Tuesday, November 10, 2009

[vallalargroups:2390] சுத்தமான மனக்கண்ணாடி

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.



* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
 
* பகுத்தறிவு இல்லாதவர்களும், சுகபோகத் திற்காகவே வாழ்கின்றவர்களும் தங்கள் பிழைகளை ஒருநாளும் அறிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.
* தவறு செய்தல் மனித இயல்பு என்பர். ஆனால், தவறு என்று கண்டதும் இனிச் செய்வதில்லை என்று மன உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.
* நான் தவறே செய்யாதவன் என்று யார் ஒருவனும் கூறிக் கொள்ளமுடியாது. தவறு திருத்தத்திற்கு உரியது. திருத்த படும்போது பிழைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
* தவறு செய்து விட்டதாக பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் தோல்வி என்பதே கிடையாது.  அவமானமும் கிடையாது. அதுதான் நிஜமான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
* ஒரு மனிதன் தவறு செய்தபின் அதை எண்ணி வருந்துவதோ அல்லது அதனைத் திருத்திக் கொள்ள முற்படுவதோ சரியானது தான். ஆனால், அதைக் காட்டிலும் எளிய காரியம் ஒன்று உண்டு. விழுந்து எழுந்திருப்பதைவிட விழாமல் இருப்பதே சிறந்தது.
* நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.
 
 
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)