Sunday, May 5, 2013

Re: [vallalargroups:4886] Fwd: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

8 & 2  villakam thavai Please

2013/4/30 Vallalar Groups <vallalargroups@gmail.com>


 
 
                                
 
                    பசித்திரு !               தனித்திரு !               விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி
!
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -4-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்றுக்கொள்வோம்
 
      
 
         31,        நன்வினை தீவினையால் சார்ந்திட்ட கூடு !
                     நானென்ற ஆங்காரம் வந்திட்டால் கேடு !
                     நன்மக்கள் மனம்குளிர நன்மையை தேடு !
                     உன்னில் உயிர்போனால் உன்கட்டை சுடுகாடு !
 
         32,       நான்குவகை யோனியால் பிறந்திட்ட தோற்றம் !
                    என்றென்றும் எழுவகை தோற்றத்தால் குற்றம் !
                    உண்டால் மூப்பினால் மாறிவிடும் தோற்றம் !
                    என்றென்றும் தவத்தாலே ஞானநிலை ஏற்றம் !
 
         33,       நாய்போல் அலைந்து ஞானத்தை தேடாதே !
                    பேய்போல் மனதை அடக்காமல் ஆடாதே !
                    தாய்போல் ஞானப்பால் இறையருள் வாடாதே !
                    மெய்யுடலே  கோவில் உயிர் ஈசன்  வெளிதேடாதே !
 
        34,       ஓடியே உலகங்கள் சுற்றியே தேடி !
                    தேடியே உட்கலந்த ஜோதியை நாடி !
                    கூடிய உடலுயிர் பிரிவால் வாடி !
                    வாடியே மாண்டவர் கோடான கோடி !
 
         35,       எத்தனை நாள்வாழ்வாய் இந்த புவிமேலே !
                    நித்தனை மறந்துநீ நிந்தனை சொல்லாலே !
                    அத்தனை நினையாமல் அழியாதே தாழ்வாலே !
                    வித்தனை நினைத்தாலே வினையேது வாழ்வாலெ !
 
        36,       தாய்தந்தை இருவரும் இன்பத்தால் கூடி !
                   தாய்வயிற்றின் கருவிலே உயிர்வந்து நாடி !
                   வ்யிரென்ற சிறைதனில் பத்துமாதம் வாடி !
                   சேயென்று பிறந்தோமே புவிமீது நாடி !
 
        37,      இன்பத்தில் வாழவே மனைவியை நாடி !
                   துன்பத்தை பெற்றோமே மக்களை தேடி !
                   பொன்பொருள் ஆசையால் பூமியில் வாடி !
                   மாண்டவர் பிணிமூப்பு சாக்காடால் கோடி !
 
        38,      அன்போடு உயிர்களை நேசித்தால் இன்பம் !
                   உண்மை பேசினால் அணுகாது துன்பம் !
                   நன்மைகள் செய்திட நமக்குபேர் தங்கம் !
                   கண்ணியம் கடமை கட்டுப்பாடால் இன்பம் !
 
       39,       பத்தினி பெண்களை ஏளனம் செய்யாதே !
                  தத்துவ ஞானிகள் மனம்நோக வையாதே !
                  சித்தம் கலங்கிட பெரியோரை துய்யாதே !
                  நித்தம் இறையன்றி துதிவேறே செய்யாதே !
 
      40,       கொல்லா விரதமே  நல்லோர்கள் விரதம் !
                 இல்லார்க்கு உணவிடு இன்பமான விரதம் !
                 எல்லார்க்கும் உதவிடு இன்முகத்தால் விரதம் !
                 நல்லோர்க்கு நன்மைசெய் இறைவர்க்காம் விரதம் !        தொடரும் .....
 
                                                                
             (இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி ,நெ .15,7,வது சந்து ,
                                                            பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
 
 
     எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில்  ஜீவகாருண்ய சிந்தனையோடு கொல்லாவிரதமதை 
     கடைபிடிக்கவேண்டும் ,நமக்கு இந்த உலகத்தில் தாய் தந்தை உடன்பிறப்புகள் உற்றார் உறவினர்கள் 
     என பற்பல உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளும் நம்முடைய இறுதிகாலத்தில் கூட 
     வரப்போவதில்லை   பின்பு எவையெல்லாம் நம்முடன் வரும் என்றால் நாம் நம் வாழ்வில்
     தொண்டு உள்ளத்தோடு செய்கின்ற பணிகள் பிற உயிரினங்கள் படுகின்ற துன்பங்களை கண்டு
     நம்முடைய துன்பமாக பாவித்து உருகுதல்,பசியினால் வருத்தமுறும் எந்த உயிராக இருந்தாலும் 
     அவற்றுக்கெல்லாம் உணவு என்னும் மருந்தை கொண்டு பசிப்பிணியை போக்குததாலும் கிடைக்கின்ற 
     ஆசிகள் , இவைகள் தான் நம்முடைய இறுதிகாலத்தில் கூடவரும் 
 
     இந்த உலகத்தை படைத்தவள் அன்னை ஆதிபராசக்தி எனவே அவள் தான் எல்லா உயிரினங்களுக்கும்  
     தாயாய் விளங்குகிறாள் , கருணையின்  பிறப்பிடமாக விளங்கும்  ஒரு தாய்  தான்ஈன்றெடுத்த
     தன்குழந்தையை  கொள்ள நினைப்பாளா ? ஒருபோதும்  செய்யமாட்டாள் எனவே தெய்வங்கள் 
     எந்த உயிரினங்களையும் பலி கேட்பதில்லை,தெய்வத்தின் பெயரால் மனிதன் தன நாவின் சுவைக்காக 
    ஏற்படுத்தின மூடபழ்க்கவழ்க்கங்கல், இவனுக்கு கிடைப்பதற்கு அறிய கிடைத்த இந்த மனித தேகத்தை 
    தெய்வங்கள் வாழும் கோவிலாக மாற்றாமல்  இவன் வயிற்றை அதாவது வாய்பேசா உயிரினங்களை
     கொன்று  அவற்றை எல்லாம் புதைக்கும் ஒரு மயானகாடக மாற்றிவிடுகிறான் கேட்டால் தெய்வகுற்றம்    
     ஆகிவிடும் என்று கதைவிடுகிறான் ,
 
    எனவே சான்றோர் பெருமக்களே சற்றே சிந்தித்து பாருங்கள் தெய்வத்தின் பெயரால் கதைவிடும்
   பொய்யர்  கூட்டட்தை   நம்பாதிர்கள், நமது வடலூர்  வள்ளல்பெருமான் கூரிய உயிர் நேயத்தையும் 
   பசிப்பிணி  போக்குதளையும்  நாம் நம் வாழ்வில் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருவோமேயானால்  
   எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் 
  சிறிதும் ஐயமில்லை . 
 
 
   பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
   ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
 
 
  கொள்ளா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
 
  என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
  ஆன்மநேய .அ.இளவரசன்
  வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
  நெ.34,அண்ணா தெரு,
   திருவள்ளுவர் நகர்,
   ஜமின் பல்லாவரம்
   சென்னை -6000 043
   கைபேசி:9940656549
   
  
    
        
 
 
 
              
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



--



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)