பசித்திரு தனித்திரு விழித்திரு
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒருமுறை ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மன்னர் தனது மதியுக மந்திரியுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார் அப்படி வந்துகொண்டிருக்கும் வேளையில் மண்ணன் மந்திரியிடம் தனது நாட்டில் வாழும் குடிமக்களின் குறைகளை கேட்டு அவரவர்களுக்கு உள்ள குறைகளை போக்குமாறு கட்டளையிட்டார் மந்திரியும் அவர்கள் போகும் வழியில் இருக்கும் அனைத்துமக்களின் குறைகளையெல்லாம் கேட்டு அவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்துவந்தார் மந்திரி அதே நாட்டில் ஒரு ஏழை குடிமகன் பாபு தன் வீட்டிற்கு யார்வந்தாலும் அதாவது சிவனடியாராக இருந்தாலும் சரி அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் இந்நாட்டின் தளபதியாக இருந்தாலும் எவராக இருப்பினும் அவர்கள் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் பசி என்னும் நோய்க்கு உணவு என்னும் அருமருந்தை கொண்டு அவர்களின் பசியை போக்குவதை தெய்வப்பணி என செய்துவந்தார் அந்தகுடிமகன் பாபு இவரது இல்லத்தில் பசியாறிய அனைவரும் இக்குடிமகன் வாழ்வில் இறைவன் அருட்பெரும்ஜோதியின் கருணையினால் எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்திசென்றார்கள் , பாபுவும் இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று சிறப்பாக வாழ்ந்துவந்தார் இதே நாட்டில் ஆணவமே உருவாக மல்லன் என்ற ஒருவனும் இருந்தான் இவன் தினந்தோறும் காட்டிற்கு சென்று வாய்பேசாத கொக்கு குருவி போன்ற பறவைகளையும் சாதுவான முயல் மான் போன்ற விலங்குகளையும் தன் சுயனலத்துகாக அவைகளை கொன்று இவனை போன்ற கொடும்பாவிகளிடம் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை கொண்டு வாழ்ந்தான் ஒருமுறை மல்லன் காட்டின் நடுவே சென்றுகொண்டிருக்கிறான் இவன்வருவதை கவனித்த முள்ளம்பன்றியானது அருகில் இருந்த நரியிடம் நாம் முன்பிறவியில் என்னபாவம் செய்தோமோ தெரியவில்லை இப்பிறவியில் விலங்கினமாக பிறந்தோம் ஆனால் இதோ இங்கே பாரு இவனுக்கு கிடைபத்ர்க்கு அறிய மனித பிறவி கிடைத்தும் இவன் வடலூர் வள்ளல் பெருமான் காட்டிய
நன்மார்க்க நெறியாம் சன்மார்க்கநெரியில் வாழாமல் பெரும் பாவம் விளையகூடிய துன்மார்க்க நெறியில் செயல்படுகிறான் இக்கொடும்பாவி நாள்தோறும் நம்மை போன்ற சிறுமதி உடைய உயிரினங்களை தன் கொடிய ஆயுதங்களால் கொன்று பெரும் பழிக்கு வழிவகுத்துகொள்கிறானே என்று பேசிகொண்டிருந்தன மல்லன் காட்டில் சற்று தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் தன் கையில் வைத்திருந்த வலையை விரித்து வைத்துவிட்டு ஏதாவது வலையில் சிக்குகிறதா என்று அருகில் உள்ள மரத்தின் ஓரமாக பதுங்கியிருந்தான் அந்தநேரத்தில்
