அன்புள்ள உயிர்,
அன்பரே முதலில் நம் வள்ளலால் தந்த ஜீவகாருண்ய பகுதியை தினமும் படியுங்கள். அதன்படி ஜீவகாரியம் செய்யுங்கள். முதலில் ஆன்ம இறுக்கத்தில் இருந்து விடுபடுங்கள். ஆன்ம உருக்கத்தை ஜீவகருண்ய செயல்கள் மூலம் பெறுங்கள். அதன் தொடர்ச்சியாக ஆன்ம நெகிழ்ச்சி ஏற்படும். பின்னர் ஆன்ம தெளிவு ஏற்படும் ஜோதி தரிசனத்தை பெறலாம். கலங்கிய தண்ணீர் தொட்டியில் அடித்தரை எப்படி உள்ளது என்று பார்க்கமுடியாது. அதுபோல் இறுக்கமாக உள்ள ஆன்மாவில் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை தருசிக்க முடியாது. ஆண்டவர் அருள் இல்லாமல் அவரை வேறு இந்த முறையிலும் தருசிக்கமுடியாது. நான் யார் எப்படி வந்தேன் என்ன செய்துகொண்டுளேன் ஏன் செய்கிறேன் என்று சத்விஷாரம் செய்யுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்துவாருங்கள். தன்னை பற்றிய விளக்கம் பெற்றால் தான் தான் தலைவனை பற்றிய விளக்கம் கிடைக்கும். விளக்கம் கிடைக்கும் வரை அருள் என்ன என்பது தெரியாதவரை ஆற்றல் என்று தான் சொல்லவரும். விஞ்ஞானம் வேறு மெய்ஞானம் வேறு. இரண்டும் இரு துருவங்கள். நம்முள் இருக்கும் ஆண்டவரை தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அருட்பெரும்ஜோதி ஆண்டவரை தவிர சொர்குருக்களால் இதை விளங்கவைக்க முடியாது. சிவத்தை தவிர வேறு குரு இல்லை என்பதை உணர்ந்து அந்த சிவத்திடம் முழுமையான அன்பும் நம்பிக்கையும் வையுங்கள் சொர்கவாசல் கதவு தானே திறக்கும் இது சத்தியம் எதை தவிர வேறு பாதைகளில் சென்றால் கால விரயமும் மரணமும் மறுபிறவியும் வரும். இதை நான் சொல்லவில்லை நம் முன்னோர்கள் சித்தர்கள் சொல்லியுள்ளார்கள். ஆண்டவர் உங்கள் மேல் உள்ள கருணையால் இதை என் மூலம் அறிவிக்க செய்துள்ளார் என்பதை உணர்க.
பாட்டுவிப்பவனும் பணிவிப்பவனும் கூட்டுவிப்பவனும் செய்விப்பவனும் அந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவரே என்று உணர்ந்து அவனே கதி என்று இருந்தால் தானே எல்லாம் விளங்கும். த்யானம் தான விளங்கும். அனுபவங்கள் தானே விளங்கும். தன் முயற்சியால் விளக்கம் கிடைக்காது என்பதை உணர்க. ஜோதியை காணுவது உடற்பயிற்சி போல் இல்லை. முதலில் ஆசை அரவேண்டும். நாளைக்கே ஆண்டவர் வந்து வா என்னுடன் என்று அழைத்தால் நாம் எத்தனை பேர் உடனே அவருடன் இந்த உலகவாழ்க்கையை விட்டு செல்ல தயாராக இருக்கிறோம் சொல்லுங்கள். முதலில் அன்புசெயுங்கள் இதையெல்லாம் பெறாமல் செய்யும் எந்த பயிற்சியும் பலன் தராது.
இதனால் தான் நம் வள்ளலால் அடைந்த பேற்றை எத்தனையோ பயிற்சி மையங்கள் இருந்தும் அதன் தலைவர்களே ஞானதேகம் பெற்று இறவாநிலை அடையமுடியவில்லை பின்னர் எந்த தொண்டரால் பெற முடியும் என்பதை உணர்க . சுத்த சன்மார்கத்தை முதலில் புரிந்துகொள்வோம் பண்படுவோம் இறவாநிலை பெற முயற்சி செய்வோம்.
இப்படிக்கு
உயிர்.
On Fri, Nov 12, 2010 at 8:33 PM, sundar krishnan <sungayu7578@yahoo.com> wrote:
All
With the blessings of our guru vallalar I recently started my meditation. To learn meditation, I joined the vethathiri maharishi's group (I searched for vallar group here in NJ but in vain). Though meditation is main focus of vethathiri maharishi, he himself realized vallalar in his life time. Vallalar is within all of us. The maharishi group says focus on "veli" - the empty space while meditate - that is considered as "Arut-Perattral". When I meditate I focus on "Jyothi" our inner "Arut perumjyothi". God is everywhere either "Veli"- magasakthi, or "Oli" - Arutperumjyothi. Even though I realize this, I do get confused at times. Can any one help? Forgive me if I ask anything wrong in this.
Thanks
Gayathri Sundar
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment