகிறார்கள்.
வள்ளலார் கூறும் கடவுளின் பெயர்கள் - Vallalar Mentioned "God Names"
REFERENCE: (ALL ARE VALLALAR HAND WRITTEN)
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 2
- எல்லா அண்டங்களையும் ,
- எல்லா உலகங்களையும் ,
- எல்லா உயிர்களையும் ,
- எல்லா பொருள்களையும் ,
- மற்ற எல்லாவற்றையும்
- தோற்றுவித்தும் ,
- விளக்கம் செய்வித்தும் ,
- துரிசு நீக்கு வித்தும் ,
- பக்குவம் வருவித்தும் ,
- பலன் தருவித்தும்
எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் ,
அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் ,
"அக்கடவுள் திருவருள்" நமது கருந்த்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய
அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் , எவ்விடத்தும் , எவ்விதத்தும் , எவ்வளவும் தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும் என்றும் , எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம் அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,
- கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் ?
- கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம் ?
- மரணம் , பிணி , மூப்பு முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ?
- என்றும் அறியாத பேரின்ப சித்தி எக்காலம் கிடைக்கும் ?
என்று எண்ணி- எண்ணி , வழி துறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே...,
REFERNCE : VALLALAR HANDWRITTEN SIRU VINNAPPAM
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 3
- இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,
- இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும் ,
- இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் ,
- எல்லா அண்டங்களையும் ,
- எல்லா உலகங்களையும் ,
- எல்லா பதங்களையும் ,
- எல்லா சத்திகளையும் ,
- எல்லா சத்தர்களையும் ,
- எல்லா கலைகளையும் ,
- எல்லா பொருள்களையும்
- எல்லா தத்துவங்களையும் ,
- எல்லா தத்துவிகளையும்,
- எல்லா உயிர்களையும் ,
- எல்லா செயல்களையும்,
- எல்லா இச்சைகளையும்,
- எல்லா ஞானங்களையும்,
- எல்லா பயன்களையும்,
- எல்லா அனுபவங்களையும்,
- மற்ற எல்லாவற்றையும்
தமது திருவருட் சத்தியால் (பெரும்கருணை பெரும்தொழில்கள்)
- தோற்றுவித்தல் ,
- வாழ்வித்தல் ,
- குற்றம் நீக்குவித்தல் ,
- பக்குவம் வருவித்தல்,
- விளக்கம் செய்வித்தல் ,
முதலிய பெரும்கருணை பெரும் தொழில்களை
- இயற்றுவிக்கின்றவர் என்றும் ,
- எல்லாம் ஆனவர் என்றும் ,
- ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
- சர்வ காருணயர் என்றும் ,
- சர்வ வல்லபர் என்றும் ,
- எல்லாம் உடையவராய் தனக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லா
- தனிப்பெரும் தலைமை அருட்பெருன்ஜோதியர் என்றும் ,
சத்திய அறிவால் அறியபடுகின்ற உண்மை கடவுள் ஒருவரே,
அகம் புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த, சுத்த மெய்-அறிவென்னும் பூரண பொது வெளியில், அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.
REFERENCE : அற்புத பத்திரிகை
வள்ளலார் "காட்டும்" உண்மை கடவுள் - Part 4
அவ வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே என்று அறிகின்ற மெய்அறிவை விளக்குவித்து அருளினீர். வாலிப பருவம் தோன்றிய போதே
- சைவம் ,
- வைணவம் ,
- சமணம் ,
- பவுத்தம்
முதலாக பலபெயர் கொண்டு பலபட விரிந்த , அளவிறந்த சமயங்களும், அச் சமயத்தில் குறித்த சாதனங்களும் , தெய்வங்களும் , கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் , அவ் அவ் சமயங்களில் விரிந்த
- வேதங்கள் ,
- ஆகமங்கள் ,
- புராணங்கள் ,
- சாத்திரங்கள்
முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனை கலைகள் என்றும் ,
உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர். அன்றியும்,
- வேதாந்தம் ,
- சித்தாந்தம் ,
- போதந்தாம் ,
- நாதாந்தம் ,
- யோகந்த்தம் ,
- கலாந்தம்
முதலாக பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த மதங்களும் , மார்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்
REFERENCE:வள்ளலாரின் சத்திய பெரு விண்ணப்பத்திலிருந்து ...,
ஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம்:
These is PURE VALLALAR HANDWRITTEN STATEMENT - YOU BELEIVE THESE WORDS 100%
சத்திய அறிவால் அறியப்படுகின்ற "உண்மை கடவுள் ஒருவரே" அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில் அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை
இவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண பெருவாழ்வை பெற்று வாழாமல்,
பல்வேறு கற்பனைகளால் ,
பல்வேறு சமயங்களிலும்,
