Monday, June 23, 2014

[vallalargroups:5484] மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2

மூளை - தலைமைச் செயலகம் - பாகம் 2

1. மூளையும் - பிரபஞ்ச சக்தியும் :

நாம் ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையெனில், நமக்கு உற்சாகம் , சுறுசுறுப்பு எல்லாம் போய்விடுகின்றது - ஏன் ??

உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கவில்லை . நாம் தான் தினமும் 3 வேளை உணவு சாப்பிடுகின்றோமே என்று கேட்டால், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை - இந்த உடலுக்கு பிரபஞ்ச சக்தியும் மிகவும் அவசியம் ஆகும்

அதனால் தான் புனித நூல் பைபிள் : " Man does not live by bread alone" என்று சொல்கின்றது

நாம் தூங்கும் போது , மூளை ஓய்வெடுத்துக் கொள்கின்றது - அப்போது அது பிரபஞ்சத்திலிருந்து ( cosmic space ) சக்தியை கிரகித்துக் கொள்கின்றது - அதனால் உடலுக்கு தேவையான சக்தியும் - சுறுசுறுப்பும் , தெம்பும் , உற்சாகமும் கிடைத்துவிடுகின்றது .



இதை கண்டறிந்த ஞானிகளும் ரிஷிகளும் , தூங்காத தூக்கம் என்ற சாதனை செய்து - அதன் மூலம் சிதாகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியைக் கிரகித்து , உடலுக்கு தேவையான சக்தியைப் பெற்று, ஊண், உறக்கம் , ஓய்வு இல்லாமல் தங்கள் சாதனையில் முன்னேறி, தங்கள் லட்சியத்தை அடைந்தனர்

ஞானிகள் , தங்கள் சாதனையில், மனதை - மூளையை அமைதி - ஓய்வடையச் செய்து , இந்த சக்தியைப் பெற்றனர் என்பது உறுதி .

அதனால் நாமும் , அதிக நேரம் சாதனைக்கு செலவிட்டால், உணவு, உறக்கம் , தாகம், ஓய்வு இல்லாமல் வாழலாம்.

இது எப்படி இருக்கிறதுவென்றால் : சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சக்தி தேவையை குறைப்பதுபோல், பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி, நாம் உணவு, நீர், தூக்கம் மீதுள்ள சார்பு நிலைமையை மாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்

புறத்திலுள்ள சூரியன் - ஆன்ம சூரியன் ஆகும்



2. கோவில் கருவறை அமைப்பு :

தமிழ் நாட்டில் , அனேகமாக எல்லா கோவில்களிலும் , மூலஸ்தானம் - மூலவர் - ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பார். அதன் உண்மையான தாத்பரியம் யாதெனில் :

ஆயிரங்கால் மண்டபம் - மூளை
மூலவர் - ஆன்மா

மூளையின் நடுவே உட்புறத்தில், ஆன்மா ஆழமாக வைக்கப்பட்டிருக்கின்றது

3. நாம் திருவடிக் கொண்டு பயிற்சி செய்ய செய்ய , இருள் சூழ்ந்துள்ள செல்கள் எல்லாம் , ஒளி மயம் ஆகி, கெட்ட குணங்கள் ஒழிந்து , மேலான குணங்களான அன்பு, கருணை, தயவு ஓங்கி வளரும் - இதனால் சத்துவ குணம் தழைத்து சாந்தம் , அமைதி , மௌனம் எல்லாம் வரும்



வெங்கடேஷ்


Saturday, June 21, 2014

[vallalargroups:5483] கல்பம் - கல்ப தேகி - ஆண்டுகள் விவரம்

கல்பம் - கல்ப தேகி - ஆண்டுகள் விவரம்

கிருத யுகம்         - 21600 * 80 = 1728000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம்     - 21600 * 60 = 1296000
த்ரேத யுகம்         - 21600 * 40 = 864000
கலி யுகம் -           21600 * 20 = 432000
                                        ==========
  மொத்தம்                              4320000 மனித ஆண்டுகள்
                                         =========

இதில் , 21600 என்பது நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சின் எண்ணிக்கை ஆகும்

ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தால் - பிரம்மனுக்கு அரை நாள் ( ஒரு கல்பம் )

