இன்புற்று வாழ்க
Dear Ram,
For your Qs : way to Atma Gnam:
THis is from Vallalar "Perubhadesam Section"...
Vallalar has told this During Dec-1873 ( Final Stage Years)...
நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடி இருப்பது திரைகள் .
அந்த திரைகள் நீங்கினால் நாம் ஆன்ம தரிசனத்தை பெறலாம்.
எவ்வாறு கோவில்களில் , திரை நீக்கின பின்பு , ஜோதி தரிசனம் காண்பிக்கபடுகிறதோ , அது போலவே , நாம் அகத்தில் காண இயலும் .
நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிஇருக்கும் திரைகளை நீக்கினால் நாம் "ஆன்ம தரிசனத்தை" பெறலாம்
திரைகள் எவை ?(வள்ளலாரின் கந்தகோட்ட தெய்வ மணி மாலையில் இருந்து ..,)
முதலில் "ராகாதிகள்" நீங்கினால் தான் நம்முடைய முதல் திரையாகிய "கரும்பச்சை" திரை நீங்கும்.
- காமம் - உட்பகைவன்
- கோபம் - வெங்க்கொடியன்
- லோபம் - முழுமூடன்
- மோகம் - வீணன்
- மதம் - கண்கெட்ட ஆங்காரி
- மாச்சரியம்-விழலன்
- கொலை - பாதகன்
ஆன்மாவைத் மூடியிருக்கின்ற திரைகளை எவ்வாறு நீக்குவது?
ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது
ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது
எப்பொழுது அதிக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்?
அந்த விசாரத்தைவிட
அந்த விசாரத்தைவிட
- ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்
- தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
எவ்வளவு நேரம்
விசாரணை செய்ய வேன்டும்?எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம்(3 Hours), மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.
அன்புடன்,
கார்த்திகேயன்
2009/9/14 Ramanathan C <ramc653@yahoo.com>
Dear Sanmargam Anbarkalu,
I request to members of Vallalargroup,can anyone tell me how to know our soul knowledge or atma gnam,what is the procedure or steps to reach and realize that stage.Our saint Vallalar swami had experienced all souls are one with supersoul and show love to all atma's so how should I reach that kind of state consciousness.
Thanks,
Ram
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment