Friday, July 15, 2011

Re: [vallalargroups:4265] காயத்ரி, தத்துவம் & பூதம்

காயத்ரி தத்வ விளக்கம் அருமை.மிக நன்று.வணக்கம். கமலா சந்திரமணி.


From: sayeeganesh juttusaibabasubramanian <dayasayeeaug11@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Thu, 14 July, 2011 17:00:29
Subject: Re: [vallalargroups:4260] காயத்ரி, தத்துவம் & பூதம்

DEAR SIR,
       I FEEL SORRY TO SAY THAT YOUR EXPLANATION IS IRRELEVANT
       I HOPE YOU ARE NOT PROFECIENT IN .SANSKRIT.
       LET US NOT FIGHT OVER TERMS BUT YOU HAVE MIXED THE MUNDANE TRADITIONAL FACTS WITH VALLALAR PHILOSOPHY IN AN INADEQUATE FORM. I KNOW THE MEANING OF GAYATHRI AS GAYATHEY=ONE WHO PRAYS, THRAYATHEY=PROTECTS. THERE ARE FOUR `KA` IN SANSKRIT.
      VALLALAR IS AGAINST THE CONCEPT OF VARNAM. PLEASE GO THROUGH THE WORKS OF VALLALAR.
     TAT+TVAM=TATVAM,  TAT=THAT,TVAM=YOURSELF. THERE IS NOTHING MENTIONED REGARDING SIVAM
     AND SO ON
THIS IS FOR YOUR INFORMATION ONLY
REGARDS
DAYAVUDAN
SAYEEGANESH
9894765247
2011/7/8 Vallalar Groups <vallalargroups@gmail.com>


---------- Forwarded message ----------
From: Surya Chandra <notification+zrdoivclpgd1@facebookmail.com>
Date: 2011/7/5
Subject: [VALLALAR GROUPS] காயத்ரி, தத்துவம் & பூதம்
To: VALLALAR GROUPS <vallalargroups@groups.facebook.com>




Surya Chandra 7:53pm Jul 5
காயத்ரி, தத்துவம் & பூதம்

காயத்ரி

காயத்ரி: கா-ய-த்ரி. க ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு - இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) - பிடி, பற்றினால்; நான்கு - நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.

மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.

தத்துவம்:
தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் - அது. அது வென்பது சிவம். த்வம் - அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை.

பூதம்:
பூதம் என்பது: பூ-த-ம். பூ அலர்ந்தது, த தடித்தது, ம் கலத்தல், ஆதலால், எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் பூதம்.

பூதம் என்பதன் சப்தார்த்தம்

பூதமென்பது யாது? அதனது சொரூப ரூப சுபாவங்களென்ன? பூதம் என்பதற்குச் சப்தார்த்தம்: பூ மலர்ந்தது, பிரகாசம்; த தடித்தது, காரியம்; ம் ஊன்றியது, நிலை. இதற்குத் தாத்பரியம்: நிலை பெற்ற காரியம் பிரகாசம். பூத அக்கினித் தோற்றமென்றும் பெயர். பூதகாரிய அக்கினி என்றும் பெயர். பூ என்பதில் உகர உயிரும் தம் என்பதில் அகர உயிரும் எண்ணில் அ - ம், உ - ம் ஆயின, ஆக தொகை 10. இந்தப் பத்து இடத்திலும் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு. கல்லுக்குள்ளிருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம். பத்துப் பொது ஸ்தானங்களாவன: மண், ஜலம், அக்கினி, காற்று, வெளி, பிரகிருதி, மாயை, சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் ஆக இடம் 10.

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.




Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)