அவ்வழியே பார்பவர்கள் கண்களை கவரும் பேரழ்குகொண்ட வண்ணமான் ஒன்று துள்ளிவிளையாடிகொண்டு வந்தது பாவம் மல்லன் விரித்த வலையை கவனிக்காத மான் வலையில் சிக்கித்தவித்தது மான் இன்று நம்நிலை இப்படி ஆகிவிட்டதே என்னை காப்பாற்றுங்கள் இறைவா என்று இறைவனிடம் வேண்டிகொண்டது கருணை உள்ளம் கொண்ட பன்றி மான் படும் வேதனையை கண்டு அதற்க்கு உதவவேண்டும் என்று முள்ளம்பன்றியானது நரியிடம் தாங்கள் தான் தந்திரத்தில் சிறந்தவர் ஆகையால் தாங்கள் மல்லனிடம் போய்
எதாகிலும் பேசி அவன் பார்வையை வேறுதிசைக்கு மாற்றுங்கள் நான் அதற்க்குள் யிந்தமானை விடுவித்துவிடுகிறேன் என்றது இதைகேட்ட நரியானது அப்படியே செய்கிறேன் மல்லனிடம் போய் மல்லனை பார்த்து நீங்கள ஒருமகாபலசாலி என்றும் உங்களின் வல்லமைக்கு நிகர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என மல்லனை புகழ்ந்தது நரி. இதைகேட்டமாத்திரத்தில் மல்லனுக்கு இன்னும் தலைகனம் அதிகமாகி ஆண்வம்களந்த சந்தோசம் அடைந்தான் ,இப்படி இவர்கள் பேசிகொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில் பன்றியானது வலையில்அகப்பட்டமானை
வலையிலிருந்து விடுவித்து தன்யிருப்பிடத்திர்க்கு அழைத்துசென்றது
நரியானது சற்று நேரம் கழித்து திரும்பிபார்த்தது வலையில் அகப்பட்ட மான் வலையில் இருந்து காப்பார்றபட்டதை பார்த்துவிட்டது இனிநமக்கு இங்கு என்ன வேளை நாம் வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது என்று தன்மனதிர்க்குள் எண்ணி மல்லனை பார்த்து தங்களிடம் நான் பேசிகொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை நான் வருகிறேன் என கூரி அங்கிருந்து முள்ளம்பன்றி இருக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தது மான் தன் உயிரைகாப்பாற்றிய பன்றியுடனும் நரியுடனும் நட்புகொண்டது தாங்கள் இருவரின் தயவு இல்லை என்றால் நான் அந்த கொடியமணம் கொண்ட மனித விலங்கிற்கு இறையாய் இருப்பேன் என்னை காப்பாற்றிய தங்களுக்கும் இறைவனுக்கும் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்றது மான் எனவே நண்பர்களே வாருங்கள் நாம் அனைவரும் இறைவன் அருட்பெரும்ஜோதியிடம் முறையிடுவோம் இந்த பொல்லா மனித விலங்கிற்கு நற்புத்தியுண்டாக வேண்டும் அதற்க்கு தாங்கள் தான் அருளவேண்டும் இறைவா என்று அவைகள் மூன்றும் இறைவன் அருட்பெரும்ஜோதியை நாடி சென்றது இப்படி இருக்கும் நேரத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னனும் மதியுகமந்திரியும் சற்று தொலைவில் வீதியில் கூட்டம் தெரிவதை பார்த்து அவ்வழியாக தேரைசெளுத்தசொன்னார் மன்னர் அவ்விடத்தை நெருங்கிய மன்னருக்கு அதிசயம் அங்கே பார்த்தாள் ஒரு இளம் துறவி ஏழை எளிய மக்களுக்கு அவரவர்கள் விரும்பியவற்றை பொருளாகவும்
வரமாகவும் வழ்ங்கிகொண்டிருந்தார்கள் அந்த இலந்துரவியை கண்டதும் மண்ணன் தன்தேரைவிட்டு இறங்கி துறவியின் பாதத்தில் வீழ்ந்து
