Monday, April 26, 2010

[vallalargroups:2890] தாய்மொழியைப் போற்றிப் பேணுதல்

 

                                    தாய்மொழியைப் போற்றிப் பேணுதல்

 

     உலகின் முதல்மொழி தமிழ் போல் தொல்லியல் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபினேயம், அராபி ஆகியவற்றுடன் மக்கட் தொகையில் பெரிய நாடான சீன நாட்டில் வழங்கிவரும் ஒரே மொழியான சீனமும் செவ்வியல் மொழி.

 

     அதனைப் பேணி வளர்க்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தாய்மொழிப் பற்றும், ஈடுபாடும் உடைய அனைவரும் மனத்தில் ஏற்றுச் செயல்படுத்த வேண்டியது:

 

     தினமணிக் கதிர் 18.04.2010:

 

          

"சீனாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், குறிப்பாக செய்திகளில் எப்ப்போதாவது ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது உண்டு. அதுகூட சொற்களை முழுமையாகச் சொல்லாமல் அதன் சுருக்கு எழுத்துகளை மட்டுமே சொல்வார்கள். எடுத்துக்காட்டாக: 'நேசனல் பேஸ்கட் பால் அசோசியேசன்' என்று சொல்லாமல் 'என்.பி.எ' என்று குறிப்பிடுவார்கள்.

 

           இனி அது கூடாது என்று எல்லா தொலைக்காட்சி நிலையங்களுக்கும், தொடர்புடைய அரசுத்துறை இப்போது உத்தரவு இட்டிருக்கிறது. சீன மையத் தொலைக் காட்சி மற்றும் பீகிங் தொலைக்காட்சி நிலையங்கள் இவற்றில் சிறப்பானவை. வட்டார நிலையங்களுக்கும் உத்திரவு போயிருக்கிறது.

 

           அப்படியானால் இந்த சொற்களுக்கு மாற்று என்ன? தவிர்க்க முடியாத நிலைகளில் அந்த சொற்களுக்கு சீன மொழியில் விளக்கம் தரப்பட வேண்டும் என்கிறது சீன அரசு.

 

           ஆங்கில சொல் சுருக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது விளையாட்டுச் செய்தி ஒலிபரப்பிற்கு மட்டும் அன்றி அரசியல், பொருளாதார செய்திகளுக்கும் பொருந்தும். 'ஜி.டி.பி' என்றால் 'கிராஸ் டொமஸ்டிக் புராடெக்ட்'. தமிழில் சொல்வதென்றால் 'மொத்த உள்நாட்டு உற்பத்தி' . சீனாவில் பொருளாதாரச் செய்தி அறிக்கையில் இனி 'ஜி.டி.பி' என்று சொல்லக்கூடாது. மொத்த உள்நாட்டு உற்பத்தி போல சீன மொழியில் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.

 

           சீன மொழியின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசியல் அறிவுரையாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது.

 

           இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சீன மொழி வேற்று மொழிகள் கலப்பால் தூய்மை கெட்டுவிடும் என்கிறார் சீன பன்னாட்டுப் பதிப்பகக் குழுவின் தலைமை ஆசிரியர் உவாங் யூயி.

 

           அங்கே இங்கே எப்போதாவது பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கே சீனாவில் தடை. மொழியின் புனிதத்திற்கு அவ்வளவு முதனமை."

 

           தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் மொழி ஆர்வலர்களும், நமது அரசியலாரும்,  ஊடகங்களும் சற்றே இதில் தங்கள் எண்ணத்தைச் செலுத்தினால், செவ்வியல் தமிழ் மொழியை வளர்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பதில்  உண்மை இருக்கும்.  

 

அன்புடன்   செ.நாராயணசாமி

 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)