Tuesday, November 19, 2013

[vallalargroups:5209] Reference : தத்துவங்கள்(96)


தத்துவங்கள்(96)

சிவதத்துவம் 5. + வித்தியா தத்துவம் 7+ ஆன்ம தத்துவம் 24 + மற்ற உட்பிரிவு 60
தத்துவங்கள் (36)
சிவ தத்துவம்
(சுத்த மாயை):
5
நாதம்,விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை
வித்யா தத்துவம் 
(அசுத்த மாயை)
7
மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்
ஆன்மதத்துவம்(24)
(பிரகிருதி மாயை)

பஞ்ச பூதம் (5) + ஞானேந்திரியங்கள் (5) + கர்மேந்திரியங்கள் (5) + தன்மாத்திரை (5) + அந்த கரணங்கள் (4).
பஞ்ச பூதம்
5
1.மண் 2.நீர் 3.தீ 4.காற்று 5.ஆகாயம்
ஞானேந்திரியங்கள்
5
1.செவி 2.கண் 3.மூக்கு 4.நாக்கு 5.மெய்
கர்மேந்திரியங்கள்
5
1.வாக்கு 2.பாதம் 3.கை 4.எருவாய் 5.கருவாய்
தன்மாத்திரை
5
1.நாற்றம் 2.சுவை 3.ஒளி 4.பரிசம் 5.ஒலி
அந்த கரணங்கள்
4
1.மனம் 2.அகங்காரம் 3.புத்தி 4.சித்தம்
புறக்கருவிகள் (60)
பிருதிவியின் காரியம்
5
1. மயிர் 2. தோல் 3. எலும்பு 4. நரம்பு 5. தசை
அப்புவின் காரியம்
5
1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மச்சை 5. சுக்கிலம்
தேயுவின் காரியம்
5
1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5. சோம்பல்
வாயுவின் காரியம்
5
1. ஓடல் 2. இருத்தல் 3. நடத்தல் 4. கிடத்தல் 5. தத்தல்
ஆகாயத்தின் காரியம்
5
1. குரோதம் 2. லோபம் 3. மோகம் 4. மதம் 5. மாற்சரியம்
வசனாதி
5
1. வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம்
வாயு
10
1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருதரன் 9. தேவதத்தன்
10. தனஞ்சயன்
நாடி
10
1. இடை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. காந்தாரி 5. அத்தி
6. சிங்குவை 7. அலம்புடை 8. புருடன் 9. சங்கினி 10. குகு
வாக்கு
4
1. சூக்குமை ,2. பைசந்தி 3. மத்திமை 4. வைகரி
ஏடணை ( விருப்பம்)
3
1. தாரவேடணை 2. புத்திர வேடணை 3. அர்த்தவேடணை
குணம்
3
1. சாத்துவீகம் 2. இராசதம் 3. தாமதம்


தத்துவம்
குறிப்புகள்
காலம்

சென்றது, நடப்பது, வருவது
நியதி

அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது
கலை

ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்

ஆசையை எழுப்பும்
புருடன்

விஷயங்களில் மயங்கும்
சூக்குமை
-சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது
பைசந்தி
-சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது
மத்திமை
-உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை
வைகரி
-சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
வாயு
எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.
பிராணவாயு
உயிர்வளி : இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.
அபானன்  
மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.
வியானன்
தொழிற்காற்று : இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.
உதானன்  
ஒலிக்காற்று : இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.
சமானன்
நிரவுகற்று : இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் இல்லை. அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, சடாரென ஒரு எல்லையிலிருந்து(மருமம்) பிச்சு அடிக்கும் ஆவி தான் சுவாசம். இதுவே மூல வாயு.
நாகன்
தும்மற்காற்று

கூர்மன்
விழிக்காற்று :இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்).
கிருகரன்
கொட்டாவிக்காற்று
தேவதத்தன்
இமைக்காற்று
தனஞ்செயன்
வீங்கற்காற்று
இடைகலை

பிங்கலை

சுழுமுனை

காந்தாரி
இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)
அத்தி
வலது காது நரம்பு
சிங்குவை
உள்நாக்கு நரம்பு.
அலம்புடை
இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)
புருடன்
வலக்கண் நரம்பு.
சங்கினி
மருமத்தான நாடி
குகு
மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)





D. சத்தியமூர்த்தி,மடிப்பாக்கம்,சென்னை: +91 9710615260

Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)