ஆக 4320000*1000 = 432 கோடி வருடங்கள் என்பது பிரம்மனுக்கு அரை நாள்

864 கோடி வருடங்கள் என்பது பிரம்மனுக்கு ஒரு நாள்

864 கோடி வருடங்கள் * 365 நாட்கள் = பிரம்மனுக்கு ஒரு வருடம்

இப்படி 100 வருடங்கள் ஆனால், அது தான் பிரம்மனின் ஆயுள்

 

கல்ப தேகிகளின் ஆயுளின் விவரங்கள் :

1 விஷ்ணுவின் ஆயுள் = இரு மடங்கு பிரம்மாவின் ஆயுள்

2 ருத்ரனின் ஆயுள் = இரு மடங்கு விஷ்ணுவின் ஆயுள்

3 மஹேஸ்வரனின் ஆயுள் = இரு மடங்கு ருத்ரனின் ஆயுள்

4 ஸதாசிவனின் ஆயுள் = இரு மடங்கு மஹேஸ்வரனின் ஆயுள்

 


வெங்கடேஷ்





[vallalargroups:5482] தேகமும் தேசமும் - பாகம் 3

தேகமும் தேசமும் - பாகம் 3

1. சென்னிமலை :
இறைவன் " சிரம் " என்னும் சென்னியில் இருக்கின்றான் என்பதை காட்ட ஏற்பட்ட ஊர்.


2. அமிர்தசரஸ்: அமுதமாகிய ஆன்மா நம் சிரசில் இருக்கின்றது என்பதை விளக்க ஏற்படுத்தப்பட்ட ஊர் - இங்குள்ள பொற்கோவில் - ஒரு குளத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கின்றது

பொற்கோவில் = ஆன்மா - அதுவும் நீரால் சூழப்பட்டுள்ளது


3. கடலூர் : ஆன்மாவின் இருப்பிடத்தை விளக்க வந்த ஊர். கடல் என்பது சிதாகாயக் கடலைக் குறிக்கும் - ஆன்மாவின் இருப்பிடம் நீரால் சூழப்பட்டுள்ளது

கடலூர் = ஆன்மாவின் ஊர்


4. கைலாயம் : இந்தவிடம் பனி படர்ந்து குளிர்ந்து இருக்கும் - ஆன்ம நிலையும் - அதன் மேலுள்ள நிலைகளும் மிகவும் குளிர்ந்து இருக்கும் என்பதால் - இமயத்தில் இருக்கும் பனி படர்ந்த இடத்தை கோடிட்டு காட்டி - இறைவன் இருக்கும் இடம் இவ்வாறு இருக்கும் என்று விளக்கி உள்ளனர் நம் ஞானியர்களும் - ரிஷிகளும்


5. வெள்ளிங்கிரி மலை ( தென் கைலாயம் ) : கைலாயத்தின் விளக்கம் இதற்கும் பொருந்தும்


6.ஆலப்புழா / ஆல்வே ( கேரளம் ) : குண்டலினியின் இருப்பிடத்தையும் - ஆன்மாவின் இருப்பிடத்தையும் காட்ட வந்த ஊர்
மதுரைக்கும் ஆலவாய் என்று மற்றொரு பெயர் உண்டு - அதனின் விளக்கம் இதற்கும் பொருந்தும்
மதுரையின் விளக்கம் இதன் முன் கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கின்றது


7. குருக்ஷேத்திரா : இந்த ஊர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது - இந்த ஊரில் தான் பாரத யுத்தம் நடந்ததாகக் கூறப்படுகின்றது . குருக்ஷேத்திரம் என்றால் உடம்பைக் குறிக்கின்றது - உடம்பில் தான் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் பெரும் போர் நடக்கும் - இதனை விளக்க வந்த ஊர்



8. திரிகோண மலை ( இலங்கை ) : மூன்று சூக்குமப் பொருட்களின் கலப்பினால் ஏற்படும் சுழிமுனை அனுபவத்தை விளக்க வந்த ஊர் - மூன்று என்பது மலை - நதி - என்று பலவாறு கூறப்பட்டிருக்கின்றது


9. குற்றாலம் : ஒரு சிறிய விஷமுள்ள துவாரத்தில் ஒளி சதா அருவி போல் கொட்டிய வண்ணம் இருக்கும் அனுபவத்தை - ஒரு அருவிக்கு பெயர் சூட்டிக் காண்பித்து இருக்கின்றார்கள்

10. திருவொற்றியூர் : இறைவன் நம் உடம்பிலும் உயிரிலும் " ஒட்டி " இருக்கின்றான் என்பதை காட்ட ஏற்படுத்தப்பட்ட ஊர்.

 

 


வெங்கடேஷ்



Friday, June 20, 2014

[vallalargroups:5481] ஆன்மா

ஆன்மா :

ஆன்மாவின் வேறு சில பெயர்கள் :

1. முருகன்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் - ஆன்மா இருப்பதுவும் மலை மீது தான் - சாமானியமாக யாரும் ஏற முடியா மலை

2. ஆன்மா மௌனத்தில் இருப்பதால் - மௌன குரு தக்ஷிணாமூர்த்தி

3. ராமர்

4. கிருஷ்ணர்

5. இயேசு கிறிஸ்து

6. அகத்தியர் : உபநிஷத்தில் " புருஷன் - கட்டை விரல் அளவு " என்று வர்ணிக்கப்பட்டுள்ளார் - புருஷன் என்பது ஆன்மாவைக் குறிக்கும்
அகத்தியர் கட்டை விரல் அளவு உள்ளார்


7. கற்பகம்

8. கல்பதரு - கல்பவிருக்ஷம்

9. அமுதகலசம் - Bowl of nectar- elixir of life

10. காமதேனு

11. சர்வரோக நிவாரணி - Panacea

12. அமுத சுரபி - அக்ஷய பாத்திரம்

13. SuperMan : இவரது தேகம் - சதை - தோல் - நரம்புகளால் ஆனது அல்ல - இவரது கண்கள் சுவரையும் தாண்டி எல்லாம் காண வல்லது - தோலையும் ஊடுருவி உறுப்புகளை காண வல்லது- இவருக்கு நிறைய தயவு இருக்கின்றது - உலக மக்களின் துயரை துடைக்க வருகின்றது

கற்பனைப் பாத்திரம் என்றாலும் அதில் உண்மை இருக்கின்றது


வெங்கடேஷ்

[vallalargroups:5480] வைகுண்ட ஏகாதசி - சன்மார்க்க விளக்கம்

வைகுண்ட ஏகாதசி - சன்மார்க்க விளக்கம்
 
இந்தப் பண்டிகை வைணவர்களால் வெகு விமரிசையாகக் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது

இந்த நாளில், நாம் அனைவரும் இரவில் தூங்காமல் "விழித்திருந்து ,  பரமபத ஆட்டம் " ( ஏணியும் பாம்பும் உள்ள ) ஆட வேண்டும் என்றும், அதிகாலையில் கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபட வேண்டும் என்றும் கூறுவர்

எதற்காக இந்த விளையாட்டு - ஏனிந்த சம்பிரதாயம் ??

இதில் பெரிய அர்த்தம் பொதிந்திருக்கின்றது

ஏகாதசி என்றால் - அமாவாசையிலிருந்து 11 வது நாள் என்று பொருள்
ஏகம் - ஒன்று
தசி - பத்து
ஏகாதசி - பத்து + ஒன்று = பதினொன்று 11

துவாதசி - பனிரெண்டாவது -12 வது - துவாதசாந்த நிலை - ஆன்மாவின் இருப்பு நிலை

ஏகாதச நிலையில் , தங்கத்தாலான கதவு ஒன்று நம் கீழ் உலகத்தையும் - மேல் உலகத்தையும் பிரிக்கின்றது
கீழ் உலகம் = பணம் - பதவி - அதிகாரம் - செல்வம் - ஆசை - காமம் - குரோதம் என்று இதர வகையறாக்கள்

மேல் உலகம் = அமைதி - சாந்தம் - அறிவு - ஒழுக்கம் என்று இதர வகையறாக்கள்

நாம் , நம் சாதனைகள் மூலம். , ஏகாதச நிலை அடைந்து , திருவடியின் சகாயத்தினால், கதவை திறந்து , உள்புகுந்து துவாதசாந்தத்திலுள்ள ஆன்மாவை ( பெருமாள் ) தரிசனம் வேண்டும் என்பதே இந்தப் பண்டிகை - கொண்டாட்டத்தின் நோக்கம் , இலட்சியமும் கூட.


