Sunday, May 23, 2010

Re: [vallalargroups:3014] அருளே நம்துணை-Grace is ever pleasing and blessing.

dear uyir,

அறிவறி வென்று எங்கும் கரற்றும் உலகம் 
அறிவறி யாமை யாரும் அறியார் 
அறிவறி யாமை கடந்த அறிவானால் 
அறிவறி யாமை அழகி யவாறே 

அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை 
அறிவுக்கு அறிவல்லது அதாரம் இல்லை 
அறிவே அறிவாய் அறிகிறதென்று இட்டு
அறைகின்றன மறைஈறுகள் தாமே 

அறிவரியாமையை நீவி அவனே 
பொறிவாய் ஒழித்து எங்கும் தானானபோது 
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் 
செறிவாகி நின்றவன் சீவனு மாமே .

அறிவாய் அறிந்துகொண்டு அறிவறியாமையாகிய அறியாமை நீங்கி அறிவே வடிவாய் ஆவதே அறிவு. 

with regards,

UYIR.


From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Fri, May 21, 2010 4:12:52 PM
Subject: Re: [vallalargroups:3010] அருளே நம்துணை-Grace is ever pleasing and blessing.

அருளுடன் , விளக்கத்தை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி ...
 
இது போன்ற வள்ளலார் பெருமான் பாடல்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது , அனைவரும் வள்ளலார் பாடலை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்
 
Please give explanation from 10 to 15 lines ..
then , Everyone surely will read
 
anbudan,
karthikeyan
2010/5/21 Balu Guruswamy <balovesfamily@gmail.com>
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி அருள்பெற முயலுகென் றருளிய சிவமே!
 
எந்த வடிவம் அருள் நிறைந்த தாகிறதோ, அந்த வடிவமே அழியாத தனி வடிவம் ஆவதால்,
அருளே பெறத் தகுந்தது,.. எனவே, அருளைப் பெற முயல்க என அருட் பெரும் ஜோதி ஆகிய சிவமே  அருளியது.

No form is eternal except that one fully filled with Grace.
Hence Grace only is worth attainable and worth trying.
Hence ever be trying for the Grace to fill in you and make you full.

அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்நடு வாமென்ற சிவமே.


நம் இயல்பும் அருளே; நம் உருபும் அருளே.
நம் சிரநடு நின்ற சிறப்பும் அருளே
என அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.

Grace is our nature;  Grace is our form.
Grace is on the mid of our head.


அருளே நம்மடி அருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே.

அருளே நமது அடியாகிய பாதமாயும் முடியாகிய சிரமாயும்
அருளே நமது நடுவாயும் இருந்து அருள்வதாய்
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.

Grace is our foot and the same Grace is our Head
and it is entirely in the mid of our form.

அருளே நம்மறி அருளே நம்மனம்
அருளே நம்குண மாவென்ற சிவமே.


அருளே நமது அறிவு; அருளே நமது மனம்.
அருளே நம் குணம் என
அருட் பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.

Grace is our intellect and Grace is our mind
and Grace is our quality.

அருளே நம்பதி அருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்றே சிவமே.

அருளே நமது தனித்தலைவர்; அருளே நமது பதி உறையும் பதம்.
அருளே நமது உறைவிடம் என அருட்பெரும் ஜோதியாம் சிவம்
அருளியது.

Grace is our Lord and Grace is the Lord's place
and our place as well is the same Grace.

அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நம்விருப் பாமென்ர சிவமே.

நமது துணையும் நமது தொழிலும் அருளே.
அருளே நமக்கு என்றென்றும் விருப்பென்று
அருட்பெரும் ஜோதியாம் சிவம் அருளியது.

Grace is our companion and Grace is our job;
Grace is ever pleasing and blessing.

பாலு குருசுவாமி






--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)