Saturday, October 23, 2010

Re: [vallalargroups:3591] Answer : Request Clarifications

ஜோதி தரிசனத்தின் தத்துவம்

6 OCTOBER 2010 14 VIEWS NO COMMENT

ஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும் அறிந்ததே………

ஆனால் வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை" என்று ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!

இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல வருகிறார் என்று பார்க்க வேண்டும்.

இதை பார்ப்பதற்கு முன்… நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்

தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்…

நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்

இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று பார்த்தால்….

இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவர்

இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது….. ஆம் சூரியன், சந்திரன், ஏழு திரைகள் மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது… இதை நமக்கு விளக்கவே வள்ளல் பெருமான் சொன்னது…..

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்று எம்பெருமான் இவ்வுலக மக்களுக்கு இதை உடைத்து சொன்னதாலே "வள்ளல் பெருமான்" என்று அன்புடன் அழைக்கபட்டார்.

இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும் இருக்கிறது…. ஆம் "பொற் சபை" பொன்னிற நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.

பொற் சபை – சூரியன்

சிற் சபை – சந்திரன்

இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும்

ஓம் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???

அ + உ + ம் என்றுதானே????

இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??

அதன் பொருள் இதுதான்…….

பொற் சபை – சூரியன் – அ

சிற் சபை – சந்திரன் – உ

தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???

ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது

பொற் சபை – சூரியன் – அ – 8

சிற் சபை – சந்திரன் – உ – 2

ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு வழக்கம் உண்டு அதாவது…… 8 ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட அவனுக்கு தெரியாது…. அவனிடம் போய் பேசி கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??

ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறிர்களா?

மேலும் ஒரு அற்புதமான பழக்கம் கிராம புறங்களில் உண்டு….. சிறுவர்களை கடைக்கு அனுப்ப வேண்டும் எனில்

கண்ணா கடைக்கு போடா என்று அம்மா சொன்னால்……

அதற்க்கு அந்த பையன் சொல்வான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று சொல்வான்….

அதற்க்கு அந்த தாய் சொல்வாள்…..

டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கிறிர்களா??

இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு புரிகிறதா???

ரெண்டு – 2

எட்டு – 8

வைத்தால்

கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)

தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்…….

இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு கொள்ளுங்கள்

"எட்டும் இரண்டும் அறியாத என்னை

எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி

எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்

எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"

இதை வள்ளுவ பெருந்தகை….

எந்த இரண்டு எழுத்து எண்ணாகவும், எழுத்தாகவும் இருக்கிறதோ அதை ………… என தகும் என்று சொல்கிறார்

"எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு."

இப்படி உண்மையை பட்டென உடைத்து இருக்கிறார்.

பொற் சபை – சூரியன் – அ – 8 – வலது கண்

சிற் சபை – சந்திரன் – உ – 2 – இடது கண்.

ஆம் நம் கண் விழி வழி தான் நாம் கடவுளை அடைய முடியும்.



From: Shiv Kumar <shivonline@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Thursday, 21 October 2010 20:55:47
Subject: Re: [vallalargroups:3580] Answer : Request Clarifications

Hi கார்த்திகேயன் ,
தகவலுக்கு நன்றி. ஞானசரியை மின் நகல் அனுப்பமுடியுமா ?
அன்புடன்
சிவா

2010/10/21 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga,

Dear Siva,

நமது வள்ளலார், நமக்கு கொடுத்த மிக முக்கியமான பகுதி , "ஞான சரியை".

அந்த பகுதியில் "28" பாடல்களை கொடுத்து உள்ளார்கள்.

அதாவது "2" ,"8" -க்கான  ரகசியம் அதனில் உள்ளது.

அந்த பகுதியை தாங்கள் ஆழ்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

"எஞ்சேல்" - "யாமிருக்க(வள்ளலார்/அருட்பெருஞ் ஜோதி) பயம் ஏன்?"

அன்புடன்,
கார்த்திகேயன். 

---------- Forwarded message ----------
From: Shiv Kumar <shivonline@gmail.com>
Date: 2010/10/19
Subject: [vallalargroups:3567] Request Clarifications
To: vallalargroups@googlegroups.com


அன்பர்களே,
எட்டும் இரண்டும் என்று பல பாடல்கள் அருட்பவிலும் , மற்ற மறை நூல்களில்லும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் விளக்கம் என்ன ?

மேலும்   ஆறாம் திருமறைஇல் இந்த பாடலில் வரும் "எஞ்சேல்"  என்ற சொல்லுக்கு முழு  பொருள் என்ன?
 
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

அன்புடன்
சிவா

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)