Monday, April 19, 2010

[vallalargroups:2865] இளமையும் வாழ்வும் நிலையானதன்று : எந்த மயில்(மாமிச) கறியாலும் இதைத் தடுத்து நிறுத்த இயலாது


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
காசியை பிரம்மதத்தன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவனது காலத்தில், முற்பிறவியில், போதிசத்துவர் என்ற பெயரில் வாழ்ந்த துறவி ஒருவர், தங்க மயிலாகப் பிறந்தார். அதன் தோற்றம் வசீகரமாக இருந்தது. அதன் இறக்கைகளில் இருந்த பொன்னிறக் கோடுகள் பார்ப்பவர்களைச் சுண்டி இழுத்தது. அதனைப் பிடிக்க பலர் முயன்றன். எனவே, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில், காட்டிலுள்ள ஒரு குகையில் தங்கியது.

பிரம்மமந்திரம் ஒன்றை உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்தக் காட்டில் வசித்த வேடர்கள் அதைப் பிடிக்க செய்த முயற்சிகள் தோற்றன. இந்த விஷயம் பிரம்மதத்தனின் மனைவி சேமாவிற்கு தெரிய வந்தது. அந்த தங்கமயிலை தான் பார்க்க விரும்புவதாகச் சொன்னாள். மன்னன் அரசவையைக் கூட்டினான். அனைத்துப் பண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தங்கமயில் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா என மன்னன் கேட்டான்.''மன்னா! தங்கமயில் இருப்பது உண்மைதான்!

ஆனால், காட்டிலுள்ள வேடர்களுக்கு மட்டுமே அதன் இருப்பிடம் தெரியும்,'' என்று விளக்கம் அளித்தனர். அரண்மனைச் சேவகர்கள் மறுநாள் தண்டகாரண்யம் எனப்படும் அந்த காட்டிற்குச் சென்று, காட்டிலுள்ள வேடர்களை அழைத்து வந்தனர். அவர்கள் மன்னனிடம், ''அரசே! தங்கக்குன்று ஒன்று நடுக்காட்டில் இருக்கிறது. அங்கிருக்கும் தங்கக்குன்றினில் தங்கமயில் ஒன்று வசிக்கிறது. அது பேசும் சக்தி கொண்டது,''என்றார்கள். ஆச்சரியப்பட்ட மன்னன்,''பேசும் மயிலா! அப்படியானால், அதைக் கொன்றுவிடாமல் உயிருடன் பிடித்து வாருங்கள். பிடித்துத் தருவோருக்கு தக்க சன்மானம் கிடைக்கும்,'' என்றான்.

வேடர்களும் சன்மான ஆசையில் வலையை விரித்தனர். ஆனால், வலை மீது நடந்தால் கூட அந்த மயில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் வைக்கும் எந்த கண்ணியிலும் சிக்கவில்லை. காலம் சென்றது. மன்னனின் ஆசை நிறைவேறவே இல்லை. அரசி சேமா, மயிலின் நினைவாவே இருந்து இறந்தே விட்டாள். மயில் கிடைக்காத ஏக்கத்தில் சேமா இறந்ததை நினைத்து மன்னன் கடும் கோபம் கொண்டான். மயிலைப் பிடிக்கும் விஷயத்தில் தீவிரம் காட்டினான்.

ஆனால், அவன் முதுமை அடையும் வரை அது நடக்கவில்லை. தன்னுடைய இறுதிக் காலத்தில்,'' தண்டகாரண்யத்தில் இருக்கும் தங்ககுன்றில் தங்கமயில் ஒன்று வாழ்கிறது. அந்த மயிலின் மாமிசத்தை உண்பவர்கள் எப்போதும் இளமையோடு இருப்பார்கள்,''என்று ஒரு எழுதிவைத்துவிட்டு இறந்து விட்டான். பிரம்மதத்தனுக்குப் பின் அவனது மகன் பட்டத்திற்கு வந்தான். அவனுக்கும் தங்கமயில் மீது ஆர்வம் உண்டானது. ஆனால், அதைப் பிடிக்க அவன் எடுத்த முயற்சி தோற்றது. மயில் தப்பிக்கும் ரகசியத்தை அவன் அறிய முயன்றான். அது பிரம்மமந்திரம் ஜெபிப்பதைக் கண்டான். அதை உயிரோடு பிடிக்க வேண்டுமானால் தந்திரத்தால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.காட்டில் அழகான பெண் மயில் ஒன்றைப் பிடித்து நடனம் ஆடும்படியும், அடிக்கடி அகவும் படியும் பழக்கினான்.

ஒருநாள் அதிகாலைப் பொழுதில் தங்க மயில் இருப்பிடத்திற்குச் சென்று பெண்மயிலை ஆடச் செய்தான். பெண்மயிலின் அழகில் மயங்கிய தங்கமயில் பிரம்மமந்திரம் சொல்ல மறந்து வேடர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. அரண்மனைக்கு மயிலோடு வேடர்கள் வந்தனர். பேசும் பொன்மயிலுக்கு ஆசனமிட்டான் மன்னன்.''அழகுமயிலே! உன்னைக் கொன்று தின்றால் நிரந்தர இளமை கிடைக்குமா?''என்று என் தந்தை எழுதி வைத்துள்ளார். அது நிஜமா?'' என்று கேட்டான்.

'' முற்பிறவிகளில் மன்னனாகவும், துறவியாகவும் இருந்த நான் ஒழுக்கத்தோடு வாழ்ந்ததால் பொன்னிறமுள்ள மயிலாக பிறந்துள்ளேன். இளமையும் வாழ்வும் நிலையானதன்று. எந்த மயில் கறியாலும் இதைத் தடுத்து நிறுத்த இயலாது,'' என்றது. மயிலின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த மன்னன், அதைப் பிடித்து வரச்சொன்னதற்காக மன்னிப்பு கேட்டான். மயிலும் அவனுக்கு ஆசி வழங்கிவிட்டு தண்டகாரண்யம் நோக்கி பறந்தது. 



Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)