Tuesday, July 15, 2014

[vallalargroups:5518] முத்தியும் சித்தியும்

முத்தியும் சித்தியும்

வள்ளலார் :

" முத்தி என்பது முன்னுறு சாதனம் "
" சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் "

" முத்தியைப் பெற்றேன்
அம்முத்தியினால் ஞான சித்தி அடைந்தேன் "

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் : " முத்தி என்பது நாம் செய்ய வேண்டிய சாதனை - பயிற்சி "

அதுவே முடிந்த முடிபு அல்ல - இறுதி அல்ல

முத்தி - " மூன்று தீ "  என்பது தான் முத்தியாக சுருங்கி இருக்கின்றது
சாதனா தந்திரத்தால்,  நம் சிரசில் , சோம - சூரிய - அக்கினி - மூன்று தீக்களை ஒன்றாக்கினால் , அதுவே முத்தி ஆகும்.

இந்த மூன்றும் ஒன்றாக்கினாலே - " காலம் கடந்த அனுபவம் " சித்திக்கும்

இது தான் அடி ப்படையான பயிற்சியாகும்

மேலும் இது தான் எல்லா சித்திக்கும் அடிப்படையாகும்


இதுவே பெருஞ்சோதி . இந்த ஜோதியே அருளைத் தருவதால் - அப்போது அருட்பெரும்ஜோதி ஆகின்றது

இந்த நிலையிலிருந்து நாம் அனுபவ முதிர்ச்சியே சித்தியாகும்.

 
இந்த சித்திகள் தான் :
1. அஷ்டமா சித்தி

2.கரும சித்தி
3. யோக சித்தி
4 ஞான சித்தி என்று வகைப் படுத்துகிறார்கள்


5 காய சித்தி ( காய கல்பம் )
6. மரணமிலாப் பெருவாழ்வு



இந்த சித்திகள் யாவும் கைவரப் பெறுவது , ஆன்ம நிலை அடைந்து , அதன் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்று, அதன் முதிர்ச்சியினால் தான்.


வெங்கடேஷ்



No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)