அவ்வப்போது நமது குற்றங்களைச் சொல்லி
நமது உற்ற துணையாம் அருட் பெரும் ஜோதி
ஆண்டவரிடம் முறையிடுதல் வள்ளல் பெருமானார்
நமக்குக் கற்றுத் தந்த பாடம். அதன் படியே ஆகும்
அடியேனின் இம்முறையீடும்.
நீர் எப்போதும் என்னுள் இருந்தும்,
அடியேன் மனப்பிடியில் மாட்டி,
உமது அருள்மய பூரணத்தை அனுபவிக்காது,
இருள் மய வாழ்வில் உழன்றேன்; உழன்றேன். அதனால்,
உளம் தளர்ந்தேன். ஆயினும் ஆண்டவர்
உமது கருணைக் கசிவிலே அடியேன் ஊக்கம் பெற்றேன்.
உளம் யாவும் உமது அருட் பூரணத்தை நிறைக்கவே
நீங்காத ஆசை கொண்டேன்; அருள்மயமாய் ஆண்டவர் நீர்
இருந்தும் மருள் கொண்ட மனத்தினால்,
இருளைக் கொண்டேன். இருளில் உழலும் என்னை
உமது அருளால் கொள்க; ஆண்டவரே, உமது
அருட் பூரணத்தில் எமையும் இருத்துக! இமைப்பொழுதும்
இருளின்றி, மருளின்றி, மனமாயையாம் உபாதையின்றி,
உமது அருட் பூரணத்தில் எம்மை எப்போதும் இருத்திக்
காத்திட கருணை காட்டும் ஆண்டவரே!
அருட் பெரும் ஜோதி! அருட் பெரும் ஜோதி!
தனிப் பெரும் கருணை! அருட் பெரும் ஜோதி!
பாலு குருசுவாமி.
-- To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment