Wednesday, April 15, 2009

[vallalargroups:1429] Re: Onde Sivam

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி - தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Dear Anbarasu,
 
Great Explanation !!
We expect you to write more things about which you learned & experienced.
 

--
Regards,

Saravanan MC
+91-0-9840922085
saravanan.mc@gmail.com

-------------------------
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-------------------------
~எல்லாம் செயல் கூடும்~
~பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்~
~எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ~

2009/4/13 Arumugha Arasu.V.T <arvindhoffset@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு வணக்கம்
சன்மார்கம் என்பது ஆதி காலத்தில் இருந்தே பல சமயவதிகலும், சித்தர்களாலும் பயன்படுத்தப்பட்ட முறையாகும் சித்தரகள்ளிலும் சுத்த சந்மார்க்கத்தை அடைந்தவர்கள் மிக குறைவாகவே காணப்படுகிறது. சன்மார்க்கம் சமய சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம் என இரு வகை படும். சமய சன்மார்க்கத்தில் இறைவனின் நிலைகளை உருவங்களாக காட்டி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டார்கள் அனால் உருவங்கள் அனைத்துமே ஒருவர் சுத்த சிவா நிலயை அடையும் முன்பு ஏற்படும் அனுபவங்களை கடவுளர்களின் உருவங்களாக படைத்தார்கள் ஏன் என்றால் அடிப்படை தெரியாதவர்கள் முதலில் உருவ வழிபாட்டினை அதாவது தூல வழிபாட்டினை அடைந்து பின்னர் ஞான நிலை அடையும்போது அவர்கள் உருவ வழிபாட்டில் உள்ள தத்துவ நிலையை புரிந்து அடுத்த நிலையான சூக்ஷும வழிபாடான ஞான வழிபாட்டினை அடையும்பொருட்டு ஏற்படுத்தினார்கள் . நமது வள்ளல் பெருமானாரும் அடிப்படை தெரியாதவர்களுக்காக முதலில் விளக்கின் வழிபாட்டை கூறினார்கள் ஏன் என்றால் சுக்ஷுமமாக நாம் பெறப்போகும் அனுபவம் ஒளி அனுபவதிற்ர்ககு அடிப்படையாக விளக்கு வழிபாடு அமையும் என்பதற்காக தான். நீங்கள் உண்மையை புரிந்து கொண்டால் எல்லாரும் சொன்ன கருத்துக்களும் ஒன்றே சிவம் என்கின்ற கருத்துக்கு இட்டு செல்லும் பல முறைகள் என்பதனை புரிந்து கொள்ளலாம்.  நமது வள்ளல் பெருமானார் நான்கு அடிப்படைகளை கூறி இருக்கிறார்கள்  அவை   எயம சித்தி,  சாகா கலை, தத்துவ நிக்கிரகம், கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். முதலில் எயம சித்தி என்றால் தங்கம் செய்யும் கலையில் வல்லவனாதல் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் அதே சமயம் எயமம் என்பது சூரியனை குறிக்கும் நமது மூச்சு காற்று வலது இடது என்று இரண்டு பாகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது அதில் நாம் பயிர்ச் சியின் மூலம் வலது புறத்தில் ஓட செய்வதன் மூலம் அடுத்த நிலையான சாகா கல்வி நிலைக்கு செல்லலாம். சாகா கல்வி என்பது வலது நாசியில் ஓடும் காற்றை மேல் ஆதாரமாகிய அண்டத்தில் செலுத்துவதாகும் அப்படி செலுத்துவதன் மூலம் ஏற்படும் அனுபவத்தின் போது தத்துவங்கள் முன் வந்து நம்மை கீழ் நோக்கி செலுத்த பார்க்கும் ஆகவே தத்துவங்கள் இன்னதென்று அறிந்து அந்த  தத்துவங்களை ஒழித்து தானே தனை நிற்கும் அனுபவம் பெற்றால் அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமதல் அதற்க்கு பெயர்தான் ஒன்றே சிவம் அந்த நிலையில் நான் என்கின்றன உணர்வு அற்று சிவமும் நாமும் இரண்டட்ட்ற ஒருமை நிலை அடையலாம் ஆகவே ஒன்றே சிவம் என்பது அனுபவ நிலையே இதையேதான் அனைத்து சித்தர்களும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் சித்தர்களது பாதையை புரிந்து கொள்வதக்கு அவர்களின் துணை அல்லது பெரியவர்கள் துணை  தேவை. நமது பெருமானின் பாதையும் சித்தர்களின் பாதையும் ஒன்றுதான் ஆனால் வழிதான் வேறு . மேலும் விளக்கம் தேவை எனில் அடுத்த கடிதத்தில்
அன்புடன் அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க    
--
V.T.A. Arasu

--
V.T.A. Arasu




--


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)