சாதனையில் " விழிப்பு" நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் - நாம் இரவில் விழித்து இருக்க வேண்டும் என்பதாக நம் முன்னோர் வைத்துள்ளனர்

தாயம் வைத்து பரமபத விளையாட்டு என்பது = இந்த உலக வாழ்வே ஒரு மாய விளையாட்டு என்பதாகவும்
ஏணி மீது ஏறுதல் - நல் வினைகள் என்பதாகவும்
பாம்பு கடித்தல் - தீய வினைகள் என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும்


அந்த கட்டங்களைத் தாண்டிச் சென்று பரமபதம் அடைதல் என்பது - இந்த மாய உலக வாழ்வில் இருந்து விடுபட்டு , ஆன்ம நிலை அடைதல் என்பதாகும் - இதுவே அதன் உண்மைப் பொருளாகும்

அகத்திலே ஆற்ற வேண்டிய இந்த மாபெரும் செயலை - நினைவுபடுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது

நாம் தும்மும் போது ' ஹரே ராம - ஹரே கிருஷ்ணா " என்று பகவான் நாமத்தை சொல்கின்றோம் - ஏன் தெரியுமா ??

தும்மும் போது அந்த தங்கக் கதவு சிறிது நேரம் திறக்கிறது - அதனால் உள்ளிருக்கும் ஆன்மாவின் பெயரை உச்சரிக்கச் சொல்லியிருக்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித நூலான " பைபிளில் - தும்மும் போது கடவுள் பெயரை உச்சரி " என்று கட்டளை இடுகின்றது

உலக சமயங்களிடையே எவ்வளவு ஒற்றுமை ???

நாம் தான் வேற்றுமை பாராட்டி , உடலையும் மனத்தையும் பாழாக்கிகொள்கின்றோம்

ஜீவனானது மாயை கன்மம் கூடிய உலக வாழ்விலிருந்து மீண்டு - ஆன்ம நிலை ( பரம பதம் ) அடைவது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் பண்டிகை தான் வைகுண்ட ஏகாதசி


வெங்கடேஷ்





Thursday, June 19, 2014

[vallalargroups:5479] SUN and MOON


SUN and MOON
 
we all know that sun has its own light and moon doesnot have its own light,  just  reflects sun's light in the night.
 
How is that suns such a hot light is converted into COOL light by moon in the night ??
 
whats the process by which this conversion happens ???
 
without unlocking the secret behind this mystery , its quite sure,  one cant attain triple deathless body ???
 
anyone knowing , can shed light upon this
 
 
 
  
BG Venkatesh

[vallalargroups:5478] குண்டலினி யோகம்

குண்டலினி யோகம்

இந்த யோகம், நம் ஆன்மீக சமுதாயத்திலே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்

அனேக மக்கள் , குண்டலினி யோகம் பயில்வதாக நாம் கேட்டிருப்போம்

பட்டப் படிப்பில் , எப்படி specialisation உள்ளதோ, அவ்வாறு, யோகத்தில் , specialisation , குண்டலினி யோகம் என்று கூட சொல்லலாம்.

தற்கால நம்பிக்கைகள் :

அனேக குருமார்கள் , நம் சம காலத்திலும் கூட, குண்டலியின் இருப்பிடம் முதுகுத் தண்டின் கீழ் உள்ள மூலாதாரம் என்றே உலகிற்கு அறிவித்துள்ளனர்

அதனை விழிக்க வைக்கும் முறையானது யாதெனில் : மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் என்றே கூறிச் சென்றுள்ளனர்

மேலும் , அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேற்றி, கடைசியில், ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் என்பர்


மேலும் , சில குருமார்கள், இந்த யோகம் ஏதோ கடினமான கணக்கு ( நிறைய படிகள் ) போன்று பாவித்து, அதனை எளிமைப் படுத்துதல் போன்று, இதனை SKY - Simplified Kundalini Yoga  என்று கற்றுகொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்ற வேண்டும் - பயிற்சி முடிந்த பின் - அதை கீழிறக்கி கொண்டு வந்து மூலாதாரத்தில் சேர்த்து விட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்றுவது கடினமாக இருக்கின்றது ( நிறைய படிகள் ) என்பதால் , இதனை நேராக ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் தான் SKY என்று கற்றுத் தந்தனர்