வணங்கினார் இதை கவனித்த மந்திரிக்கு ஒரே எரிச்சல் இம்மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்யும் மன்னர் ஒருசன்னியாசியின் காலில் வீழ்ந்து வணங்குவதா என்று மனதிற்க்குள் நினைத்தார் மந்திரி தன்னுடன் இருக்கும் மந்திரியின் முகபாவத்தை கவனித்த மன்னர் இவருக்கு நாம் சரியான பாடம் கர்ப்பிக்கவேண்டும் என்று மந்திரியிடம் ஒரு கூடை நிறைய வண்ணமீன்களும் ஒரு அழகிய வண்ணமானும் மற்றும் மகாபலம் பொருந்திய வீரன் ஒருவனையும் மந்திரியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் அருகில் உள்ள சந்தையில் விற்றுவா என்று ஆணையிட்டார் உடனே மந்திரி அருகில் உள்ள சந்தைக்கு சென்று விற்க தொடங்கினார் கடை வைத்த ஒருமணி நேரத்தில் மீன்களும் மான்களும் நல்ல விலைக்கு விற்றுவிட்டன ஆனால் மனிதனை மட்டும் யாரும் வாங்க முன்வரவில்லை மந்திரி மன்னனிடம் சென்று சந்தையில் நடந்தவற்றை எடுத்துரைத்தார் மண்ணன் மறுபடியும் தாங்கள் சந்தைக்கு சென்று இவரை இலவசமாக எவரிடமாவது ஒப்புவித்து வாருங்கள் என்றார் மறுபடியும் மந்திரி சந்தைக்கு சென்று இவர் ஒருமாகபலம் வாய்ந்த போர் வீரன் இவரை இலவசமாக அனுப்ப உள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் இவரை தங்களுடன் அழைத்து செல்லலாம் என்றார் மந்திரி ஆனாலும் இதற்க்கும் யாரும் முன்வரவில்லை மிகவும் நொந்துபோன மந்தியானவர் மீண்டும் அரண்மனைக்கு சென்று மன்னனிடம் இவரை இலவசமாக கூடயாரும் பெற்று
செல்லவில்லை என்றார் மண்ணன் தன் மதியுக மந்திரியை பார்த்து தாங்கள் சந்தைக்கு கொண்டு சென்ற மீன்கள் மான் எல்லாம் நகரவாசிகள் உடனே பெற்று சென்றுவிட்டார்கள் ஆனால் இந்த போர் வீரனை மட்டும் இலவசமாக கூடயாரும் பெற்று செல்ல முன்வரவில்லை இதற்க்கு என்ன காரணம் மீனும் மானும் ஒருவர் இல்லத்தில் இருந்தால் அவர்கள் சோர்ந்து வரும் நேரத்தில் அவைகளை பார்த்தால் அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் ஆனால் மனிதனை வாங்கிசென்றால் அவர்களின் குடும்பத்தில் இவன் கலகத்தினால் எங்கே பிரிவினை நேர்ந்திடுமோ என்று பயந்து தான் மனிதனை இலவசமாக கூடயாரும் பெற்று செல்லவில்லை
என்றார் மண்ணன்.மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் நான் என்ற ஆணவம் கொள்ள கூடாது நம்மைவிட அறிவிர்சிறந்த மகான்களின் பாதத்தில் வீழ்ந்து வணங்குவதில் நாம் பெருமை கொள்ளவேண்டும் இவற்றை தாங்கள் உணர்ந்துகொள்ளவே நாம் தங்களிடம் இவ்வாறு நடந்துகொண்டோம் என்றார் மண்ணன். தன் தவறை உணர்ந்த மந்திரி மன்னரிடம் தாங்கள் தயவால் நற்பண்பு உள்ளவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் உணர்ந்துகொண்டேன் என்று அன்றுமுதல் நல்லதொரு மந்திரியாக செயல்பட்டு நாட்டுமக்களுக்கு நமதுவள்ளல் பெருமான் காட்டிய நன்மார்க்கமாம் சன்மார்க்க நெறியை அடைய ஜீவகாருண்யத்தை முதல் சாதனமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை நாடெங்கும் பறைசாற்றி தம்நாட்டு மக்களை சீரும் சிறப்புமாக வாழ்செய்தார்
எனவே அன்பர்களே நமது வள்ளல் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து நாமும் நற்பண்பு உடையவர்களாக
வாழ்வோம் .
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
-- பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment