Saturday, February 10, 2018

[vallalargroups:5911] நீதிபதி என்றால் !!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. 
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.

காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."

என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

ஆதாரம்: Spirit news- indonesia

#ஆதரிப்போம்_எளியவர்களை_தேடி_தேடி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)