உண்மை : இருப்பிடம் மற்றும் விழிப்பிக்கும் முறை

பாரதத்தில் , கண்ணன், யமுனை நதியின் அடியிலிருந்து ஒரு மிகப் பெரிய நாகத்தை , எழுப்பிக் கொண்டு வந்து , அதன் மீது நடனம் ஆடுவான் - " காளிங்க மர்த்தனம் - நடனம் " என்று உலகமே ஒவியங்களாக வரைந்து அதை தலையில் வைத்துப் போற்றுகின்றது

அந்த நாகம் தான் - குண்டலினி

தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = " ய + முனை " என்று வரும் - இது சுழிமுனையைக் குறிக்கும் - " ய" என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும்

எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது - முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல

வள்ளலார் : " எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே " என்று அகவலில் பாடுகின்றார் - இங்கு குளம் என்பது நெற்றி ஆகும்

குளம் என்பது நீர் நிறைந்தது - யமுனை நதியும் நீர் நிறைந்தது

ஆகவே , குண்டலினி , ஆன்மா இருக்கின்ற நெற்றியில் இருக்கின்றதே அல்லாது மூலாதாரத்தில் அல்ல

குண்டலினி மீது கண்ணன் ஆடும் அழகினைத் தான் - " நாகஜோதி - நாகமணி - நாகரத்தினம் " என்ற பெயர்களில்லெல்லாம் வழங்குகின்றோம்


அசைப்பிக்கும் முறை : " சாலனம் " என்னும் தந்திரத்தாலல்லாது வேறெதனாலும் குண்டலினியை அசைக்கவோ விழிப்பிக்கவோ முடியாது - இந்த தந்திரத்தை தக்க குரு மூலம் தெரிந்து பயில வேண்டும்

மேலும் திருவடி உதவி இல்லாமல் இதனை செய்ய முடியாது என்பதுவும் உறுதி

குண்டலினியை மேலேற்றுவதும் இல்லை கீழிறக்குவதும் இல்லை - அது ஒரே இடத்தில் , தன் விஷ முகத்தால் , பிரம்மத்துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது

சிதாகாயப் பெருவெளிக்கு போகின்ற நம் பாதையை மறைத்துக் கொண்டிருக்கின்றது

குண்டலியின் இருப்பிடமாக இந்த உலகினில் அடையாளமாக காட்டப்பட்டிருக்கும் ஊர்:

1. மதுரை - துவாதசாந்தம்

மதுரையில் நடந்த 64 திருவிளையாடல்களில் ஒன்று - ஒரு பெரிய நாகம் இந்த ஊரின் எல்லையை சுற்றி இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள் - அந்த நாகம் - குண்டலினி

2. ஆலப்புழா - கேரளா :

ஆலம் = விஷம்
புழா - சிறிய துவாரம் - பிரம்மத்துவாரம்

சாதகன், சாதனைகள் மூலம் துவாதசாந்த நிலை அடைந்து , குண்டலினியை அப்புறப்படுத்தி விட்டு, மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் - தகுதி உடைய சாதகர்களுக்கு குண்டலினியும் வழி விட்டு நிற்கும்


வெங்கடேஷ்



Tuesday, June 17, 2014

[vallalargroups:5477] அசுவமேத யாகம் - சன்மார்க்க விளக்கம்


அசுவமேத யாகம் - சன்மார்க்க விளக்கம்

 இந்த யாகம் , இருக்கும் யாகங்களிலேயே சிறந்த யாகம் என்று போற்றப்படுகின்றது

இந்த யாகம் செய்வதற்கு, பெரிய தகுதிகள் இருக்க வேண்டும் என்பர்
ஒரு ராஜா இதனை செய்தால், அவர் " ராஜாக்களுக்கு ராஜா - மஹாராஜா - சக்கரவர்த்தி" ஆகிவிடுவார்

