பசித்திரு! தனித்திரு! விழித்திரு!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி !
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்சோதி (அகவல்
அன்புள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு மனிதன் இவ்வுலகவாழ்க்கையில்
அனுபவிக்கும் அனைத்து சிற்றின்பங்களையும் கண்டு அதுவே முடிந்த முடிவானது என்று
நினைத்து கொண்டிருக்கிறான் .உண்மையில் நம் சிற்றின்ப சுகங்களைவிட பேரின்பம்
தரக்கூடிய சுகானுபவத்தை எவ்வாறு பெறலாம் என்பதை பற்றிய ஒருநிகழ்வை
இங்கே பார்ப்போம்.
முன்பு ஒரு காலத்தில் சோழவளநாட்டில் சோமேஸ்வரம் என்ற ஊரில் வாழ்ந்துவந்த சுப்பிரமணி என்பவனுக்கு சுந்தரி என்ற மனைவி மற்றும் இரண்டு குழைந்தைகள் இந்த தம்பதியர் நாளும் இறைசிந்தனையோடு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பேரின்பம் தரக்கூடிய பரம்பொருளை போற்றி புகழ்ந்து பாடி பரவசமடைந்து பேரானந்தத்தோடு வாழ்ந்து வந்தார்கள்
இப்படி வாழ்ந்து வந்த தம்பதியருக்கு ஒருமனக்கவலை அவையாதெனில் இவ்வுலகில் பிறந்த
அத்தனை ஜீவராசிகளும் நீண்டநாள் வாழவேண்டும்.மரணமே வரக்கூடாது என்று நினைக்கின்றன.
ஆனால் இவற்றுக்கு எல்லாம் ஒரு உபாயம் இருக்கத்தானே செய்யும் என்று நினைத்தவாரு அவர்கள்
அன்றாட பணிகளை முடித்து கொண்டு உறங்கசென்றார்கள்.
உண்மை அன்பால் உள்ளம் உருகிவேண்டுவோர்க்கு இறைவன் தானே முன்னிற்று செயல்படுவார்
என்பதிற்க்குயேற்ப்ப அன்று இரவு சுப்பிரமணியன் தம்பதியரின் கனவில் அருட்பெருஞ்சோதி
ஆண்டவர் தோன்றி தங்களின் மனக்கவலைக்கு எல்லாம் தீர்வு காணவேண்டும் என்றால் உங்கள்
ஊருக்கு அருகில் சிறுதாவூர் என்ற கிராமத்தில் சிவநேசன் என்ற அன்பர் வாழ்வின் இலக்கணமாக
வாழ்ந்து வருகிறார் அவரிடம் செல்லுங்கள் அங்கு உங்களுக்கு நல்லதொரு பதில் கிடைக்கும் எனக்கூரி மறைந்தார். இவ்வாறு இறைவன் சொப்பனத்தில் கூரியதை ஏற்றுக்கொண்டு மறுநாள்
பொழுதுவிடிந்ததும் தங்களின் அன்றாட பணிகளை முடித்துக்கொண்டு சிறுதாவூர் என்ற ஊருக்கு
புறப்பட்டு சென்றார்கள்.
சிவநேசன் வாழுகின்ற சிறுதாவூர் கிராமத்தை அடைந்த சுப்பிரமணியன் தம்பதியருக்கு ஆச்சிரியம்
யாதெனில் அங்கு இருக்கின்ற அனைத்து இல்லங்களிலும் வடலூர் வள்ளல் பெருமானார் வணங்கிய அருள்விளங்கக்கூடிய ஜோதிசுடர் பிரகாசித்துகொண்டிருந்தன. இவ்வாறு வழிநெடுக
தீப சுடரை பார்த்தவாறு சிவநேசன் வாழும் குடிலை அடைந்தார்கள்.
அங்கே சிவநேசன் தன குடிலை நாடிவருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உபசரித்து அன்னம் பாலித்து அவர்களின் பசியை போக்கிவந்தார் இவ்வாறு நித்தமும் தன்சிருதொண்டினை செய்து
அவற்றில் அவர் அகமகிழ்ந்து வாழ்ந்துவந்தார். மற்றும் தன்குடிலை நாடி யாரோ வருகிறார்கள்
அவர்களை எதிர்கொண்டு அழைக்க விரைந்தார் ஆனால் அவருக்கு ஆச்சிரியம் யாதெனில் சுப்ரமணியன்
தம்பதியரை பார்த்தவுடன் நம்பிள்ளை நமக்கே கிடைத்தது போல ஒரு பேரானந்தம். கொண்டு அவர்களின் பசியை போக்கி பயணகளைப்பு நீங்க தாங்கள் ஒய்வெடுத்து கொள்ளுங்கள்
எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் யெனகூரி தானும் தன் நித்திய செயல்களை
முடித்து கொண்டு உறங்க சென்றார்.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் சுப்பிரமணியன் தம்பதியரிடம் சிவநேசன் தாங்கள் இருவரும் இந்த ஏழைகுடிலை நாடி வந்ததினால் அடியேன் பெரும்பேரு பெற்றேன், ஆனாலும் தங்களின் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தெரிகிறது அவற்றின் காரணத்தை அடியேன் அறியலாமா
என்றார் சிவநேசன். அதற்க்கு சுப்பிரமணியன் தம்பதியர் ஐயா தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை இந்த உலகத்தில் தோன்றும் அனைத்து ஜீவராசிகளும் மரணமில்லாமல் வாழவேண்டும் என்கிற ஆசையுள்ளது குறிப்பாக மனிதனுக்கு பேராசை உள்ளது.இவற்றுக்கெல்லாம் ஒரு உபாயம் இருக்கத்தானே வேண்டும் என்று நினைத்த
எங்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் சொப்பனத்தில் கூரியவாரு தங்களை நாடிவந்தோம், எனவே தாங்கள் தான் எங்களின் வாட்டத்தை போக்கவேண்டும் என்றார்கள் சுப்பிரமணியன் தம்பதியர்.அதற்க்கு சிவநேசன் மனிதர்கள் இந்த வாழ்க்கை பயணத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவேன்டமா.இளமையில் உலக சுகங்களில் அதிக நாட்டம் செல்கிறது.பிறகு தமது இல்லற
வாழ்க்கையிலே எல்லசுகங்களையும் அடைந்து மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் என
அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.அவனுக்கு முதுமை வந்தவுடன் மரணபயம் வந்துவிடுகிறது.
ஆன்மாவை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் போய்விடுகிறது.முதுமை வந்தவுடன் நோயும்
கூடவே வந்துவிடுகிறது ஆகையால் அவன் இந்த அழியகூடிய உடலை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான். ஆனால் ஆன்மாவிற்க்கு அழிவில்லை அழியகூடிய உடலை அழியாத ஆன்மாவோடு சேர்த்து ஒளிதேகமாக மாறவேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்.ஒருவன் இளமையிலிருந்தே வடலூர் வள்ளல்பெருமான் உணர்த்திய பசிபிணிப் போக்குதல் பிறஉயிர்களிடத்தில் அன்பு தயவு கொண்டு ஜீவகாருண்யத்தோடு
ஜோதி ஒன்றையே கடவுளா பாவித்து தீபநெரியை கடைபிடித்து வாழ்ந்துவந்தால் பேரருளும் பெருங்கருணையும்
கொண்ட வடலூர் வள்ளல் பெருமானார் வணங்கிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்மை மரணமில்லா
பெருவாழ்வில் வாழ செய்வார் என சிவநேசன் சுப்பிரமணியன் தம்பதியரிடம் கூரினான்.
இவ்வாறு சிவநேசன் கூரியதை கேட்ட சுப்பிரமணியன் தம்பதியர் மனம் வள்ளலார் தோற்றுவித்த
தீஞ்சுவை நீரோடையை மனம் தெளிவடைந்தது.எனவே சுப்பிரமணியன் தம்பதியர் சிவநேசனுக்கு
வந்தனம் பல கூரி தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று தருமசாலை ஒன்றை நிறுவி
அதில் நித்தம் வரும் அன்பர்கள் யாவரையும் ஜாதி மதம் இனம் மொழியென பாகுபாடு பார்க்காமல் பசி என்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு பசிப்பிணி போக்கிவந்தார்கள் இப்படி அவர்கள் ஜீவகாருண்யத் தயவோடு வாழ்ந்து மரணமில்லா பெருவாழ்வை பெற்றார்கள்.
எனவே அன்பர்களே நாமும் பசிஎன்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசிபிணிப் போக்கிவந்தால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே
காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய .அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை -6000 043
கைபேசி:9940656549
No comments:
+Grab this
Post a Comment