Tuesday, March 17, 2009

[vallalargroups:1280] Re: முடக்கத்தான் கீரை

Dear balu,
nalla seithi , KARA(M) sadney saria?

On 3/12/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
> முடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்சி மூட்டு வலியிலிருந்து
> நிச்சயமாக நிவாரணம் .
> முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.
>
> தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர்
> வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
>
> இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள்
> நம்மை அண்டாது.
>
> குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு
> வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
>
> கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு +
> அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது.
>
> அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
>
> இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம்.
> ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.
> முடக்கத்தான் கீரை தோசை.
>
> 2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும்,
> சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு
> சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும். இரண்டு கைப்பிடி கீரையை,
> மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாத‌ர‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌
> கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.நல்ல
> காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
>
> பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
>
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
>    சுத்த சன்மார்க்க அன்பன்
>       பாலமுருகன்
>   காஞ்சிபுரம்
>
>
>
>
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)