பாண்டவர்கள் கௌரவர்களை பாரத யுதத்தில் வென்ற பிறகு இந்த யாகம் செய்து , யுதிஷ்டிரர் " சக்கரவர்த்தி " ஆக மகுடம் சூட்டிக் கொண்டார்

ஒரு அலங்கரிக்கப்பட்ட குதிரை - " அசுவம் " யாகத்தின் செய்தியை தாங்கி, நாட்டிலுள்ள எல்லா இடத்திற்கும் அனுப்பி வைப்பர் - மற்ற எல்லா ராஜாக்களும் அந்த அமைதி செய்தியை ஏற்றுக் கொண்டு - அவரை - மஹாராஜாவாக ஏற்றுக் கொள்வர்

இதன் மூலம் எல்லா சிற்றரசரசுகளும் இணைந்து ஒரு பெரிய தேசமாகும் - சிற்றரசரசர்களுக்கு பாதுகாப்பும் ஆகும்

திமிங்கலம் , சிறிய மீனை விழுங்கி விடுவது போல், பெரிய தேசங்கள் , சிற்றரசுகளை வீழ்த்தி , தன்னோடு இணைத்துக் கொள்ளும்

இந்த ஏற்பாட்டால் , சிற்றரசுகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்


அதே சமயம் , இதனுள் மிகப் பெரிய உட்பொருள் பொதிந்திருக்கின்றது

அசுவமேத யாகத்தின் உட்பொருள் :

அசுவ (குதிரை ) = மூச்சுக் காற்று - அபான வாயு , மேத = சுழிமுனை நாடி.
சுழிமுனை நாடி என்பது இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளுக்கு இடையில் ஒடும் நடு நாடியாகும்

இந் நாடி சாமானியர்களுக்கு இயங்காமலும் , யோகிகளுக்கும் , விழிப்பு நிலையில் இருப்பவர்களுக்கும் . தன்னை உணர்ந்த சித்தர்களுக்கும் நன்கு இயங்கியபடியும் இருக்கும்

அசுவமேத யாகம் என்பது - அபான வாயுவை சுழிமுனை நாடி வழியாக ஏற்றி , பிரமத்துவாரத்தை திறப்பதாகும்

இந்த செயற்கரிய செயலை, மாபெரும் சாதனை செய்வதன் மூலம் உடலை நம் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட முடியும்

இதனை ஆற்றுவதன் மூலம் , இதுகாறும் மனதிடம் இருந்த உடலை இயக்கும் சக்தி மற்றும் கட்டுப்பாடு , ஆன்மாவிற்கு வந்துவிடும் என்பது திண்ணம் -

மனம் ஆட்சி செய்தால் , முடிவில் கல்லறைக்கே போவார் - அறிவு ஆண்டால் முத்தேகச் சித்தி பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வு அடைவார்

நம் சமகாலத்து அனேக மகரிஷிகளும், குருக்களும், இந்த பெரும் செயலை ஆற்ற முடியாது போய் , மண்ணுக்கு இரையாகிப் போனார் என்பது உண்மை

இந்த சூக்குமக் கலை மிகவும் இரகசியமாக வைத்துள்ளனர் நம் ரிஷிகளும் யோகியர்களும் - மேலும் இதனை தகுதி உள்ளவர்களுக்கு அவர்களாகவே வந்து கற்றுக்கொடுப்பர் என்று கூறப்படுகின்றது

1. புராணம் : அசுவம்

உட்பொருள் : மூச்சு - அபான வாயு

2. புராணம் : மேதா

உட்பொருள் : சுழிமுனை நாடி - நடு நாடி

3. புராணம் : பாண்டவர்கள்

உட்பொருள் : பஞ்ச இந்திரிய சக்திகளுடன் கூடிய ஆன்மா

4. புராணம் : தேசம்

உட்பொருள் : தேகம் - உடல்

5. புராணம் : சிற்றசர்கள்

உட்பொருள் : உடல் உறுப்புகள்

6. புராணம் : குதிரை நாடு முழுதும் வலம் வருதல்

உட்பொருள் : அபான வாயுவைக் கொண்டு உடல் முழுமையும் இணைத்து விடுதல் - ஆன்மா உடலின் கட்டுபாட்டை தன் ஆட்சிக்கீழ் கொண்டு வருதல்

7. புராணம் : தருமர் சக்கரவர்த்தியாக மகுடம் சூட்டிக் கொள்ளல்

உட்பொருள் : ஆன்மா உடலை ஆளும் ராஜா ஆதல்


பெரிய கருத்துக்களை கதைகளாகக் கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர் - ஆனால் அதன் உண்மை வெளிவராமல் என்றும் கதைகளாகவே இருப்பது வருந்ததக்கது


இந்த பயிற்சியின் மூலம் மட்டுமே உடலை நம் கட்டளைகளுக்கு அடி பணிய வைக்க முடியும் - மேலும் 36/96 தத்துவங்களை நம் வசப்படுத்த முடியும்

 
 
வெங்கடேஷ்

Monday, June 16, 2014

[vallalargroups:5476] திருப்பாற்கடல் கடைதல் - சன்மார்க்க விளக்கம்

திருப்பாற்கடல் கடைதல் - சன்மார்க்க விளக்கம்


இதிகாசம் - புராணக்கதை : ஆதி காலத்தில், திருப்பாற்கடல் என்றவொரு கடலை , தேவர்கள் ஒரு பக்கமும் , அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடைந்தார்கள் என்றும்,

முதலில் விஷம் வந்ததாகவும் , பின் லக்ஷ்மி, அமுத கலசம், போன்ற அற்புத பொருட்கள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு


உண்மை விளக்கம் :

உலகினில் பாற்கடல் என்றவொரு கடலே இல்லை எனலாம் - சிதாகாசப் பெருவெளியையே பாற்கடலாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது. அறிவியல் இதனை - பால்வெளி என்று அழைக்கின்றது - என்னவொரு ஒற்றுமை ???

சாதனைகள் மூலம் , திருவடி கொண்டு சிதாகாசப் பெருவெளியை அடைந்து , அதனை , குரு சொல்லிகொடுத்த " திருவடி " வித்தை மூலம் கடைதலை செய்தால் , அதிலிருந்து எல்லா பரசெல்வங்களும் வெளிப்படும் - திருவடி கொண்டு செய்யப்படும் இந்த தந்திரத்திற்கு " சாலனம் " என்று பெயர்.

சிதாகாசப் பெருவெளியிலிருப்து வெளிப்படும் திவ்விய பொருட்கள் :

1. லட்சுமி
2. காமதேனு - பசு
3. அமுதக் கலசம்
4. நினைத்ததைக் கொடுக்கும் கல்ப விருக்ஷம்

மேற்கூறியவைகள் யாவும் ஆன்மா மற்றும் திருவடியின் வெவ்வேறு அம்சங்களும், பிரதிபலிப்புகளாகும்


இவைகள் யாவும் இறைவனால் , தகுதி உடைய சாதகருக்கு வழங்கப்படும் பர உதவிகளாகும் - இவைகள் கொண்டு அவன் வாழ்வை பசி, காசு, பணம், போன்றவற்றிற்கு செலவிடாமல் , சாதனையிலேயே முழுவதுமாக இறங்கி , பசி, தாகம், நித்திரை, நோய், வினைகள் , மலங்கள் எல்லாவற்றையுமே வென்று , மரணமில்லாப் பெருவாழ்வு பெற கொடுக்கப் படும் பர உதவிகளாகும்


ஒரு சாதகன் திருவடி கொண்டு , ஆன்ம நிலை அடைந்து விட்டாலே , அவன் மரணத்தை வென்றுவிட்டதாக கருதலாம் - அவன் பொன்னம்பலம் - சிற்றம்பல வெளிகளுக்குள் நுழையும் தகுதி பெற்றுவிட்டதாகவும், முத்தேகச் சித்தி பெறத் தகுதி பெற்றுவிட்டதாகவும் கருதலாம்.


