Monday, March 14, 2011

Re: [vallalargroups:4005] One more Doubt on சிவ

"சிவ சிவ" - விளக்கம்.
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தர்மச் சக்கரம் 
என்ற மாத இதழில், 1988 க்கு முற்பட்ட சமயத்தில், இதன் முழு 
விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.  சுவாமி சித்பவானந்தர் அவர்களால் 
அல்லது அவரது சிஷ்யர்களால் கொடுக்கப்பட்ட விளக்கமாக இருக்கலாம்.  குருவின் திருவடி வணங்கி அவ்விளக்கத்தை யாவரும் 
பயன் பெற கீழே தந்துள்ளோம்.
சிவபிரானுக்குரிய பஞ்சாட்சர மந்திரம்,
"ஸ்தூல", "சூட்சும", "காரண" என மூன்று வகைப்படும்.
"நமச்சிவாய" என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.
"சிவாய நம" என்பது சூட்சும பஞ்சாட்சரம்.
"சிவ" என்பது "காரண பஞ்சாட்சரம்"
நாமம் காரண நிலைக்குப் போகப் போக அதற்கு சக்தி அதிகமாகிறது.
எனெவே "சிவ" என்னும் மந்திரத்திற்கு அளப்பரிய சக்தி உண்டு.
அதனை இருமுறை ஜெபிக்கும் போது இன்னும் சக்தி அதிகரிக்கிறது.
இமந்திரத்தை இருமுறை ஜபிக்க வேண்டும் என்பதை திரு மந்திரமும் கூறுகிறது.  அம்மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.
"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்.
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்.
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்.
சிவ சிவ என்னச் சிவகதிதானே".
"சிவ சிவ" என்ற இரண்டடுக்கை இடைவிடாது ஜபிப்பவர் 
சிவ சொருபம் அடைவர் என்பது மேற்கண்ட மந்திரத்தில் 
சொல்லப்பட்டுள்ளது.
பாலு குருசுவாமி. 

On Mon, Mar 14, 2011 at 12:45 PM, Krishna C kumar <krishnakumar.c.v@gmail.com> wrote:
Dear Karthikeyan,

When I started reading Thiruvarutpa, I saw songs where our vallalar says "Siva Siva" so I got the Question. I really can understand your point. But even our Aiyya says we have to understand so I am trying to understand. It is a atomic attempt of an ignorant trying to understand few things. I hope I am not trying something which is wrong. Just I was trying to follow "Meiporul kaanbhadhu arivu". Even if it is from Gnani, I think it would be good to understand. It's my smallest thought from this smallest dust.

Thank you.

With Everlasting Love,

Krishna C.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)