Monday, March 11, 2013

[vallalargroups:4798] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !



---------- Forwarded message ----------
From: ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
Date: 2013/3/8
Subject: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !


 
 
                                        
                      
                           பசித்திரு !                  தனித்திரு !           விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே நாமும் 
   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்று கொள்வோம்
 
     1,   வாழ்க்கையில் எடுத்தோமே வாடகை வீடு!
           வாழ்த்தியே வள்ளலை நெஞ்சினில் கொண்டாடு !
           வாழ்ந்திட நிலையானஜோதி எந்நாளும் தேடு !
           வாழ்க்கைக்கு அன்பே அருள்மொழி நாடு ! 
       
     2,   எண்பத்தி நான்குலட்ச ஜீவ பேதம் !
           ஜென்மங்கள் எடுத்து பிறந்தது போதும் !
           தொன்னூற்  றாரு  தத்துவ  வேதம் !
           கண்ஜோதி காண்பவர் ஞானிகள் எப்போதும் !
  
    3,   என்னென்ன உண்டாலும் உதவாத கட்டை !
          மண்ணில் எவருக்கும் ஆகாத சட்டை !
          அன்பில்லா ஜென்மங்கள் கருவில்லா முட்டை !
          உன்னுயிர் போனாலே நினைப்பாரோ கூட்டை !
 
    4,  ஓட்டை ஒன்பது உண்டான கோட்டை !
         கூட்டை விட்டுயிர்போனால் அழிந்திடும் கட்டை !
         கெட்ட புலனென்னும் ஐந்தான மாட்டை !
         கட்டி விட்டால் நாம் ஆளலாம் நாட்டை !
 
    5,  ஆணவம் மாயை  கன்மத்தால் வீடு !
         ஞானத்தால்  அஞ்ஞானம் அழிந்திட நாடு !
         மனம் புத்தி ஆங்காரம் சித்தமே கேடு !
         குணமூன்றும் தனைவிட்டு முக்தியை தேடு !
 
    6,  வளமுடன் வாதபித்த சிலோத்துமம் கூடி !
         வளமான எழுபத்தி ரெண்டாயிரம்  நாடி !
         நலமான இவ்வுடலில் எங்கெங்கும் ஓடி !
         நலம்கெட்டு உயிர்போனால் துடிக்காது நாடி !
 
    7,  நாலாயிரம் நானுற்றி  நாற்பத்தி எட்டு !
        நலமான இவ்வுடல்   வியாதியால் கெட்டு!
        காலத்தில் மூப்புவை உடலினில் கூட்டு !
        ஞாலத்தில்  நலம்பெற நன்மைசெய்து காட்டு !
 
   8,  உருவ உடலுக்கு உயிர் இருந்தால் கெட்டி !
        கருமவினை மூவசையால் எந்நாளும் மாட்டி !
        வரும்போதே வந்தது இதிலைந்து குட்டி !
        அருள்ஜோதி காணமல் அலையுதே முட்டி !
   
   9,  இருபத்தோ ராயிரம் அறுநூறு சுவாசம் !
        வரும்நாளில் இரவுபகல் இதுவும் பொய்வேஷம்!
       கருமுற்றி வந்தது தாய்தந்தை  பாசம் !
       ஒருநொடியில் உயிர்போகும் உன்னுடம்பு நாசம் !
 
 
   10,  எட்டுஜான் உடம்பு எடுத்திட்ட போதும் !
         விட்டோடும் இருட்டுக்கு வெளிச்சத்தில் பேதம் !
         வெட்டவெளி தன்னை மெய்யென்று ஓதும் !
         பட்ட பகலாம் பரிபூரணம் எப்போதும் !                               (தொடரும் )
 
                                                                                 இப்பாடல்களை எழுதியவர்
                                                                                ( அன்பர் பொ.அன்பழக சாமி ,பேய் கோபுற வீதி,
                                                                                 திருவண்ணாமலை )
 
 
    எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்க்கையில் உண்மை தத்துவங்களை உணர்ந்து
கருணை உள்ளத்தோடு பசிஎன்று வருபவர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அன்பர்களின் பசிப்பிணி போக்கி வாழ்ந்து வந்தால் ,கருணையே உருவான நமது வடலூர் வள்ளல்பெருமான் வணங்கிய 
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை !
 
 
பசி என்று வருபவருக்கு  உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் ! 
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் !
 
ஆன்மநேய.அ .இளவரசன்
வள்ளலார் உயிர் வதை தடுப்பு இயக்கம்  
நெ.34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் சென்னை -6000 043
கைபேசி:9940656549,9791076515
 
  
 
 
 
 
 
 
  
 
 



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)