Friday, July 8, 2011

[vallalargroups:4253] மானமிகு சமுதாயம் மலர...!

மானமிகு சமுதாயம் மலர...!
அருட் பெருஞ் சோதிக்கு  
ஆதியும் கிடையாது.
அந்தமும் கிடையாது!
ஆதியும் அந்தமும் இல்லா 
ஜோதிக்கு ---
ஜாதியும்  கிடையாது!
சமயமும் கிடையாது! 
அதனால்தான்-- 
சாதிகளைச் -- சழக்கு என்பார்
சாதிகளைப் -- பேய் என்பார்
பொறித்தமதம் சமயமெலாம் 
பொய்- பொய்- பொய்யே என்பார் - 
நானுரைக்கும் வார்த்தைஎலாம் 
நாயகன்தன் வார்த்தை என்று 
நம்பிக்கையோடு சொன்ன -
நம்பிரான்--வள்ளல் பிரான்!
அவர்தம் மார்க்கத்தில்--மட்டும்தான்...
"சாதிகள் இல்லையடி பாப்பா"   என்று
பாப்பாக்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் 
பாவலன் நான்!
ஆதியில் --
கோயில்கள் அனைத்தும் 
சாதிக் கோயில்களாகத்தான் இருந்தன!
ஆதிக்கவாதிகளின் கோட்டைகளைச் சரித்து
சாதிக் கோயில்களுக்கு மத்தியில்--
சோதிக் கோயில் கண்ட 
சொக்கத் தங்கமல்லவா வள்ளலார்..!
அவரைச் சரிவரப் பரப்பாமலும் 
நெஞ்சத்தில் நிரப்பாமலும் 
பிழைசெய்த பெரும் பாவிகள் நாமல்லவா..!

சூதறிந்தீர்..வாதறிந்தீர்.. தூய்மை அறிந்திலரே..!
ன்று--
ஏதறிந்து கொண்டோம் என்பதே தெரியாமல் வாழ்ந்த 
இந்நாட்டு மக்களுக்காக--
ஓதி ஓதி உண்மைகள் உரைத்து
உளம் நொந்து போனவர் அல்லவா வள்ளலார்!
கடை  விரித்தேன் கொள்வார் இல்லை என்று 
கலங்கியவரும்  அவர்தானே! 
நல்லார் மனம் நடுங்கக் கூடாது!
ஏழைகள் வயிறு எரியக் கூடாது!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்கக் கூடாது!
கல்லும் நெல்லும் கலந்து விற்கக்  கூடாது!
பொருளை இச்சித்துப் பொய் சொல்லக் கூடாது!
என்று--
சமூகப் பாவங்களைப் பட்டியல் இட்டு 
பல்லாற்றானும் பண்ணிப் பண்ணிப் 
பாடி நெகிழ்ந்தவர்--
பற்றுகள் அனைத்தையும் 
பற்றறத் தவிர்த்தவர்---வள்ளலார் அல்லவா!
அவரைப் பாமரரிடமும் கொண்டு போக வேண்டிய 
கால கட்டம் இதுவென்று 
கண்டு கொண்ட காரணத்தால் --- 
வள்ளலார் பெயரில் 
அறக் கட்டளைஒன்றை ஆரம்பிக்கிறேன்--
அடியேன்!
பத்தோடு பதினொன்றாய் 
பசியாரச் செய்வது மட்டுமே  நோக்கமாய்க் கொள்ளாமல்--
சன்மார்க்கிகளாய் மக்களை மாற்றும்
சமூகப் புரட்சிக்கு வித்தாய்--
ஓர் குக் கிராமத்தில் 
ஆரம்பிக்கிறேன்--என்பணியை!
சாலைச் சோலை என்னும் பெயரில் 
மரக் கன்றுகள் நட்டு--
அவற்றை மரமாக  வளர்த்துக் காட்டுதல்-
கல்வி உதவிகள் மூலம் 
கண்திறத்தல்--
சாதி மறந்த சமூகம் நிர்மாணிக்க 
ஆழ்ந்த அறிவூட்டுதல்!--
தந்தைமொழி தமிழ் என்று சொல்லிப் பெருமிதப் பட்டாரே.. 
வள்ளல் பெருமான் --அந்தத் தமிழ் காக்கும் உணர்வை 
பட்டி தொட்டிகளில் எல்லாம் 
பதியச் செய்தல் என்று 
படரப் போகிறது என் பார்வை!
ஈர்த்துப் பிடிக்கும்  என்
காந்தத் தமிழ் கொண்டு 
கவரமுடியும் மக்களை என்று 
அழுத்தமான நம்பிக்கை --என் 
அடிவாரத்தில் இருக்கிறது!
ஆகவே ..  நண்பர்களே..!
சன்மார்க்க அன்பர்களே..!
துணைக்கு நில்லுங்கள்..!
தூயவரின் வழிபற்றித் 
தொடரும் தொண்டுக்கு 
ஆனவரை உதவுங்கள் !
அருள்வார்த்தை  கூறுங்கள்!
மானமிகு  சமுதாயம் 
மலரவழி அருள்கின்ற 
ஞானமிகு இராமலிங்கர் 
நல்வழியில் நாம் வாழ்வோம்!
அன்புடன்,
கவிஞர்.கங்கை மணிமாறன்
நிர்வாக அறங்காவலர்  
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை 
செல்:9443408824  

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)