Monday, April 21, 2014

[vallalargroups:5378] ANBU - Love

அன்பு

1. திருவருட்பா :

அன்பென்னும் பிடியினில் அகப்படும் மலையே

2. திருமந்திரம் :

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்திலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தப்பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

உலகியல் வழக்கில், அன்பு என்றால்

1. மனைவியிடத்து காட்டும் காதல்
2. பிள்ளைகளிடத்தில் காட்டும் பாசம்
3. பெற்றோரிடத்து காட்டும் பரிவு/அக்கறை
4. சுற்றாரிடத்து காட்டும் பாசம்
5. சமுதாய அக்கறை
6. தேசப் பற்று
என்றே தான் வகைப் பிரிக்கின்றோம்


உண்மையில் இவைகள் தான் அன்பா ??

இல்லவே இல்லை

அன்பு ஆசை அற்றது - எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது

ஆன்மா ஆசை அற்றது - ஆகவே அன்பு என்னும் நிலை = ஆன்ம நிலை ஆகும்

எண்ணம் இல்லாத நிலை தான் மனம் என்கின்றோம்
எண்ணம் உள்ள நிலை மனனம் ஆகும்

மனம் = எண்ணம் அற்ற நிலை
மனனம் = எண்ணும் நிலை


நாம் அன்பு செய்வது என்றால் :

மனனம் அற்ற மனத்தை ( எண்ணம் அற்ற ) சிவத்தின் பால் வைத்து, ஒன்றும் கோராமல் நிற்பது ஆகும் - இந்த அன்பைத்தான் சிவமும் நம்மிடம் எதிர்பார்க்கின்றது


இந்த நிலையில் தான் சிவம் என்னும் பெரிய மலை நம் கைக்குள் அகப்படும் என்கின்றனர் வள்ளலார் உட்பட எல்லா ஞானிகளும்

அதாவது நாம் ஆன்ம நிலைக்கு உயர்ந்தால் தான் சிவம் நம் வசப்படும்.

அப்போது சிவத்தின் வசம் இருக்கும் எல்லா தத்துவங்களும் நம் வசப்பட்டு நிற்கும் என்பதில் ஐயமில்லை

அதாவது 36/96 தத்துவங்களால் ஆன உடல் நம் வசப்பட்டு/ கட்டளைக்கு பணிந்தும் நடக்கும்

அதனால் தான் உலக வழக்கில் - மலையை அசைக்கும் சக்தி அன்பிற்கு உண்டு என்கின்றனர்

வெறும் யோக சாதனைகளால் மட்டும் இறைவனை அடைய முடியாது - அதற்கு அன்பு வேண்டும்

அன்பு இல்லாமலும் இறைவனை அடைய முடியாது என்பதுவும் திண்ணம்

அன்பு மட்டும் இருந்தால் இந்த உலகினில் எல்லாம் சாத்தியம்

அன்பு அகத்தை குழைய வைக்கும்

இந்த பேரன்பைக் கொண்டு தான் வள்ளலார் அகவலில் கூறியுள்ள உடல் அனுபவங்களை - ( வரிகள் 1460 முதல் ) நாமும் பெற முடியும்



BG Venkatesh


bg venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)