பல்வேறு மதங்களிலும் ,
பல்வேறு மார்கங்களிலும் ,
பல்வேறு லட்சியங்களை
கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகி
சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்
துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகிறார்கள்
REFER THE ATTACHMENT
ஜீவர்கள் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து போக காரணம்:
These is PURE VALLALAR HANDWRITTEN STATEMENT - YOU BELEIVE THESE WORDS 100%
சத்திய அறிவால் அறியப்படுகின்ற "உண்மை கடவுள் ஒருவரே" அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவெனும் பூரண பொது வெளியில் அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை
இவ் உலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து , அன்பு செய்து , அருளை அடைந்து , அழிவில்லாத சத்திய சுக பூரண பெருவாழ்வை பெற்று வாழாமல்,
பல்வேறு கற்பனைகளால் ,
பல்வேறு சமயங்களிலும்,
பல்வேறு மதங்களிலும் ,
பல்வேறு மார்கங்களிலும் ,
பல்வேறு லட்சியங்களை
கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தவர்களாகி
சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்
துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகிறார்கள்
REFER THE ATTACHMENT
ஜீவர்கள் இறந்திறந்து வீண் போகாமால் இருக்க வழி:
இனி , இச் ஜீவர்கள் விரைந்து விரைந்து , இறந்து இறந்து வீண் போகாமல்
உண்மை அறிவு,
உண்மை அன்பு ,
உண்மை இரக்கம்
முதலிய சுப குணங்களை பெற்று நற்செய்கை உடையவராய் , எல்லா சமயங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் , எல்லா மார்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி விளக்கும் சுத்த சன்மார்க்கத்தை பெற்று , பேரின்பசித்தி பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும்,அடைந்த வாழும் பொருட்டு மேற்குறித்த "உண்மைக் கடவுள்" தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கிற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருள் சம்மதத்தால் இயற்று வித்து, "இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்" எனும் திரு குறிப்பை வெளிப்படுத்தி , அருட்பெரும் ஜோதியராய் வீற்றுறிகின்றார்.
ஆதலால் , அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்க பெறுவீர்களாயிற், கருதிய வண்ணம் பெற்று களிப்படைவதும் அன்றி , இறந்த்தவர் உயிர் பெற்றுஎழுதல் , முப்பினர் இளமையை பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெரும் களிப்பு அடைவீர்கள்
சன்மார்க்க பெரும் பதி யார்
- வள்ளலார் கூறும் சன்மார்க்க பெரும் பதி யார் ?
- அந்த "சன்மார்க்க பெரும் பதி" எப்போது வந்ததாக வள்ளலார் கூறுகிறார்?
- இந்த சன்மார்க்க பெரும் பதிக்கும் , இங்கு உள்ள கடவுளர்களும் ஒன்றா ?
வள்ளலாரின் உண்மை பேரனுபவம்:
VALLALAR REAL VAST EXPERIENCE
உலகியற் கண்
- பொன் விஷய இச்சை,
- பெண் விஷய இச்சை ,
- மண் விஷய இச்சை
முதலிய எல்லா விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓரணுத்துனையும் பற்றுவிக்கமால் , எவ்வுயிர்களையும் பொதுமையில் நோக்கி , எல்லா உயிர்களையும் இன்படைதல் வேண்டும்
என்னும் கருணை நன்முயற்சியை பெறுவித்து , சுத்த சன்மார்க்க தனி ஒன்றையே பற்றுவித்து ,
எக்காலத்தும் நாசம் அடையாத
- சுத்த தேகம் ,
- பிரணவ தேகம் ,
- ஞான தேகம்
என்னும் சாகா கலா அனுபவ தேகங்களும் ,
தன சுதந்திரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிபெறு வல்லபமும் ,
"கடவுள் ஒருவரே" என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,
கரும சித்தி , ஞான சித்தி முதலிய எல்லா சித்திகளும் பெறுகின்ற அருட்பேரும் பெற்று வாழ்கின்ற பேரின்ப பெருவாழ்வில்
என்னை அடைவிப்பதற்கு திருவுளம் கொண்டு , அருட்பெருஞ்ஜோதியராகி..
- நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மை பேரறிவை அறிவித்தும்,
- நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மை பெரும்காட்சிகளை காட்டுவித்தும் ,
- நான் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மை பெருஞ்செயல்களை செய்வித்தும்
- நான் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மை பெரு நன்மைகளை அடைவித்தும்,
- நான் எவ்விதத்தும் அனுபவத்தற்கரிய உண்மை பேரனுபவங்களை அனுபவிப்பித்தும்,
எனது அகத்தினும் , புறத்தினும் இடைவிடாது காத்தருளி , எனது உள்ளத்திலிருந்து , உயிரில் கலந்து
பெரும் தயவால் திருநடம் செய்து அருளுகின்றீர்.
இங்ஙனம் செய்து அருளுகின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணை திறத்தை என்னென்று கருதி! ,
என்னென்று துதிப்பேன்!!.
அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை
No comments:
+Grab this
Post a Comment