வெங்கடேஷ்

[vallalargroups:5475] மூளை - தலைமைச் செயலகம்


மூளை - தலைமைச் செயலகம்

நாம் எல்லோரும் பள்ளியில் மூளை பற்றி அறிவியல் பாடத்தில் படித்திருப்போம்

அது - பெரு மூளை - cerebrum
சிறு மூளை - cerebellum
முகுளம் -  medulla oblongata  - என்று மூன்று பாகங்களாக இருக்கின்றது என்று அறிவோம்

மேலும் நாம் அறிந்த ஒன்று இந்த சிரசிலுள்ள பாகம் தான் தலைமைச் செயலகமாக செயல்பட்டு , உடலிலுள்ள எல்லா பாகங்களை திறம்பட செயல்பட ஆணைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது

மூளை - grey matter என்றும் , மூன்றாயிரம் கோடி செல்களாலானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது

மூளை தான் உடலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது
உடலில் தோன்றும் எல்லா உணர்ச்சிகளுக்கும் இது தான் பிறப்பிடம் - பசி - தாகம் - தூக்கம் - பாலுணர்வு எல்லாவற்றைவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது

மூளையானது நாம் தூங்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் சதா இயங்கி , கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது
அதன் கட்டளைகளுக்கேற்ப உடலும் சதா அசைந்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது

மூளை - மனதின் பருப்பொருள் - brain is the physical of the mind

மனதை அடக்குவது என்பது உண்மையாக என்னவெனில் - மூளையிலுள்ள
மூன்றாயிரம் கோடி செல்களும் அமைதியடைந்து , வேலை செய்யாமல் இருப்பதுவாகும்

இந்த செயலை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது உலகின் மிகப் பெரிய - செயற்கரிய - மகத்தான செயலாகும்

இந்த நிலையில் எந்த எண்ணங்களும் எழாமலும், எல்லா உருவங்களும் கரைந்து போய், அருவ நிலைக்கு மாறிவிடும்.
அந்நிலையில் , மனதினால் எதனையும் பற்ற முடியாது

திருவடிகளைக் கொண்டு மட்டுமே இந்த மாபெரும் சாதனையை செய்ய முடியுமேயல்லாது வேறொன்றினாலும் முடியாது என்பது திண்ணம்

திருவடிகளைக் கொண்டு சாதனை செய்யுங்கால், இந்த மூளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து , அதன் இயக்கம் மடை மாறி, பசி, தாகம், காமம் , நித்திரை ஆகியவைகள் படிப்படியாக குறைந்து வரும்

இந்த மூளையை இடமாகக் கொண்டு தான் மாயை - கன்மம் ஆகிய மூன்று மலங்கள் தத்தம் வேலை செய்து , ஜீவர்களை உலக விஷயத்தில் ஆழ்த்தி, அறிவை மயக்கி, அறிவை உதயமாகாதவாறு பார்த்துக் கொள்கின்றது

மூளையின் செல்களில் இருள் பதிந்திருப்பதால், தூக்கம், சோர்வு, பாலுணர்வு , மறதி யாவும் நமக்கு உண்டாகின்றது - இதனை ஒளிமயமாக்கிவிட்டால், இவைகள் யாவும் ஒழிந்துவிடும்

இதனைத் தான் 1008 இதழ்க் கமலம் மேல் நோக்கி அலர்தல் என்று குறிப்பாக உணர்த்தியிருக்கின்றனர் ஞானியர்

இது நடந்துவிட்டால் , மனமானது உலக வாழ்வு நோக்கி ஓடாமல் , அறிவை - ஆன்மாவை நோக்கி திரும்பும்

இதற்கு திருவடி ஒன்றே துணை

இந்த மூளையை அமைதிப்படுத்திவிட்டால் , உடலின் இயக்கம் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்

இந்த மூளையின் உட்புறத்தில் , நவக்கிரகங்கள் சூக்குமமாய் சுற்றி நின்று ( நாம் பிறக்கும் சமயம் , இருந்த நிலையில் ) , நம் வினைகளுக்கேற்ப , மூளையை செயல்பட வைத்து , நம் வினைகளை நாம் அனுபவிக்க வைக்கின்றது

மூளையில் " கால இயந்திரம் - TIME machine " வைக்கப்பட்டிருக்கின்றது.
அது செயல் பட, செயல் பட , நமக்கு ( உடலுக்கு ) வயதாகிக்கொண்டே போகின்றது - ஆயுள் குறைந்துகொண்டே போகின்றது

மரணத்தை வெல்வது என்பது - இந்த காலச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்தச் செய்வது ஆகும்


வெங்கடேஷ்





















bg venkatesh

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)